V2025

கட்டுரை

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள் 

சகோதர சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை தேடும் தமிழ் மொழிச் சமூகங்களின் ஆசை, அபிலாஷை, அவாக்களை அழித்துவிடுமோ என்ற ஆதங்கத்தையும் வடக்கு,கிழக்குச் சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தியே உள்ளது.

NewsLine SampanthanM

இவ்வாறு முஸ்லிம் தலைமைகளை வழிநடத்த ஒரு புறச்சக்தி இல்லாதிருந்த நிலையை, ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னால் எழுந்த நிலவரங்கள் இல்லாமலாக்கின. முஸ்லிம் சமூகத்தின் மீது வீறிட்டெழுந்த பேரினவாதப் பாய்ச்சலுக்குள் நிரபராதிச் சமூகம் பலிக்கடாக்களாவதைத் தடுக்க, கூட்டாக அமைச்சுக்களைத் துறந்த வரலாறும் பாராளுமன்றப் பதவிகளைத் துறந்து அஹிம்சைப் போராட்டம் நடத்திய தமிழர்களின் வரலாறும் போராட்ட குணாம்சத்தின் வெவ்வேறு வடிவங்கள். எமக்கான உரிமைகளைப் போராடியே, பெற வேண்டிய சமூகங்களாகவே நாம் ஆக்கப்பட்டுள்ளோம். பொதுவான போராட்டத்தில் ஒன்றிக்க வேண்டிய எம்மை, அகமுரண்பாடுகள் அந்நியப்படுத்துகிறதே. இந்தக் கவலைகள் நிதான போக்குத் தமிழ், முஸ்லிம் தலைமைகளிடமே இருக்கின்றன. அமைச்சுப்பதவிகளை மீண்டும் பொறுப்பேற்ற முஸ்லிம் எம்பிக்கள், வட-கிழக்குச் சமூகங்களுக் கிடையில் சிலர் ஏற்படுத்தவிருந்த மிகப்பெரிய இடைவௌியை நெருக்கமாக்கியுள்ளனர்.கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்த, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,எம்மைப் பேரினவாதம் ஆட்சி செய்வதைத் தடுத்து நிறுத்தியதுடன் அண்ணன், தம்பி பிரச்சினைக்குள் அயல்வீட்டான் வரக்கூடாது என்ற அரசியல் சித்தாந்தத்தையே கற்றுத்தந்தது. கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயமும் இந்தக் கோணத்தில் நோக்கப்படுகிறதோ தெரியாது.

பிரதேச செயலகத்தின் தரமுயர்வு, சுய ஆள்கைக்கான அடையாளம்தான். இந்த அடையாளத்தை அடையும் முயற்சிகள், சிறுபான்மைச் சமூகங்களின் பொது அடையாளம், சித்தாந்தத்தை சிதைக்கக் கூடாது. எமது அகமுரண்பாடுகள் தமிழ்மொழி மண்ணில் அந்நியரை ராசாவாக்கக் கூடாதென்பதே எமக்குத்தேவை. அமைச்சர் ரிஷாட்பதியுதீன் மீதான அத்தனை குற்றங்களும் பொய்யாக்கப்பட்டு, கோரிக்கைகளில் பல நிறைவேறி, நிரபராதிகளும் விடுதலையான பின்னர், இன்னும் எதற்கு எதிர்ப்பு அரசியல்? 

அறுபது வருடங்களாக அலைக்கழிக்கப்பட்ட, தமிழர் தாயகத்துக்கான அரசியல் தீர்வுகள், 2001 ஒக்டோபர் 21க்குப் பின்னரே மெதுமெதுவாகத் தென்படத் தொடங்கின.தமிழ் கட்சிகளை, வலுக்கட்டாயத்தில் ஒன்றிணைத்த புலிகளின் இராஜதந்திரம் தமிழர்களின் வசந்த வாசலைத் திறந்தது. இந்த நாட்களில் தமிழ் சகோதரர்களின் நம்பிக்கைகள் நட்சத்திரமாக ஔிர்ந்தமை என்னால் உணரப்பட்டது. எனது பிறப்பு முதல் அத்தனையும் வடக்குடன் தொடர்புற்றதால் தமிழர் தரப்பு அபிலாஷைகள் அத்தனையும் எனக்குள் விரவியிருந்தன. பிரபாகரன் தலைமை யேற்கா விடினும் அவரது ஆலோசனையில் பிறந்த கட்சி என்பதால் சிலர் இந்தக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. என்ன செய்வது? ”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற எதிர்பார்ப் புடன் இந்தத் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏற்பதைத் தவிர மிதவாதப்போக்கு தமிழர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. 

இந்தக் கூட்டமைப்பை உருவாக்கிய பிரபாகரன் பலவற்றை எதிர்பார்த்திருந்தார். கடந்தகால ஜனநாயக விரோத செயற்பாடுகளை மறைத்து ஜனநாயக விம்பத்தை ஏற்படுத்தல், தமிழர்களின் அரசியல் பலம், ஆயுத பலத்தை ஒருங்கே இணைத்து ஒரு பக்கம் பேரம் பேசும் சக்தியையும் மற்றொரு புறம் இராணுவ பலத்தையும் நிரூபித்தல். இதுவே தனி இராச்சியத்துக்கான பிரபாகரனின் சித்தாந்தங்களாக இருந்தவை. வடக்கு கிழக்கு நிலப்பரப்பில் ஒரு பாரிய கட்டமைப்பூடாக, அரசுக்கு நிகரான இயந்திரத்தை இயக்கும் ஆற்றல் உள்ளதாகக் காட்டி விட்டால் தமிழர்களின் அபிலாஷைகளை சர்வதேசமும் அங்கீகரிக்கலாம். இந்தப்பாதையே ஆகக் குறைந்தது சமஷ்டித் தீர்வுக்காவது வழிகாட்டும். இந்தப் புரட்சிப் பாதைகளில் இடைஞ்சல் ஏற்படாதிருந்தால் இன்று சமஷ்டிக் கோரிக்கைகள் தமிழர்களின் வசந்த வாசலைத் தட்டியுமிருக்கும்.சிங்கள இராணுவத்தின் போரிடும் ஆற்றலும் மஹிந்தவின் ஆளுமையும் தமிழர் தரப்பு இராணுவப்பலத்தை சிதறடித்ததால், சமஷ்டிப் பாதையில் சிறு தடங்கலையும் ஏற்படுத்திற்று. இதைத் தகர்த்தெறிய அரசியல் பலம் நிலைக்க வேண்டும். துரதிஷ்டமாக இந்தப்பலமும் புலிகள் இல்லாத நிலையில் நிலைக்குமா? என்ற ஐயமே தமிழர் தரப்பு அரசியல் களத்தில் வேரோடி வருகின்றன.

அறுபது வருட அபிலாஷைகளுக்கு குறுக்காக முஸ்லிம்களும் களமிறங்கியதான மனக்கீறல்களும் தமிழ் சகோதரர்களுக்கு உள்ளதுதான்.இப்போதைக்கு இதுவல்ல விவாதம். தமிழர் தரப்பு அதிகார மோகங்கள், மோதல்கள், குடுமிச் சண்டைகள், 2001 இல் உருவாக்கப்பட்ட தமிழரின் கூட்டுப் பலத்தை சிதைக்கத்தலைப் பட்டுள்ளதே? எதிர்கொள்ள நேர்ந்த அழிவுகளுக்கு எதையாவது பெறுவோம் என்ற எதிர்பார்ப்புடனிருந்த, தமிழர்களுக்கு இது மிகப் பெரிய வேதனையாகவன்றி வேறெதுவாகவும் இருக்காது.

எப்படி முயன்றாலும் வட மாகாண சபையைக் கைப்பற்ற முடியாது என்பதையறிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஒரு அடையாளத்துக்காகவே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை களமிறக்கினார்.சகலரும் எதிர்பார்த்தது போல, வடமாகாண சபையை தமிழர்களின் கூட்டுப்பலமே கைப்பற்றியது. 

இதுவல்ல இக்கட்டுரையின் கரு. இந்தத் தமிழ் தேசியத்தின் வெற்றிக்கு தனி ஒரு மனிதரின் திறமை அளவுகோலாகப் பயன்படுத்தப்படுவது ஏன்? மட்டுமல்ல இந்தத் தவறான அளவு கோலே தமிழர்களின் கூட்டுப்பலத்தை தகர்ப்பதற்கும் தயாராக்கப்படுகிறதே? இந்த இடத்திலிருந்தே தமிழ் தலைமைகள் அவசரமாகச் செயற்பட வேண்டும். உண்மையில் தமிழ் தேசியத்தின் மொத்த எழுச்சி, புலிகளின் ஆயுதப் பலம் வீழ்த்தப் பட்டதற்கான பழிவாங்கலாகவே பார்க்கப்பட வேண்டும்.ஒட்டுமொத்த எழுச்சியை தனிமனிதரின் ஆளுமைக்குள் கணக்கிட முடியாது.

இந்தத் தப்புக்கணக்கின் நியதிகளிலிருந்து தயாராகும் தமிழர்களுக்கான மாற்றுத் தலைமை, சிங்கள கடும்போக்கிற்கு மறைமுகமாக உதவுமா? அல்லது பிரபாகரன் உருவாக்கிய தமிழ் கூட்டுப் பலத்தை சிதைக்குமா? இந்தப் பதில்களை தேர்தல் களங்களிடமே விட்டு விடுவோம்.

சகோதர மொழிச் சமூகத்தின் தவறுகளை பவ்வியமாக எடுத்துக்கூறி நூதன நடைமுறைகளூடாக வட, கிழக்கு, மொழிச் சமூகங்களை ஒன்றிணைப்பதே தேரவாதம், பௌத்த கடும்போக்குவாதங்களுக்கு சிறுபான்மையினர் வழங்கும் பதிலடியாகும். இந்நிலையில் புதிய தலைமையாக உருவெடுக்க எத்தனிக்கும், தலைமையொன்று முஸ்லிம் விரோதப்போக்கை கையாள்வது கவலையே.

தமிழ் தேசியத்தின் முகவரிக்காக, வடக்கு கிழக்கின் பூர்வீகத்திற்கு வௌியிலிருந்து வேட்பாளரைத் தெரிவு செய்த, தவறின் விளைவுகள் தனித் தமிழ் பலத்தை மட்டுமல்ல, சிறுபான்மைக் கூட்டுப் பலத்தையும் விட்டபாடில்லை. முரண்பாடுகள் மலையளவு இருந்த போதிலும் வடக்கு, கிழக்கு சமூகங்கள் மனந்திறந்து பேசுவதுதான் பொது எதிரியைப் பலவீனப்படுத்தும். இந்தப்பொது உணர்வை எவராலும் பிரிக்க முடியாதுள்ளதே உண்மை. ஆனால் புதிய தமிழ் தலைமையொன்று செவியேறல் கதைகளையே நாக்கூசாமல் கூறி, பின்னர் நழுவிச் செல்வது பொதுச் சமூகங்களை வழி நடத்துவதிலுள்ள முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. கிழக்கில் முந்நூறு தமிழ் கிராமங்கள் பலவந்தமாக முஸ்லிம் ஊர்களுக்குள் உள்ளீர்க் கப்பட்டதாக, இத்தலைமை எப்படிக் கூற முடியும்? 

செவியேறல் கதைகளை இப்படி அப்பட்டமாகக் கூறுதாக இருந்தால் திட்டமிட்டுக் கூறியிருக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் தெரியாமல் புலம்பியிருக்க வேண்டும்.

- சுஐப் எம். காசிம்

Comment (0) Hits: 9

போர் வியூகங்களாக உருவாகி வரும் ட்ரோன்கள்

உலகில் காலத்திற்கு காலம் ஒவ்வொரு போர் யுக்திகள் தந்திரோபாயங்கள்
அறிமுகம் செய்யப்படுவது வழமையானது அந்த வகையில் நவீன தொழில்நுட்ப
வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக ட்ரோன் போர் பொறிமுறைமை
அறிமுகமாகியுள்ளது.


அண்மையில் வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கலோஸ் மடுரோவை ட்ரோன் தாக்குதல்
மூலம் படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன்,
தெய்வாதீனமாக மடுரோவிற்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
அதி முக்கிய பிரபுக்கள் பாதுகாப்பு, அணுக் கட்டமைப்புக்கள் உள்ளிட்ட
பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் மீது நேரடியாக தாக்கத்தைச் செலுத்தக்
கூடிய வகையில் இந்த ட்ரோன்கள் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளன.


நீங்கள் பொதுவாக திருமண நிகழ்வுகளின்; போத காணொளிகளை பதிவு
செய்வதற்காவும், வேறும் சில கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும் ட்ரோன்கள்
பயன்படுத்தப்படுவதனை பார்த்திருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.


எனினும், ஓர் போர்க் உத்தியாக, அதி முக்கிய பிரபுக்களை படுகொலை செய்யும்
நூதன கருவியாக ட்ரோன்களை நீங்கள் பார்த்ததுண்டா?
உலகின் மிக மோசமான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஐ.எஸ். தீவிரவாத
இயக்கமானது ட்ரோன்கள் அல்லது ஆளில்லா சிறிய விமானங்கள்
பயன்படுத்திவருகின்றது.


அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் சென்னியின் பயங்கரவாத
எதிர்ப்பு ஆலோசகர் லெப்டினன் மைக்கல் வால்ட்ஸ், இந்த ட்ரோன்களினால்
ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு
விளக்கியுள்ளார்.


எதிர்வரும் காலங்களில் ட்ரோன்கள் மூலமான தாக்குதல்கள் பொதுவான ஒன்றாக
மாற்றமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மிகவும் இலகுவாக கொள்வனவு செய்து சுலபமாக பயன்படுத்தக் கூடிய இந்த
ட்ரோன்களின் மூலம் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களை தடுப்பது, அல்லது
தவிர்ப்பது மிகவும் சவால் மிக்க ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.


ட்ரோன்கள் பறப்பதனை தடுத்து நிறுத்துவதன் மூலம் அதாவது பறப்பதனை ஜாம்
செய்வதன் இந்த தாக்குதலை தடுக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு
செய்யப்பட்டு வருகின்றது.


ட்ரோன்கள் மூலமான தாக்குதல்களை தடுப்பது குறித்து பாதுகாப்பு நிறுவனங்கள்
ஆழமான ஆய்வுகளையும் பரீட்சார்த்த முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
ட்ரோன்களை ராடார்களினால் கண்டு பிடிக்க முடியாது ஏனெனில் அவை அளவில்
மிகச் சிறியவை என்பதனால் ராடார் கட்டமைப்பிற்கு தென்படாது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.


விளையாட்டு அரங்கங்கங்கள், திறந்த வெளிகள் போன்றவற்றில் நடைபெறும்
நிகழ்வுகளின் போது இந்த ட்ரோன் தாக்குதல்களை மிகவும் சுலபமாக மேற்கொள்ள
முடியும் என தெரிவித்துள்ளார்.


ட்ரோன்கள் மீது மற்றுமொரு ட்ரோனைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தப்பட
முடியும் எனவும், துப்பாக்கியினால் சுட்டு வீழ்த்த முடியும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.


எனினும் இவை அனைத்தும் பரீட்;சார்த்த முயற்சிகளாகவே காணப்படுகின்றன என
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறிப்பாக ஜாமர்களைக் கொண்டு ட்ரோன்களை தடை செய்தால் அது விமானப் பயணக்
கட்டமைப்புக்களையும் பாதிக்கும் எனவும் இதனால் ட்ரோன் தாக்குதல்
நுட்பத்தை எதிர்நோக்குவது அல்லது சவாலை முறியடிப்பது மிகவும் சிரமமான
ஒன்றாகும் என லெப்டினன் கேணல் மைக்கல் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் காலங்களில் அனைத்து விதமான அணுப் பாதுகாப்பு
கட்டமைப்புக்களும், அதி முக்கிய பிரபுக்களும் தங்களது பாதுகாப்பு
திட்டத்தில் ட்ரோன் தாக்குதல் தடுப்பு முறைமையை உள்ளடக்கிக்கொள்வர்
என்பது தின்னம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 31

கனடாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் சீனா

சீனாவின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனமான ஹ_வாவே நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்துள்ள வழக்கிற்கு கனடா உதவுவது பாதக எதிர் விளைவுகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ள ஹ_வாவே நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரியை அமெரிக்காவின் கோரிக்கைக்கு அமைய கனடா அண்மையில் கைது செய்திருந்தது.

அமெரிக்காவிற்கு ஆதரவளிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை கனடா புரிந்து கொண்டு செயற்படும் என நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இழைத்த தவறுகளை துரித கதியில் திருத்திக் கொண்டு ஏற்படப் போகும் பாரிய சேதத்தை தவிர்த்துக் கொள்வதற்கு கனடாவிற்கு இன்னமும் சந்தர்ப்பம் உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 21

பதவியை ராஜினாமா செய்யும் எந்தத் திட்டமும் கிடையாது

ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்யும் எந்தத் திட்டங்களும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பதவியை ராஜினாமா செய்வீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்தின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் பதவியை ராஜினாமா செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று தாமும் பதவி விலகப் போவதில்லை எனவும், பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களும் தம்மை பதவி விலகுமாறு கோரியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comment (0) Hits: 37

கறுப்புப் பெட்டிகளைப் போன்று ரயிலிலும் விசேட கருவி

ரயில் என்ஜின்களில் செல்லிடப்பேசி உரையாடல்களையும் குறுஞ்சசெய்திகளையும் பதிவு செய்து அதனை மீளாய்வு செய்யக்கூடிய திட்டமொன்று அறிமுகம் செய்வது குறித்து கனேடிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

பாதுகாப்பு தேவைகளுக்காக இந்த பதிவுகளை பயன்படுத்த முடியும் எனவும் இதற்கான கருவிகள் பொருத்தப்பட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் காணப்படும் கறுப்புப் பெட்டிகள் போன்று ரயில்களிலும் இந்த விசேட கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

பணியாளர்களின் அந்தரங்கத்தை பாதுகாப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக லிபரல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் கருவிகள் பொருத்துவது குறித்த சட்டம் தேர்தல் நிறைவடைய முன்னதாக அமுல்படுத்தப்படக்கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

Comment (0) Hits: 22

தாக்குதல் குறித்து ராஜபக்சக்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதற்கு மற்றுமொரு சாட்சி


தற்கொலைத் தாக்குதல் குறித்து ராஜபக்சக்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்பதற்கு மற்றுமொரு சாட்சி கிடைக்கப்பெற்றுள்ளது.

Comment (0) Hits: 47

ஆரோக்கிய உணவுப் பழக்கம் ஆபத்து என்பது உங்களுக்குத் தெரியுமா

மிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழங்கங்களினால் உளவியல் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என யோர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மிகவும் ஆரோக்கியமான உணவு பழக்க வழங்கங்களில் தீவிர நாட்டம் கொண்ட மனோ நிலையானது உளவியல் தாக்கத்திற்கான ஓர் அறிகுறியாகவும் நோக்கப்படும் என யோர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதீதமான ஆரோக்கிய உணவு பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் ஒhத்தோரெக்ஸியா என்னும் உளவியல் பாதிப்பினால் பீடிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என யோர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபர் மில்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், உணவுப் பழக்க வழக்கங்களின் ஊடாகவும் உளவியல் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில வகை கொழுப்புகள், சீனி, செயற்கை சுவையூட்டிகள், உணவு பாதுகாப்பு பொருட்கள் போன்ற சில தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகளை முற்று முழுதாக தவிர்ப்பதன் காரணமாக சில வேளைகளில் உடலுக்கு தேவையான சில அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களை இழக்க நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 46

உங்கள் தொலைக்காட்சி முற்றுமுழுதான இனவாத ஊடகம்!

அமைச்சரே, இப்படியான ஒரு சூழ்நிலையில் இப்படியான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெட்கப்படுகிறீர்களா?”

என்ற கேள்வியோடு ஆரம்பமாகிறது நேற்றைய ஹிரு டீவியின் ‘சலகுன’ நிகழ்ச்சி.

‘நான் ஏன் வெட்கப்பட வேண்டும். ஆனால் என் சமூகம் சார்பாக நான் வேதனைப்படுகிறேன்’ என்று பதிலளித்து துவங்குகிறார் அமைச்சர் ரிசாட் பதியூதீன்.

பௌத்த மதத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நிக்காய பீடங்களை போன்றுதான் எங்கள் சமூகத்திலும் ஒவ்வொரு ஜமாஆத் பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் அடிப்படை வாதங்களை போதிக்கவில்லை. ஸஹ்ரான் என்ற யாரோ ஒருவர் செய்த நாசகார வேலைக்காக ஜமாஅத் வாரியாக முழு முஸ்லிம்களையும் முடிச்சுப்போட முயலக்கூடாது என்று கூறினார் அமைச்சர் ரிசாட் பதியூதீன்!

வில்பத்து குறித்த கேள்விகளுக்குள் நகர்ந்த நிகழ்ச்சி பின்னர், அமைச்சரின் சொந்த கட்டுமான கம்பனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த கேள்விகளுக்கு நகர்ந்த போது அமைச்சர் ஆவேசமாக பதிலளிக்க துவங்கினார்.

‘சமகால விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக என்னை அழைத்துவிட்டு எனது குடும்பம் சார்பாகவும் எனது தனிப்பட்ட விடயங்களையும் ஏன் அலச முற்படுகிறீர்கள்?

ஒரு பொறுப்புள்ள ஊடகமாக அனைத்து சமயங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளை செய்ய வேண்டிய நீங்கள்தானா இங்கு என்னை அழைத்து வைத்துக்கொண்டு நானும் என் சார்பு சமூகமும் அடிப்படை வாதத்திற்கு துணைபோகிறோம் என்று வாதிட வருகிறீர்கள்?!

நடைபெற்று முடிந்த சாய்ந்தமருது சம்பவத்தின் போது சூத்திரதாரிகளை பிடிப்பதற்கு பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கி, ஒத்தாசை புரிந்தவர்கள் அந்தப் பிரதேச பள்ளிவாசல் நிர்வாகமும், முஸ்லிம்களும் தான். என்ற செய்தியை கூட உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் முஸ்லிம்கள் அடிப்படை வாதத்தை ஆதரிக்கிறார்கள் என்று இன்று விவாதிக்க வருகிறீர்கள்.

இயலுமென்றால் அப்படி நல்லிணக்கத்தை நேசிக்கும் படியாக நீங்கள் ஒளிபரப்பிய செய்தியொன்றை காட்டுங்கள். உங்கள் தொலைக்காட்சி முற்றுமுழுதான இனவாத ஊடகம். இனவாதத்தை வளர்க்கும் ஊடகம். யாருக்காகவோ கொந்தராத்து ஊடக பணி செய்கிறார்கள்.

எனது குப்பைகளை அலசுவதுதான் உங்கள் பணியாயிருக்கிறது. அதைவிடுத்துவிட்டு பொறுப்புள்ள ஊடகமாய் இனி பணி செய்யப்பாருங்கள்’ என்றார் அமைச்சர் ரிசாட் பதியூதீன்.

Comment (0) Hits: 45

அமெரிக்காவை மிரட்டும் huawei

அமெரிக்க அரசாங்கம் தமது நிறுவனத்தை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது என சீனாவின் huawei நிறுவனத்தின் ஸ்தாபகர் ரென் ஸிங்பீ தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனத்தின் செல்லலிடப்பேசிகள் நிச்சயமாக 5ஜீ தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொள்ளும் எனவும் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

huawei நிறுவனத்தின் புதிய செல்லிடப்பேசிகள் கூகுள் நிறுவனத்தின் அன்ட்ராய்ட் இயக்கு தளத்தின் சில வசதிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தடைகள், கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளக்கூடிய வகையிலான திட்டங்கள் தமது நிறுவனத்திடம் காணப்படுவதாக ஹ_வாவே நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸிங்பீ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 25

தீவிரவாதிகளை வலுவிழக்கச் செய்துள்ளோம் - பொலிஸார்

கடந்த உயிர்த்த ஞாயிறு தினமன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comment (0) Hits: 38

கனடாவில் ஏதிலிக் கோரிக்கையாளர் குறித்த கொள்கைகளில் மாற்றம்?

ஏதிலிக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கைகளில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதிலிக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக பரிசீலனை செய்யப்படாது கிடப்பில் போடப்பட்டிருப்பதனை தடுக்கும் நோக்கில் முன்னாள் பிரதமர் ஸ்ரீவன் ஹார்பரின் அரசாங்கம் ஏதிலிக் கோரிக்கையாளர்களை நாடுகளின் அடிப்படையில் வகையீடு செய்திருந்தது.

ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நாடுகளின் அடி;பபடையில் வகையீடு செய்யும் கொள்கையை ரத்து செய்வதாக கனடாவின் தற்போதைய குடிரவு அமைச்சர் அஹமட் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஏதிலிக் கோரிக்கையாளர் சலுகைகளை துஸ்பிரயோகம் செய்வோரை தடுக்கும் நோக்கில் முன்னாள் பிரதமர் ஹார்பரின் அரசாங்கம் இந்த வகையீட்டை அறிமுகம் செய்திருந்தது.

எனினும், தற்போதைய அரசாங்கம் இந்த வகையீட்டுத் திட்டத்தை ரத்து செய்வதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வகையீட்டு முறையில் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்படுவதில்லை என அமைச்சர் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 25

21/4 தாக்குதல் : இதுவொரு சர்வதேச பிரச்சினை

சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 26

மாசடைந்த காற்றை சுவாசித்தல் இதனை ஆபத்தா? எச்சரிக்கை

வளி மாசடைதல் மூலம் உடலின் அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படும் என அண்மைய ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

வளி மாசதடைதல் காரணமாக தலை முதல் பாதம் வரையில் உபாதைகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஞாபக மறதி, இருதய மற்றும் சுவாசப் பை கோளாறு, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிப்புக்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசடைதல் மூலம் உடலின் அனைத்து பாகங்களும் குறிப்பாக அனைத்து கலன்களையும் சேதப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் 90 வீதமான சனத்தொகையினர் மாசடைந்த வளியையே சுவாசிக்க நேரிட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

புகைப்பழக்கத்தை உடையவர்களுக்கு ஏற்படக்கூடிய மரணங்களை விடவும் வளிமாசடைவதனால் ஏற்படக்கூடிய மரணங்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

Comment (0) Hits: 29