மிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழங்கங்களினால் உளவியல் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என யோர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மிகவும் ஆரோக்கியமான உணவு பழக்க வழங்கங்களில் தீவிர நாட்டம் கொண்ட மனோ நிலையானது உளவியல் தாக்கத்திற்கான ஓர் அறிகுறியாகவும் நோக்கப்படும் என யோர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதீதமான ஆரோக்கிய உணவு பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் ஒhத்தோரெக்ஸியா என்னும் உளவியல் பாதிப்பினால் பீடிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என யோர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபர் மில்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்வதில் எவ்வித தவறும் கிடையாது எனவும் அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், உணவுப் பழக்க வழக்கங்களின் ஊடாகவும் உளவியல் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில வகை கொழுப்புகள், சீனி, செயற்கை சுவையூட்டிகள், உணவு பாதுகாப்பு பொருட்கள் போன்ற சில தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகளை முற்று முழுதாக தவிர்ப்பதன் காரணமாக சில வேளைகளில் உடலுக்கு தேவையான சில அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களை இழக்க நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.