V2025

தமிழ் தொலைக்காட்சிகளில் UTV இம்முறை அதிக விருதுகளைத் தனதாக்கியது

2019 ஆம் ஆண்டுக்கான தொலைக்காட்சி அரச விருது விழாவில் UTV நான்கு விருதுகளை தன்வசப்படுத்தியது. இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் இம்முறை அதிக விருதுகளை வென்றெடுத்த பெருமையை UTV தனதாக்கியுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான தொலைக்காட்சி அரச விருது விழா கொழும்பு தாமரைத் தடாகத்தில் 21.11.2019 அன்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.

2019 ஆம் ஆண்டு அரச கலை இலக்கிய விருது விழாவில் UTV மூன்று விருதுகளையும் ஒரு விசேட ஜூரி விருதையும் பெற்றுக்கொண்டது.

சிறந்த ஆவண நிகழ்ச்சிக்கான ஜூரி விருது (மக்கள் நம் பக்கம் நிகழ்ச்சி), சிறந்த சிறுவர் நிகழ்ச்சி (சிறப்பு பண்டிகை சிறுவர் நிகழ்ச்சி), ஆகியவற்றுக்காக நிகழ்ச்சி தயாரிப்பாளர் எம்.ஜே.பிஷ்ரீன் மொஹமட்டிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த ஆவண நிகழ்ச்சிக்கான விருது (Sports.lk நிகழ்ச்சி), நிகழ்ச்சி முன்னோட்டத்திற்கான விருது (மக்கள் நம் பக்கம்) ஆகியவற்றுக்காக தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான மஹ்சூக் அப்துல் ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

UTV 1

இதனைத் தவிர, UTV இன் நான்கு நிகழ்ச்சிகள் இறுதிச் சுற்றுக்கு நடுவர்களினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

தயாரிப்பாளர் அஜித்குமாரின் இளையராஜா இசைநிகழ்ச்சி, தயாரிப்பாளர் ரினோசாவின் ஒரு துளி நிகழ்ச்சி, செம்மையாக்குனர் பிரகதீஷ் ராஜேந்திரம், பூம் பூம் இஸ்போட்ஸ் (Boom BoomSports) நிகழ்ச்சி முன்னோட்டம் (trailer), தயாரிப்பாளர் அப்துல் ரஹ்மானின் பூம் பூம் இஸ்போட்ஸ் ((Boom Boom Sports) நிகழ்ச்சி, ஆகிய நிகழ்ச்சிகளுக்கு இறுதிச் சுற்றுக்கான பரிந்துரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கடந்த வருடம் ‘நானும் ஒரு தொழிலாளி நிகழ்ச்சி''க்காக விசேட ஜுரி விருதை பிஷ்ரீன் மொஹமட் பெற்றிருந்தார்.

UTV தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஜூரி விருதுகளைப் பெற்று இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளின் வரிசையில் சாதனைபடைத்துள்ளது.

UTV 4UTV 4UTV 4

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found