V2025

பிந்திய செய்தி

ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தினங்களில் வாக்கெடுப்பு நிலையங்களை சென்று கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஆ​ணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் சுமார் 14 000 வாக்கெடுப்பு நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலின்போது குறித்த அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களையும் பயன்படுத்துவது தொடர்பில், கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 361

கொழும்பில் ஒருவரைக் கடத்தி கப்பம் கோரிய முஸ்லிம் இளைஞர் இருவர் கைது

நபர் ஒருவரை கடத்திச்சென்று கப்பம் கோரிய குற்றச்சாட்டில் இருவரை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி கொட்டாஞ்சேனை போலிஸ் பிரிவில் வைத்து யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் வண்டியின் சாரதியை கடத்திச்ச்சென்று கப்பம் கோரப்பட்ட சம்பவத்தை அடுத்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடவடிக்கைகளில் இறங்கினர். இதனை அடுத்து நேற்று மாலை 5 மணியளவில் இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கடத்தலுக்கு உபயோகிக்கப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் மொபைல் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது . * முகம்மது நுஸ்ரான் ஜலால்தீன் (32 வயது ) புதிய கொலன்னாவையை சேர்ந்த ஒருவரையும் , முகம்மத் அபூபக்கர் ரகுமான் ( 31 வயது ) கொழும்பு 12 ஐ சேர்ந்தவர்கள் என போலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இருவரையும் இன்று புதுக்கடை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர் படுத்த உள்ளதாக போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Comment (0) Hits: 543

சிப்பாய் மீது பிழை இல்லை என்கிறது இராணுவம்

காலி அக்மீமன பிரதேசத்தில் பதற்றத்துடன் பாடசாலைக்குள் நுழைந்த மாணவியொருவரின் தந்தை மீது காவலுக்கு நின்ற இராணுவச் சிப்பாய் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்தார்.

மகள் சுகயீனமடைந்ததாக கிடைத்த தகவலை அடுத்தே குறித்த நபர் பதற்றத்துடன் பாடசாலைக்குள் நுழைய முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பதற்றத்துடன், பலவந்தமாக பாடசாலைக்குள் நுழைய முயற்சித்த நபர் மீது இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பல தரப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவச் சிப்பாய் மீது பிழை இல்லை இலங்கை இராணுவும் தெரிவித்துள்ளது,

Comment (0) Hits: 211

தங்கொட்டுவ சந்தை அனைவருக்கும் திறக்கப்பட வேண்டும் : நீதிமன்றம்

தங்கொட்டுவ வாராந்த சந்தை அனைத்து சமூகத்திற்கும் திறக்கப்பட வேண்டும் என மாரவில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கொட்டுவ வாராந்த சந்தைகளில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தற்காலிகமாக தடைவிதிக்கக் கூறி, தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் எழுத்துமூலம் கோரியுள்ள விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து முன்னர் வெளியான செய்தி
வாரச் சந்தைக்கு வரவேண்டாம் : முஸ்லிம் வியாபாரிகளைத் தடுப்பது யார்?

 

Comment (0) Hits: 219

வெளிநாடு போன்று தனிநபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

''சஹ்ரான் மற்றும் ரில்வான் ஆகியோரின் பின்னர் பயங்கரவாத அமைப்பிற்குத் தலைமைத்துவத்தை எடுக்கவிருந்த நெளவ்பர் என்ற நபரை கைதுசெய்துவிட்டோம். இனிமேல் இவர்களால் அணியாக செயற்பட எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் மத ரீதியில் முன்னெடுக்கும் இந்த பயங்கரவாதம் தனி நபராலும் இடம்பெறலாம்'' என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கும் விவாதத்தில் பதிலுரை ஆற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் 9 பெண்கள் உள்ளிட்ட 105 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை கூற முடியும்.

அதேபோல் இந்த தாக்குதல் குறித்து எமக்கு சர்வதேச விசாரணைக் குழுக்கள் உதவி செய்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் சஹ்ரான் அணியை நாம் முழுமையாக பிடித்துள்ளோம். சஹ்ரானின் பின்னர் அவரது தம்பி ரில்வான் தலைமைத்துவம் எடுக்க இருந்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார். அவரின் பின்னர் நெளவ்பர் என்ற நபர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் அடுத்த தலைமையை கையில் எடுக்க இருந்தவர்.

அதேபோல் குண்டு தயாரிக்க இருந்த நபர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஏன் அவசரகால சட்டம் என்ற கேள்வி எழும். ஆனால் விசாரணைகளை நடத்த வேண்டும். இன்றும் சஹ்ரானின் சகாக்கள் கைதாகி வருகின்றனர். ஒரு சிறு உதவி செய்த நபர்களையும் நாம் கைது செய்கின்றோம்.

ஆகவே இந்த தேடுதல்கள் நடத்த மேலும் ஒரு மாதகால அவகாசம் வேண்டும். அதற்காகவே சட்டத்தை நீடித்துள்ளோம். இன்னும் ஒரு மாத காலத்தில் அவசரகால சட்டத்தை நீக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.

எவ்வாறு இருப்பினும் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆகவே ஒரு மாதகாலமேனும் நீடிக்க வேண்டும் என நினைகின்றோம்.

இராணுவ தளபதி கூறியது சரி இந்த தாக்குதல் எப்போதும் எங்கேயும் நடக்கலாம். இது மதம் சார்ந்த பயங்கரவாதம். ஒரு தனி நபர் எந்த வகையிலும் எதை ஆயுதமாக பயன்படுத்தியும் தாக்குதலை நடத்த முடியும்.

ஆகவே இனி எப்போதும் இந்த தாக்குதல் மாதிரி ஒன்று நடக்காது என கூற முடியாது. ஆனால் சஹ்ரான் போன்று ஒரு குழுவால் இதனை இன்னொருமுறை செய்ய முடியாது என்று உறுதியாக கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 214

வாரச் சந்தைக்கு வரவேண்டாம் : முஸ்லிம் வியாபாரிகளைத் தடுப்பது யார்?

தங்கொட்டுவ வாராந்த சந்தைகளில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்ய தற்காலிகமாக தடைவிதிக்கக் கூறி, தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் எழுத்துமூலம் கோரியுள்ள விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாரவில நீதிமன்றத்தினால் வென்னப்புவ பிரதேச சபையின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபாரம் செய்துவரும் முஸ்லிம்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனக் கோரி வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் கே.வீ.சுசந்த பெரேரா தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கடந்த ஜூன் 24ஆம் திகதி எழுத்துமூலம் கோரியுள்ளார்.

கே.வி.சுசந்த பெரேரா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டுக் கட்சி) உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wennappuwa Letter

இதனையடுத்து தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைப் பெற்று, இதுகுறித்து நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறுவதற்குத் தீர்மானித்ததாக பொலிசார் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விசாரிப்பதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வென்னப்புவ பிரதேச சபைத் தலைவருக்கு மாரவில நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

21/4 தாக்குதலின் பின்னர் தங்கொட்டுவ வாராந்த சந்தையின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் கே.வி. சுசந்த பெரேரா கூறிவருகிறார். இதனால் முஸ்லிம் வியாபாரிகள் அங்கு வருவது குறித்து பிரதேசத்தின் மதத் தலைவர்கள், சக வியாபாரிகள் ஆகியோர் கடுமையான எதிர்ப்பை வெளிவிட்டு வந்ததாக இதுகுறித்து ஆராய்ந்த போது அறியக்கிடைத்தது.

ஏப்ரல் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் வியாபாரிகள் தங்கொட்டுவ வாராந்த சந்தைக்கு வருவதைத் தவிர்த்து வந்த நிலையில், பொலிசார் அவர்களை மீண்டும் சந்தைக்கு அழைத்து வருவதில் பங்களிப்புச் செய்திருந்தனர்.

ஏப்ரல் தாக்குதலின் பின்னர் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபாரம் செய்வதில் முஸ்லிம் வியாபாரிகள் சிக்கல்களை எதிர்கொள்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபாரத்தில் முஸ்லிம்கள் ஈடுபடுவதைத் தற்காலிகமாக தவிர்க்கச் செய்யக் கோரி எழுத்துமூலம் வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் கோரியுள்ளார்.

''தற்காலிகத் தீர்மானமாகவே இதனை எடுத்தேன். வரும் 10ஆம் திகத அனைத்து மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை அழைத்து இதுகுறித்து பேச்சு நடத்தவுள்ளோம். இதுகுறித்து பொதுக்குழுக் கூட்டத்திலும் பேசவுள்ளோம். இதில் நிலையான தீர்மானமொன்றை எடுக்க முடியும். இன மோதல் ஒன்றைத் தவிர்ப்பதற்காகவே இதனைச் செய்தோம். எனக்கு கிடைத்த முறைப்பாடுகளை ஊடகங்களுக்கு வழங்க முடியும்'' என்று பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சிரோன் பெர்னாண்டோ இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது,

''பல வருடங்களாக இந்த வியாபாரிகளில் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர். புளி, கொரக்கா (காட்டுப்புளி) உள்ளிட்ட பலசரக்குப் பொருட்களையே அவர்கள் விற்று வருகின்றனர். இவர்கள் குறித்து பிரதேச மக்களுக்கு எவ்வித சிக்கல்களும் இல்லை. ஒரு சிலரே இந்தக் குழப்பத்திற்குப் பின்னணியில் இருக்கின்றனர். இவர்களில் பிரதேச சபைத் தலைவரும் இருக்கிறார்.'' என்று குறிப்பிட்டார்.

அடுத்த பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், பிரதேச சபைத் தலைவரின் செயற்பாடுகளை கட்சி என்ற ரீதியில் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

''ஏப்ரல் தாக்குதலின் பின்னர் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஒரு சில குழுவினர் முஸ்லிம் வியாபாரிகள் மீது தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். ஆரம்பம் முதலே இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இவ்வாறான செயற்பாடுகள் தேசிய ஒற்றுமைக்கு பங்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலை மோசமடைவதைத் தடுப்பது எமது அனைவரினதும் பொறுப்பு. இதுகுறித்து பொலிசார் துரிதமாக பணியாற்றுவது குறித்து திருப்தியடைகிறோம். இதில் மதத் தலைவர்களும் கரிசனையுடன் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் வியாபாரிகள் சிலரிடையே ஏற்பட்ட முறுகலைத் தவிர்ப்பதற்காக பிரதேச சபைத் தலைவர் எடுத்த தற்காலிக நடவடிக்கை இது என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

''இந்த வியாபாரிகள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சந்தைக்குள் அனுமதிக்க வேண்டாம் என நாம் கூறவில்லை. எனினும், இவர்களை அனுமதிக்க வேண்டாம் என ஏராளமான வியாபாரிகள் கோருகின்றனர்.'' என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

Susantha

''இது மொட்டுக் கட்சியின் தீர்மானம் அல்ல''

வென்னப்புவ பிரதேச சபையின் அதிகாரம் பொதுஜன பெரமுனவிடம் இருக்கிறது.

கூட்டு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட சிரேஸ்ட உறுப்பினரான பிரரியங்க ஜயரத்ன எம்.பி. இதுகுறித்து தெரிவிக்கும்போது, இந்த நடவடிக்கை பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானம் அல்ல எனத் தெரிவித்தார்.

வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரின் தீர்மானம் மனித உரிமை மீறல் என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இதுகுறித்து கட்சியின் மேலிடத்திற்கு அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கட்சித் தலைமை மற்றும் வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் ஆகியோருடன் பேச்சு நடத்தி, பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தை விலகிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் பேசுபொருளானது

இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரின் வேண்டுகோள் குறித்து நிதியமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பதிவொன்றை இட்டிருந்தார்.

''வென்னப்புவ இனவெறி : வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை. ராஜபக்ச தரப்பு உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து வெட்கம். என்று குறிப்பிட்டிருந்தார்.

 இனவாத ரீதியான செயற்பாடுகளுக்கும் பேச்சுக்களுக்கும் எதிராக நிதியமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். இதனால் பௌத்த தேரர்கள், சிங்கள இனவாதிகள் ஆகியோரினால் அரசியல் ரீதயாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருவதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

Comment (0) Hits: 494

இனக்குரோதத்தை தூண்டும் செய்தித் தாள்

திவயின ஊடகம் பல்வேறு போலிச் செய்திகளை வெளியிட்டு மக்களை திசை திருப்புவதனை பிரதான இலக்காக் கொண்டு செயற்பட்டு வருகின்றது எனக் கூறின் அது பிழையாகாது.

அந்த வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்று நோயாளர் வைத்தியசாலை ஆகியனவற்றுக்கு அருகாமையில் பூரண இலவசமாக உணவு வழங்கும் நிலையங்கள் இயங்கி வந்தன.

நோயாளர்களை பார்வையிட வருவோரின் நலன் கருதி இவ்வாறு நீண்ட காலமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

எக்ஸ்போ லங்கா என்னும் நிறுவனத்தினால் இவ்வாறு நான்கு ஆண்டுகளாக உணவு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்போ லங்கா நிறுவனம் இலங்கையின் முதனிலை முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதுடன் இந்த நிறுவனம் மீது தற்பொழுது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் இலவசமாக உணவு வழங்கும் முஸ்லிம் அமைப்புக்கள் பற்றி கண்டறியுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே அரசாங்கத்திடம் கோரியிருந்தார் என திவயின கடந்த 22ம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த உணவுகளில் கருத்தடை மருந்துகள் கலக்கப்படுவதாக தெரிவித்தே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

Comment (0) Hits: 245

மைத்திரி தனக்கு உண்டான நன்மதிப்பை இழந்துவிட்டார்


பலுகிஸ்தான் மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளே ஜனாதிபதி தை;திரியை தற்பொழுது அழைப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்கள் அருகாமையில் வந்து வழங்கிய கௌரவத்தை ஜனாதிபதியினால் தக்க வைத்துக் கொள்ளத் தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் சிறிய நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களே இலங்கைக்கு வந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

32 மனைவியர் உடைய அரச தலைவர் ஒருவர் மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து ஈட்டப்பட்ட சுதந்திரம் துண்டு துண்டாக உடைவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Comment (0) Hits: 235

மைத்திரி தனக்கு உண்டான நன்மதிப்பை இழந்துவிட்டார்


பலுகிஸ்தான் மற்றும் கஸகஸ்தான் போன்ற நாடுகளே ஜனாதிபதி தை;திரியை தற்பொழுது அழைப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

உலகத் தலைவர்கள் அருகாமையில் வந்து வழங்கிய கௌரவத்தை ஜனாதிபதியினால் தக்க வைத்துக் கொள்ளத் தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் சிறிய நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்களே இலங்கைக்கு வந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

32 மனைவியர் உடைய அரச தலைவர் ஒருவர் மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து ஈட்டப்பட்ட சுதந்திரம் துண்டு துண்டாக உடைவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Comment (0) Hits: 227