V2025

எங்களுடன் வந்து நில்லுங்கள்: ரிசாட்டை அழைத்த எஸ்.பி.

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்க தயாராகி வரும் எதிர்க்கட்சியினர், கடந்த காலத்தில் அவருடன் நெருங்கிய உறவுகளைப் பேணியவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த சந்தர்ப்பத்தில், தமது அணிக்கு ஆதரவளிக்குமாறு ரிசாட் பதியூதீனுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அழைப்பை மகிந்த ராஜபக்ச சார்பாக எஸ்.பீ.திஸாநாயக்க விடுத்துள்ளமைக்கான ஆதரமொன்று தற்போது வெளியாகியுள்ளது.

55 நாட்கள் மகிந்த ஆட்சியின் போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இருந்த ரிசாட் பதியூதீனுக்கும் அழைப்பு விடுப்பதற்காக எஸ்.பீ.திஸாநாயக்க உரையாடிய தொலைபேசி பதிவு தற்போது கசிய விடப்பட்டுள்ளது.

தற்போது அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் ரிசாட் பதியூதீனுடனான கடந்த கால உறவும், தற்போது அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் மகிந்த ராஜபக்ச தரப்பினரின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

இதன்மூலம் அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தெட்டத்தெளிவான அரசியல் பழிவாங்கல் என சுட்டிக்காட்டப்படுகிறது.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found