V2025

ரணில் - சஜித் சந்தித்து பேச்சு : வேட்பாளர் குறித்து இணக்கம் இல்லை!

எதிர்­வரும்  ஜனா­தி­பதித் தேர்தல் வேட்­பாளர் விட­யத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்சித் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அக்­கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச­வுக்­கு­மி­டையில் நேற்றிரவு இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையும் இணக்­கப்­பா­டின்றி முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. 

இந்த சந்;திப்பில் எதிர்காலத்தில் அமையவுள்ள புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்பல் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாட்சியம் வழங்கிய பின்னர் இவ்வாறான சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதில் ரணிலும், சஜித்தும் மாத்திரம் கலந்துக்கொண்டனர்.

இதன் போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தான் தயார் என சஜித் தெரிவித்துடன் அதற்கு கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரதும் ஆதரவுள்ளதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

இதனால் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவடைந்ததுடன், எதிர்வரும் தினங்களில் மீண்டும் கலந்துரையாடலில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் செயற்குழுவையும், கட்சியின் நாடாளுமன்ற குழுவையும் ஒரே தருணத்தில் விரைவாக கூட்டுமாறு பிரதமரக்கு கடிதம் ஒன்றை அனுப்பப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற நிலையில் இதன்போது பொதுஜன பெரமுன எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்தவுள்ள சம்மேளன கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sajith Ranil

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுதந்திரக் கட்சியின் பொதச் செயலாளர் தயாசிறி ஜயசேகர “ஜனாதிபதி தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. பொதுஜன பெரமுன எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்தவுள்ள சம்மேளன கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தீர்மானிக்கப்பட்டது. இது ஏகமனதான தீர்மானம். எமக்கு தனிநபர்களில் எதிர்பார்ப்பு அல்ல மாறாக கட்சியின் கொள்கையே முக்கியமானது” என்றார்.

இதேவேளை ஜனாதிபதிக்கும், எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவித்தார்.

“தற்போதைய ஜனாதிபதியை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்த நாம் தீர்மானித்துள்ளோம். அப்படி செய்தால் மாத்திரமே சுதந்திரக் கட்சி பலமடையும். அதுவே ஜனாதிபதியிடம் தொடர்ந்து அதுகுறித்த கோர காரணமாகும். எனினும், இறுதி முடிவை ஜனாதிபதியே எடுக்க வேண்டும். ஜனாதிபதிக்கும், எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் இப்போது கூறமுடியாது. எதிர்கால நடவடிக்கைகளைப் பொருத்தே அதன் தன்மை அமையும்”

ஜனாதிபதிக்கும், எதிர்க் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான சந்திப்பில் அவர்கள் இருவர் மாத்திரமே கலந்துக்கொண்டதுடன், அதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found