V2025

டிசம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் : தேர்தல் ஆணையாளர்

நவம்பர் 15ஆம் திகதிக்கும், டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடையே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது உறுதியானது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்னும் 10 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உத்தரவு கிடைக்காவிடின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது போகும் எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

அப்படி நடந்தால் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னராவது மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். இந்தத் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றை நிறைவேற்றுமாறு அரசியல்வாதிகளிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். புதிய சட்டமூலத்தின்படி மாகாண எல்லைகள் குறித்து தெரியாத நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதிருக்கிறது. இதனால் பழைய முறையில் தேர்தலை நடத்த முடியாது. காரணம், புதிய சட்டமே தற்போது நடைமுறையில் இருக்கிறது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் யோசனையில் ஜனாதிபதி இருப்பதாக கூறப்படுகிற போதிலும், ஜனாதிபதி அவ்வாறு தேர்தலை ஒத்திவைப்பார் என நம்பவில்லை.'' என்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found