V2025

கோதாபய அமெரிக்காவிற்கு ஆதரவானவரா? எதிரானவரா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதலைப் போன்றதொரு அசாம்பாவித சம்பவத்தை ஏற்படுத்த அமெரிக்க முற்படுவதாக சில தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோதாபய ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரே இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அமெரிக்காவின் பூரண ஆதரவு இருப்பதாக தற்போது தினந்தோறும் பேசப்படுகின்றது.

ஆனால் அதனை மறுத்து தம்மை போலியான அமெரிக்க விரோதிகள் என காண்பிக்க கோட்டா தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

அதற்கமைய அமெரிக்கா தொடர்பான புதிய எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.

கோட்டாவின் “எலிய” அதாவது வெளிச்சம் என்ற அமைப்பு இலங்கையில் மாத்திரம் அல்லாது இலங்கையர் செறிந்துவாழும் வெளிநாடுகளிலும் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி, அமெரிக்க அரசாங்கத்தை கடுமையாக சாடிவருகின்றது.

அதற்கமைய கடந்த 2ஆம் திகதி டுபாயில் கூட்டம் ஒன்றை நடத்திய 'எலிய' அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பேராசியர் மெதகொட ஹயாதிஸ்ச தேரர், அமெரிக்காவை விமர்சித்ததுடன், நாட்டைக் கட்டியெழுபக்கூடிய இயலுமை கோட்டாவுக்கே உள்ளதாக கூறினார்.

அதேபோல் ஏப்ரல் 21 தாக்குதலைப் போன்று மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படும் எனவும், காரணம் சஹாரானின் ரிமோட் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கோட்டாவின் மற்றுமொரு செல்லப்பிள்ளையான பிவித்துரு எல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பிலவும் ‘STOP USA' எனும் தலைப்பிலான கூட்டத்தை நடத்தி கோட்டாபய அமெரிக்காவின் விரோதி என சித்தரிக்க முயல்கின்றார்.

இதற்கமைய கடந்த 4 ஆம் திகதி “தாய்நாட்டை சிதைக்கும் அமெரிக்காவின் முயற்சியை தோற்கடிப்போம் என்ற தொனிபொருளில் கண்டியில் நடத்திய மாநாட்டில் ஈஸ்டர் தாக்குலை போன்ற மற்றுமொரு தாக்குதலை நடத்த அமெரிக்கா முயல்வதாக குற்றம் சுமத்தப்பட்டது.

எனவே அமெரிக்காவிற்கு எதிர்ப்பை காண்பித்து தினமும் கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்காவுக்கு எதிரானவர் என்பதைக் காட்ட முயற்சிக்கின்றனர்.

ரொபட் பிளேக் கோட்டாவுக்கு வழங்கிய உறுதிமொழி :

கோட்டாபய இலங்கையில் புலனாய்வுத் துறையை வழிநடத்தியதைப் போன்ற நிலைமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் பிளேளக் அண்மையில் கூறியிருந்தார். அவர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக பொதுஜன பெரமுன தெரிவித்தாலும் மொட்டு கட்சியை உருவாக்கிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆரம்பத்தில் கோட்டா மீது நல்லாபிபிராயம் கொண்டிருக்காவிடினும் தற்போது அவர்கள் கூறிவரும் கருத்துக்களால் அந்த நிலைப்பாடு மாறிவருகின்றது.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் கோட்டாவை அரசியல் ரீதியாக பலப்படுத்துவதற்கு அவரின் ஆதரவாளர்கள் இவ்வாறு சமூக ஊடகங்களில் அமெரிக்காவுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பது கோட்டாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவிப்பதற்கே ஆகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found