V2025

சஜித் வருகிறார்! பதுளையில் பொதுக்கூட்டம்! கோதாவின் பின்னர் சஜித் அறிவிப்பு வெளியாகுமாம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பதுளை நகரில் பாரிய பொதுக்கூட்டமொன்றை நடத்துவதற்கு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

ராஜபக்ச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்ச பெயரிடப்பட்ட பின்னர், சஜித் பிரேமதாச குறித்த அறிவிப்பு வெளியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக மொட்டுக் கட்சியின் சம்மேளக் கூட்டம் வரும் 11ஆம் திகதி நடைபெறும் நிலையில், மறுதினம் 12 ஆம் திகதி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான பொதுக் கூட்டம் பதுளையில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடக்கும் இந்தப் பொதுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

10 வருடகால மகிந்த ஆட்சியை சரிக்கும் ஊவா மாகாண சபைக்கான முதலாவது பொதுக் கூட்டம் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில் பதுளையில் நடைபெற்றது. 2005ஆம் ஆண்டின் பின்னர் ராஜபக்ச தரப்பினரைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண தேர்தலின் பின்னரே மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டதாக இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்யும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

PHOTO 2019 08 07 18 40 44

PHOTO Badulla

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found