V2025

ஜனாதிபதி பொய் கூறினார் : எம்.பிக்கள் எதிர்ப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 4 இலட்சம் ரூபா ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு நேற்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த கருத்து தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதனை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் விமலவீர திசாநாயக்க சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், அதற்கு பதிலளித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அவ்வாறான ஒரு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவில்லை என கூறினார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found