V2025

மிகக் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஏப்ரல் தாக்குதல் – CID

ஏப்ரல்-21 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த தாக்குதல்களுடன் நேரடித் தொடர்புள்ள பிரதான சந்தேகநபர்கள் உட்பட அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் 90 வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சி.ஐ.டி.யினரின் பொறுப்பில் தற்போது 63 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்த 15 பேரும், சஹ்ரானுடன் இருந்து தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறிய 5 பேரும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், விசாரணைகளில், இதுவரை குண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவர்கள் சார்பிலான நிறுவங்கள் என 41 பேருக்குச் சொந்தமான 13.4 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது சகாக்களுக்குச் சொந்தமான சுமார் 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found