ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவாக வேண்டுமானால் நிச்சயமாக பல முரண்பாடான போராட்டங்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர், ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் வேட்பாளர் தகுதியை விட்டுக்கொடுக்காது என கூறினார்.
இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறு முழுவதும் அவதானிப்பதாகவும் அதற்கு இந்தமுறை ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சிறந்த உதாரணம் என அவர் தெரிவித்தார்.
எனவே, சஜித் பிரேமதாச பல போராட்டங்களை எதிர்க்கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் ஆக வேண்டிய நிலை உள்ளதாகவும மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.