V2025

ஏப்ரல் தாக்குதல் : விசாரணை அதிகாரிகளிடம் விசாரணை

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட மூவரடங்கிய ஆணைக்குழு அதிகாரிகளிடம் ஒரே சந்தர்ப்பத்தில் விசாரணை செய்ய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய அந்த ஆணைக்குழுவின் தலைவர், உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சு ஒன்றின் முன்னாள் செயலாளரான பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோரிடம் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு விசாரணை நடத்தவுள்ளது.

இவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found