V2025

ரஞ்சனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மாநாயக்க தேரர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க பல்வேறுபட்ட விமர்சிக்கத்தக்க கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்த நிலையில் நேற்று அந்த குழு முன் அவர் முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

அதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க குறித்த விடயம் தொடர்பில் சாட்சியமளிக்க தான் ஒழுக்காற்று குழவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

எதிர்வரும் நாட்களில் ஒழுக்காற்று குழு முன் ஆஜராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மாகாநாயக்க தேர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் விசாரணை செய்வற்காக வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி திலக்மாரப்பன தலைமையில் மூவரடங்கிய குழுவை பிரதமர் நியமித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க குறித்து எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் அதுதொடர்பான பரிந்துரைகளையும் மூவரடங்கிய குழு பிரதமருக்கு தெரியப்படுத்தவுள்ளது.

இவ்வாறான நிலையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found