V2025

சுதந்திரக் கூட்டணியை உதாசீனம் செய்யும் பசில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண பெயரிடும் ஜனாதிபதி வேட்பாளரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில் அர்த்தம் இல்லை என பொதுஜன பெரமுணவில் ஸ்தாபர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தமது கட்சி அமோக வெற்றிப்பெறாது என்பது போல் கூட்டணி அமைக்காவிடின் தோல்வியடையபோவதில்லை எனவும் அவர் கூறினார்.

அதேபோல் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் சம்மேளன கூட்டத்திற்கு வருகைத்தருமாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இதனால் சுதந்திரக் கட்சியுடனான கூட்டணி தொடர்பான பேச்சுவார்தைக்கு குந்தகம் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.கவில் தொடரும் நெருக்கடி : அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் என்கிறார் கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வரும் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தொடர்பான யாப்பில் சில திருத்தங்கள் மேற்;கொள்ளப்பட இருந்த நிலையில் தற்போது அந்தப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறிகனார்.

இதேவளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எப்படியாவது அமைச்சர் சஜித் பிரேமதாசவை களமிறக்குவது கட்சியில் உள்ள பெரம்பான்மையினரின் தீர்மானம் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த முடிவை கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் ஊடாக அறிந்துக்கொள்வது உசிதமானது என அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found