V2025

சுதந்திரக் கட்சிக்கு பின்னடைவா? வேட்பாளர் இல்லையா?

ஜனாதிபதி சிறிசேனவின் இயலாமையின் காரணமாகவும் கட்சியில் கடைபிடிக்கப்படும் இருண்ட அரசியல் கொள்கைகள் காரணமாகவும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை கூட பெயரிடமுடியவில்லை என அந்த கட்சிக்குள் உட்பூசல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பல்வேறு சந்தர்பங்களில் இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அதுதொடர்பில் முழுமையான தலையீடு செய்வதாகவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

சிறிசேனவிற்கு கௌரவமான பதவி

இதேவேளை சுதந்திரக் கட்சியுடன் - பொதுஜன பெரமுண கூட்டிணைந்தவுடன் ஜனாதிபதி சிறிசேனவிற்கு கௌரவமான பதவியை வழங்க பொதுஜன பெரமுண தீர்மானித்துள்ளது.

ஆனால் அந்த கௌரவ பதவி என்ன என்பது குறித்தும் அதற்காக எவ்வாறான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட போகின்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத போதும் ஜனாதிபதிக்கு கௌரவமான பதவிவழங்க மொட்டு கட்சி இணங்கியுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி தனது கப்போடிய விஜயத்தை நிறைவு செய்து நாட்டை வந்தடைந்தவுடன் சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுணவுடன் உத்தியோகப்பூர்வமாக கூட்டிணையும் செயறபாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

ஜனாதிபதிக்கும், எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

எந்தவித நிபந்தனைகளும் இல்லை.

எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கும், எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித அரசியல் ரீதியான இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கலந்துரையாடல் சாதாரண அரசியல் ரீதியானது என ஜனாதிபதி சார்பாக பங்கேற்ற பிரதநிதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அதில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ, ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாகவோ கலந்துரையாடபடவில்லை என அந்த பிரதநிதி தெரிவித்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found