V2025

மகிந்தவை சீரோ செய்து கோதா ஹீரோ ஆனார்!

தனது குடும்பம், தனிப்பட்ட நண்பர்கள், வர்த்தகர்கள், அடிப்படைவாதிகள் ஆகியோரை மையப்படுத்தி கட்டியெழுப்பப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டுக் கட்சியின்) ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமிக்காதிருக்க முடியாத வகையில் அவரினால், மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகிய சகோதரர்களை நெருக்கடிக்குள் தள்ளி, ஏப்ரல் தாக்குதலின் பின்னர் வெளிப்பட்ட அடிப்படைவாதத்தைக் காரணம் காட்டி, கோதாபய ராஜபக்ச இந்தச் சந்தர்ப்பத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

சுகதசா உள்ளக அரங்கில் நடந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த அரசாங்க அந்த கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். எனினும், ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்ச பெயரிடுவதற்கு முன்னரே, மக்களினால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். தனது சகோதரனை இந்த நாட்டு சகோதர்களிடம் ஒப்படைப்பதாக மகிந்த ராஜபக்ச இதன்போது கூறியிருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தலைமை வழங்க தான் தயார் என மாநாட்டில் உரையாற்றிய கோதாபய ராஜபக்ச தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுப்பதாகவும், 30 வருடகால இராணுவ அதிகாரியாகவும்,10 வருட காலம் அரசாங்கத்தின் சிரேஸ்ட செயலாளராக பணியாற்றியுள்ள தனதுக்கு இதனைச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்ச பெயரிடப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டில் பல இடங்களில் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்யப்பட்டது.

கோதாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் வகையில் கூட்டப்பட்ட இந்த மாநட்டில், கோதாபய ராஜபக்சவிற்கு எதிராக கடந்த காலங்களில் அரசியல் மேடைகளில் பேசிய வாசுதேவ நாணயக்காரவும், இந்த நிகழ்வில் பங்கெடுத்திருந்தார். மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த சந்தர்ப்பத்தில் வாசுதேவ நாணயக்கார, கைதாட்டி ஆரவாரம் செய்ததைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found