V2025

காட்டுமிராண்டிகள் தற்பொழுது நுழைவாயிலில்! கோதாவைத் தாக்கிய மங்கள

வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மகிந்த ராஜபக்ச தரப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான கடுமையான விமர்சனத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் செய்தியொன்றையும் வெளியிட்டுள்ளார்.

ராஜபக்ஷ காலத்திலிருந்த, வெள்ளை வேன் பயங்கரவாதத்தின் அடையாளமான “அகோர அமெரிக்கன்” ஜனாதிபதி பதவிக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

கடந்த காலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட இருண்ட யுகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்ல இலங்கையர்களுக்கு அவசியமா?" என்று நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found