V2025

வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கியவர் ஜனாதிபதி வேட்பாளர் : எச்சரிக்கும் மங்கள

கடந்த மகிந்த ஆட்சிக் காலத்தில் வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கிய 'கொடூர அமெரிக்கன்' தனது ஜனாதிபதித் தேர்தல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்க தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது “கொடூரக்காரர் நுழையாவிலில் நிற்கின்றனர். ராஜபக்ச யுகத்தில் வெள்ளை வேன் கலாசாரத்தை முன்னெடுத்த “கொடூர அமெரிக்கர்'' ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். மீண்டுமொரு இருண்ட யுகத்திற்குள் செல்ல இலங்கை தயாரா? என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டு மக்களை பயமுறுத்தும் செயற்பாடு – சந்திரிக்கா

இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டதன் மூலம் நாட்டு மக்களை பயமுறுத்தும் செயற்பாடு மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் ஐ.டீ.ன். தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தெரிவித்த பல கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முப்படைகளின் நிறைவேற்று அதிகாரியாக தமக்கு வழங்கிய அனைத்து பொறுப்புகளையும் எல்லைக்கடந்து நிறைவேற்றியதாக தெரிவித்த கோட்டாபய ராஜபக்ச, அவ்வாறே எதிர்காலத்திலும் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

''கோட்டாபய ராஜபக்ஸ தனக்கு வழங்கிய பணிகளை அதற்கும் அப்பால் சென்று நிறைவேற்றும் நபராம், இதனை பயமுறுத்தும் வகையிலேயே அவர் கூறியுள்ளார்.'' என்று ஊடகவியலாளர் உவிந்து தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சகோதரரின் டீ.என்.எல் தொலைக்காட்சி கடுமையான வேலை.

பொதுஜன பெரமுனவின் மாநாட்டை “தெரண, ஹிரு” தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்த நிலையில் பிரதமரின் சகோரதரனின் ஈ.என்.எல் தொலைக்காட்சியும் அந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பியது.

அதேபோல் அமைச்சர் சாகல ரத்நாயக்க, கோட்டாபய ராஜபக்ஸவை பலமுறை இரகசியமாக சந்தித்துள்ளமை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பின்னணியில் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ள பொதுஜன பெரமுனவின் நிஹால் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ஸவைவின் பேச்சு சிறப்பானது. ஆனால் ரணிலுக்கு நன்றி சொலாது விட்டமை தவறு”.

இதேவேளை, உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நான் பொறுப்பாளி என கோட்டாபய ராஜபக்ஸ கூறியதற்கு அநுராத விஜேசூரிய என்பவர் இவ்வாறு பதிவொன்றை இட்டுள்ளார்.

''உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை எனக்கு வழங்குங்கள். எனது பிள்ளைகளை அமெரிக்கா பார்த்துக்கொள்ளும்.... ஹி..ஹி…ஹி தாமரை மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found