V2025

புதிய அரசியலமைப்பே தேவை என்கிறார் சம்பந்தன்

தற்போதைய சூழலில் நாட்டுக்கு மிக முக்கிய தேவை ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் புதிய அரசியமைப்பே முக்கியமான தேவை எனவும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்னார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

1994 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நாட்டு மக்கள் வாக்களித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதநிதிகளுக்கு சம்பந்தன் எடுத்து கூறியுள்ளார்.

ஆனால் மக்களின் ஏகோபித்த நிலைப்பாட்டை நிராகரித்து இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச் செயலாகும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்

எனவே மக்கள் ஆணையை மீறுகின்ற இந்த நடவடிக்கையில் பங்குபெறுவதா என்பதும் மேற்குறிப்பிட்ட பின்னணியில் தேர்தல் நடைமுறை நியாயபூர்வமானதா என்பது குறித்தும் கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசியல் யாப்பை எதிர்பார்த்து வாக்களித்தாகவும் ஆனால் இன்றைய நிலைமையில் அந்த எதிர்பார்ப்பு சூனியமாகியுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன், ஐரோப்பிய ஒன்றிய பிரதநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found