V2025

முதல் நாளே பசில் புறந்தள்ளப்பட்டார் : குடும்பப் பனிப் போர் தொடர்கிறது

கடந்த 11ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கயில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவாக இருந்த போதிலும், அதன் தலைவராக பேராசியரிர் ஜீ.எல்.பீரிஸ் செயற்பட்டுவந்தார்.

அன்றைய தினம் கட்சியின் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, உரையாற்றிய கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச, வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார். இதனையடுத்து கோதாபய ராஜபக்ச உரையாற்றினார்.

இந்த உரை தற்போது மகிந்த ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போரை வெற்றிகொள்ள தான் பணியாற்றிய விதத்தை கோதாபய விளக்கியிருந்தார். இதன்போது பசில் ராஜபக்சவை எவ்விதத்திலும் கோதாபய ராஜபக்ச கண்டுகொள்ளவில்லையென்று கட்சிக்காரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதன்பின்னர், மறுதினம் இரவு அத தெரண தொலைக்காட்சியில் இதுகுறித்து சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பான செய்திகளில், ''மொட்டுக் கட்சி'' ஸ்தாபர் பசில் ராஜபக்ச குறித்து எவ்வித குறிப்பையும் வெளியிடாததால் பசில் ராஜபக்ச ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
இந்த விவகாரம் குறித்து பசில் ராஜபக்சவிற்கு நெருக்கமான ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கோதாபய ராஜபக்சவின் உரையில், பசில் ராஜபக்ச குறித்தும், மொட்டுக் கட்சியை கட்டியெழுப்புவதில் அவருக்கான பங்களிப்பு குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், டெலிபுரோம்டரில் (உரை திரையில் விழும் கருவி) உரையை பார்த்து உரையாற்றிய போதிலும் பசில் ராஜபக்ச குறித்து குறிப்பிடாதது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

''இன்னமும் மொட்டுக் கட்சியின் பதவி எதனையும் வகிக்காத கோதாபய ராஜபக்ச, தற்போதே இவ்வாறு எங்களைப் புறந்தள்ள ஆரம்பித்துவிட்டார் என்றால், ஜனாதிபதி ஆன பின்னர் அவர் என்ன செய்வார் என்பதை நினைத்துப்பார்க்க முடியாதிருக்கிறது. மாநாட்டில் பசில் ராஜபக்சவே பெரிதாக மெச்சப்பட்டார். எனினும், தெரண தொலைக்காட்சில் இதுகுறித்து எதனையும் காண்பிக்கவில்லை. கோதாபய ராஜபக்சவிற்கு நெருக்கமானவர்களைப் பிரபல்யப்படுத்தினர். பசில் ராஜபக்சவைக் கண்டுகொள்ளவில்லை. எதிர்காலத்தில் மகிந்த ராஜபக்சவிற்கும் இதனையே செய்வார்கள்.'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதலே மகிந்த ராஜபக்ச தரப்பில் கோதாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதில், மகிந்த குடும்பத்தினரும், குறிப்பாக மகிந்தவின் பாரியார், நாமல் ராஜபக்ச ஆகியோரும் பசில் ராஜபக்சவும் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர். எனினும், வெளியே கடும்போக்கு சிங்கள அடிப்படைவாதிகளினால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தினால் மகிந்த ராஜபக்ச கோதாபய ராஜபக்சவை பெயரிட வேண்டிய இக்கட்டான நிலையை எதிர்கொண்டதாக தினேஸ் குணவர்தன எம்.பிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found