V2025

அகற்றப்பட்ட கோட்டாவின் கட்அவுட்கள் - சுற்றுச்சுழலை நேசிப்பதன் பின்னணி என்ன?

தனது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளதா? என்பது தொடர்பில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.
இதுபோன்ற சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் செயற்பாடுகள் கடந்த தினங்களில் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகின.
கட்சியில் எவரேனும் பொலிதீன் மற்றும் தகடுகளை பயன்படுத்தி சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியிருந்தால், அவற்றை அகற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிகழ்வு ஒன்றில் வைத்து தெரிவித்திருந்தார். அதேபோல், இந்த திட்டம் எதிர்காலத்தில் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் எனவும் நாமல் கூறினார்.
பொதுஜன முன்னணி சார்பில், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ, கட்சி மாநாட்டில் உரையாற்றிய போது, பிரசாரங்களுக்காக பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என கூறினார்.
இருப்பினும், அதனை செயல்படுத்துவதில் கட்சியின் அடிமட்டத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும், அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு தேர்தல் பிரசாரங்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியதுவமளிக்கப்படும் என நாமல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாமல் ராஜபக்ஷ சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்றியது குறித்து, அரசியல் ஆர்வலர் ஜயம்பதி புலத்சிங்கல தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் "ஏன் கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன? சுற்றுச்சுழலை நேசிப்பதன் பின்னணியில் ஏதாவது விளையட்டு இருக்கிறதா? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தாவின் காலாவதியான கலை (சிந்தனை)
கோட்டாபய ராஜபக்ஷவின் பிரச்சார சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களை அகற்றுவதற்கான முடிவு, கோட்டாவின் உருவத்தை கட்சி சார்புடைய, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களினால் சித்தரிப்பதன் ஊடாக 'பணக்கார' கட்சியின் பிரச்சாரத் திட்டங்களையும் ஏற்பாடுகளையும் புறக்கணித்து வருவதாக தெரிய வருகிறது.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாவினதும் மற்றும் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவினதும் உருவப்படங்களை காட்சிப்படுத்தி, அமைக்கப்படும் கட்அவுட்களை அமைக்கவும் அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்ட சில சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக “அனித்தா பத்திரிகையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மஹிந்தாவின் ஆதிக்கம் கோட்டாபயாவின்  பக்கம் மாறியது!
“இப்போது மஹிந்தவின் ஆதிக்கம் கோட்டாபயவுக்கு மாறுவதற்கான நேரம் வந்துள்ளது. கோட்டாவின் பிரச்சார சுவரொட்டிகளில், மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் சிறியதாகி, கோட்டாவின் படம் பெரிதாகி வருகின்றது. இது எதிர்கால அரசியல் தலைவிதி என்று கூறப்படுகின்றது. மேலும் இதுவே மஹிந்த ராஜபக்ஷவின் காலாவதியாகும் நிலையாகும்”
கோட்டாவிற்கும் மஹிந்தவிற்கும் இடையில் வளர்ந்து வரும் அதிகாரப் போட்டியின் விளைவே இது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதாவது “எந்த வகையிலும், ஒகஸ்ட் 11 க்குள் எளிதான முடிவை எடுத்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் திட்டமிட்டிருந்த எதிர்கால அரசியல் செயல்முறையை முற்றிலுமாக மாற்றுவதற்கான முடிவு இது என அவர்கள் கூறுகின்றனர்.”
2009 ல் போர் முடிவுக்கு வந்த பின்னர், அவர் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ 18 ஆவது திருத்தத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். அதனூடாக ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அவர் எத்தனித்தார்.
நமலை ஜனதிபதியாக்க கையாண்ட உத்தி!
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ள 'ராஜபக்ஷகள் அல்லர்” இது கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷ கூறிய கருத்து. அனால் ஜனாதிபதித் தேர்தலிலும் நாமல் போட்டியிடுவதை தடுக்க 19 ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோட்டாவுக்கு இப்போது நல்லது கெட்டது எது என்பதை தெரிவு செய்ய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. அவர் ஜனாதிபதியாக தெரிவானால் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எந்த அரசியல் அதிகாரமும் இருக்காது என்பது தெளிவானதாகும்.
மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷ 2005 இல் இலங்கைக்கு வந்ததைப் போலவே, இப்போது அமெரிக்க குடியுரிமையை கொண்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் மகன், தனது தந்தைக்கு பின் வெற்றி பெறுவதில் ஆச்சரியமில்லை.
எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லாத போதிலும், பணக்கார மோகம் உள்ளவர்கள் அனைவரும் கோட்டபயவின் மகனை அடுத்ததாக களமிறக்க ஒன்றிணைவார்கள்.
இது பல்வேறு வாதப் பிரதிவாதங்களை உருவாக்கலாம். அதற்கு பின்னர் நாமல் ராஜபக்ஷ மற்றொரு குடும்ப போட்டியாளரான மாறவும் வாய்ப்புள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ரேடார் திரைக்கு இது தென்படாமல் இருக்க வாய்பில்லை. ஆனாலும் கோட்டாவை தவிர, பொதுஜன பெரமுணவில் வெற்றி வேட்பாளர் ஒருவர் இல்லை. எவ்வாறாயினும் ராஜபக்ஷவின் முத்திரையை பதிக்க வேறு எவரையும் அவர்கள் உருவாக்க போவதில்லை.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found