V2025

சுஜீவ சேனசிங்கவின் விருந்தில் சஜித்துக்கு ஆதரவாக ஐதேக எம்.பிக்கள் 50 பேர்!

(VIDEO இணைப்பு கீழே)
50 க்கும் மேற்பட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நேற்று இரவு (20) கொழும்பு 07 இல் அமைந்துள்ள அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் சகோதரியின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
 
இதன்போது, அவர்கள் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நட்புரீதியான கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். நேற்றைய இந்த சந்திப்பு, இரவு 7 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு வரை நீடித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அமைச்சர்களான கபீர் ஹஷிம், ரஞ்சித் மத்தும பண்டாரா, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, தளதா அத்துகோரல, கயந்த கருணாதிலக, சந்ராணி பண்டாரா, மொஹமட் ஹலிம், ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது குறித்து ஆராய, கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழு ஆகியன சமர்பித்துள்ள கடிதம் தொடர்பில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
 
123 மாகாண சபை உறுப்பினர்களில் 97 பேர் சஜித்துக்கு ஆதரவு!
 
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 97 மாகாண சபை உறுப்பினர்கள் நேற்று இரவு ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச இருக்க வேண்டும் என்று ஏகமனதாக முன்மொழிந்தனர்.
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, அமைச்சர் சஜித் பிரேமதாசாவுடன் கலந்துரையாடலில் பங்கேற்ற 123 மாகாண சபை உறுப்பினர்களில் 97 பேர் சஜித்தை ஆதரிப்பதாக, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
 
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று (20) தலவத்துகொடையில் நடைபெற்றது. எவ்வாறாயினும் "இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்" என மாகாண சபை உறுப்பினர்கள், பிரதமர் அலுவலகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
 
எனினும், கூட்டத்தில் கலந்துக்கொண்டோர் ஐ.தே.க தலைமையிலான பொதுக் கூட்டணி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அமைச்சர் சஜித் பிரேமதாச இலகுவாக வெற்றிபெற முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன, நளின் பண்டாரா மற்றும் ஹெக்டர் அப்புஹாமி, எஸ்.எம்.மரிக்கர், ஹேஷா விதானகே ஆகியோரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found