V2025

"நான்கு வருட சாதனைகளை இழக்க நேரிடும்" - மங்கள எச்சரிக்கை!

சர்வதேச சமூகத்துடன் மோதும் கொள்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு பின்பற்றக்கூடாது என்றும், இதனால் கடந்த நான்கு வருடகாலமாக இலங்கை அடைந்துகொண்ட சாதனைகளை இழக்க வாய்ப்பு உள்ளது எனவும்  நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய இராணுவதளபதி தொடர்பாக, இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவில், வெளிநாட்டு தூதுவர்களை தலையிடவேண்டாம் என  வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே, முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

 இந்த விடயம் தொடர்பில் அவர் தனது டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

"தனிமைப்படுத்தப்பட்ட, மோதல்போக்குடைய கடந்தகால வெளியுறவுக் கொள்கைக்கு நாம் மீண்டும் திரும்பக்கூடாது. கடந்த காலத்தின் பின்தங்கிய வெளிவிவகார கொள்கைகளை மீண்டும் பின்பற்றுவதனால், கடந்த நான்கு வருடங்களில் நாம் அடைந்த பெரும்பாலான சாதனைகளை இழக்க நேரிடும். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு – இலங்கை"

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found