V2025

கோத்தாபய ராஜபக்ஷவின் விருந்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்!

'பொதுஜன முன்னணியின்' ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்றிரவு (21) கொழும்பு ஷாங்கிரில்லா விடுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இதற்கான அழைப்பை விடுத்திருந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் சுதந்திரக்கடசி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.


அதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபாலா டி சில்வா, பைசர் முஸ்தபா, ரஞ்சித் சியம்பலபிட்டிய, லசந்த அலகியவண்ண, அங்கஞன் இராமநாதன், ஸ்ரீயானி விஜேவிக்ரம, திலங்க சுமதிபால உள்ளிட்டோல் இதில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இந்த விருந்துபசாரத்தில் கலந்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி மரண வீடு ஒன்றுக்கு செல்வதாக கூறி அதனை தவிர்த்துக்கொண்டார்.
இதேவேளை, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கவும் விருந்துபசார நிகழ்வை புறக்கணித்துள்ளார்.

ஆக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களைத் தவிர, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பல தலைவர்களும் இதில் பங்கேற்றதாக அறியமுடிகின்றது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found