V2025

"தமிழ் மக்களின் வாக்குகள் கோத்தாவுக்கு கிடைக்காது" - சுரேஷ் பிரேமசந்திரன்!

அர­சாங்­கத்­தினை பாது­காத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர், ஜனா­தி­பதி மைத்­திரி மட்­டுமே தமிழ் மக்­களை ஏமாற்­றி­விட்டார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் மக்­களை ஏமாற்­ற­வில்லை என்ற தோற்­றப்­பாட்­டினை உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 

"தற்­போ­தைய அர­சினை தாங்கள்தான் கொண்டு வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கூறிவந்தனர். இப்­போது மைத்­திரி எம்மை ஏமாற்றி விட்டார் என விமர்­சிக்­கின்­றனர். கண்­டிக்­கின்­றனர். அவ்வாறு கண்­டிக்க வேண்டாம் என்று சொல்­ல­வில்லை. மைத்­திரி மட்டும் ஏமாற்­ற­வில்லை ரணிலும் தான் மக்களை ஏமாற்­றி­யுள்ளார்.

போர்க் குற்­றச்­சாட்­டுக்­களில் முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரி­யாக குறிப்­பி­டப்­பட்டு வரும் சவேந்­திர சில்­வா­வுக்கு இரா­ணுவ தள­பதி பத­வியை ஜனா­தி­பதி வழங்­கி­யுள்ளார். இதற்கு சர்­வ­தேச மட்­டத்தில் எதிர்ப்­புகள் வெளியிடப்பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில், இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர், இலங்­கையின் இரா­ணுவ தள­ப­தியின் நிய­மனம் என்­பது நாட்டின் சயா­தீ­ன­மான விடயம். இதில் சர்­வ­தேச நாடுகள் தலையிடக்கூ­டாது என்ற கருத்தை வெளி­யிட்­டுள்ளார்.

அப்­ப­டி­யாயின் ரணில் நிய­மித்த வெளி­வி­வ­கார அமைச்சர் இவ்­வா­றான கருத்தை வெளி­யிட்­டுள்ளார் என்றால், இரா­ணுவ தள­ப­தியின் நிய­ம­னத்தில் ரணிலும் மைத்­தி­ரியும் இணைந்தே  செயற்­பட்­டுள்­ளனர். ஆனால், கூட்டமைப்­பினர் இதே ரணி­லுக்கு ஆத­ர­வாக செயற்­பட்டு வரு­கின்­றனர். இரா­ணுவ தள­ப­தியின் நிய­மனம் வடக்கு, கிழக்கில் வாழும் மக்­களை தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்­தி­ருக்க வேண்டும் என்ற நோக்­கி­லேயே, வழங்­கப்­பட்­டி­ருக்­கலாம். இந்த அரசு மக்கள் மீது குறிப்­பாக, சிறு­பான்மை இனம் மீது அக்­கறை இல்­லாது செயற்ப­டு­கின்­றது என்­ப­தையே வெளிக்­காட்­டு­கின்­றது.

தற்­போது நாட்டில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான விடயம் பேசுபொரு­ளாக உள்­ளது. சில கட்­சிகள் தங்­களின் வேட்­பா­ளர்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­நி­லையில், பொது­ஜன பெர­முன  சார்­பாக முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தாபய ராஜ­பக்ஷ அறி­விக்­கப்­பட்­டுள்ளார். ஆனால், தமிழ் மக்­களின் வாக்­குகள் என்­றைக்­குமே கோத்­தா­வுக்கு கிடைக்­காது. ஏனெனில் அவர் போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர். அதற்கும் மேலதிகமாக, அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை. இராணுவத்தினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பதில் சாதக தன்மை அற்றவர். இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்ப மாட்டார்கள்" என்றார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found