V2025

ரணிலின் சகோதரரின் 'TNL' இன் மங்களவுக்கு சேறு பூசும் ஒப்பந்தம்! (VIDEO)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் வெற்றிக்கு சிறந்த வேட்பாளராக, தான் சஜித் பிரேமதாசவை கருதுவதாக அமைச்சர் மங்கள சமரவீர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இதனால் அமைச்சர் மங்களவை இலக்கு வைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரின் டி.என்.எல் (TNL)அலைவரிசை அவர் மீது சேறு பூசும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக டி.என்.எல் அலைவரிசை, தனது செய்திகளில் மங்களவை தாக்கும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளது, 

அமைச்சர் சஜித் பிரேமதாச பங்கேற்கவுள்ள பேரணி நாளை (23) மாத்றையில் நடைபெறவுள்ளது. 

இந்த பேரணியை அமைச்சர் மங்கள ஏற்பாடு செய்துள்ளமையே, டி.என்.எல் அலைவரிசையின் இந்த செயலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டரில் இன்று (22) பதிவொன்றை இட்டு. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"டி.என்.எல் இன் செய்தி பிரிவுக்கு பொறுப்பான இஷினி விக்ரமசிங்கவுக்கு நன்றி. காரணம் நீங்கள் எனக்கு பகுதிநேர விளம்பரம் வழங்குகின்றீர்கள். மாத்றையில் நாளை வரலாற்று முக்கியதுவமிக்க பேரணி நடைபெறவுள்ளது"
SAM

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர் ஷான் விக்ரமசிங்கவின் மகள் இஷினி விக்ரமசிங்க. இவர் மங்கள சமரவீர அவர்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடக அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் அவரின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றினார்.

எவ்வாறாயினும், அமைச்சரிடம் பேசிய காரசாரமான வார்த்தைகளுக்காக இறுதியில், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டியேற்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தனது மாமனாருக்கு (ரணிலுக்கு) ஆதரவளிக்காவிடின், தமது குடும்பத்தினர் அனைவரும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் இஷினி விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இஷினி விக்ரமசிங்க தற்போது பிரதமர் அலுவலகத்தின் ஊடக ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இதேவேளை, இஷினி விக்ரமசிங்க, கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசகரான திலித் ஜயவீரவக்கு சொந்தமான வுசயைன Triad Advertising நிறுவனத்தின் பணிப்பாளராக உள்ளமை குறிப்பிடதக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found