V2025

நிறைவேற்று அதிகாரத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பிரதமர் விளக்கம்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் ஏற்பட்ட பாதக விளைவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவு நாடாளுமன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
19ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலமாக ஜனாதிபதியிடம் காணப்பட்ட அத்து மீறிய அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு முன்னதாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் மிகவும் மோசமாக அரசியல் அமைப்பினை மீறிச் செயற்பட்டதனால் இந்த திருத்தச் சட்டம் அமுல்படுத்த நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ள பிரதமர் நேற்று இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் கூடுதல் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் ஒருவரை ஜனாதிபதி, பிரதமராக நியமிக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த போதிலும் அவருக்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தெற்காசியாவில் மிகவும் ஸ்திரமான ஜனநாயகம் இலங்கையில் காணப்படுகின்றது என மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நசீட் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found