V2025

கொள்கையற்ற கட்சியாக சுதந்திரக் கட்சி மாறியுள்ளது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்பொழுது கொள்கைகள் அற்ற கட்சியாக மாறியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மினுவன்கொட தேர்தல் தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான ருவான் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தமது மூத்த சகோதரரான அர்ஜூன ரணதுங்கவின் அரசியல் பயணத்திற்கு உதவி செய்வதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடது பக்கம் சமிக்ஞையைப் போட்டு வலதுபக்கமாக பயணிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் கொள்கை அரசியலில் ஈடுபட்டிருந்தோம்;, பண்டாரநாயக்க கொள்கைகளுடன் நாம் இருந்தோம், ஜனாதிபதி ஒரு சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருக்கின்றார் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்சவுடன் இருக்கின்றார். அரசியலில் ஈடுபடும் போது ஒர் கொள்கைப் பிடிப்பு இருக்க வேண்டும். அர்ஜூண கொள்கை அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். அவரும் கட்சி அரசியலை நிராகரிக்கின்றார்” என ருவான் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை "திருடன்" எனக்கூறி ஆட்சியை பிடித்து, பின்னர் அவருடன் இணைந்து எவ்வாறு ஆட்சி செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.
பழைய திருடனை மீள அழைப்பதா? என்பதில் எமக்கு சிக்கல் நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found