V2025

மஹிந்த ஆதரவு முன்னாள் நகரசபைத் தலைவருக்கு சிறையில் விசேட சலுகை!

மஹிந்தவிற்கு ஆதரவான முன்னாள் நகரசபைத் தலைவருக்கு சிறைச்சாலைகளில் விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹம்பாந்தேராட்டை நகரசபையின் முன்னாள் தலைவர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ என்பவருக்கு சிறைச்சாலையில் விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடுதவற்கான சந்தர்ப்பங்கள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், எராஜை அவரது நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை காண்பித்து மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் எராஜ் தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found