V2025

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் கிடையாது!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு வேட்புமனுத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால், ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள அத் தேர்தலுக்கு மீண்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

வேட்புமனு தாக்கல் இடம்பெறாது எனவும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் மாற்றங்கள் செய்யலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

தற்போதைய நிலையில், தபால் மூல வாக்குப்பதிவுகான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, இந்த தேர்தலானது தேர்தல்கள் ஆணையத்தின் பணி அல்ல என தெரிவித்தார். 

ஆலோசனைகளை பெற்றுக்கொடுப்பதற்கு மாத்திரமே தேர்தல்கள் ஆணையம் உள்ளதாகவும், இந்த தேர்தலுக்கான ஆலோசனைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த தேர்தல் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் அதனை மீண்டும் நடத்துமாறு கூறியதும் காலி மாவட்ட செயலாளர் ஓடுவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found