V2025

குருணாகல் கூட்டம் காரணமாக ஐ.தே.கவிற்குள் மீண்டும் பிளவு!

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமெனக் கோரி, இன்றைய தினம் குருணாகலில் நடைபெறவுள்ள கூட்டம் காரணமாக, கட்சியில் முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
இந்தக் கூட்டம் தொடர்பில், கட்சிக்குள் மாறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குருணாகல் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியிருந்தார் என சில சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
"குருணாகல் கூட்டத்தை நடாத்த வேண்டாம் என கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது" என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் அண்மையில் கூறியிருந்தார்.
இதேவேளை, இவ்வாறு எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சரவை சாரா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, குருணாகல் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found