V2025

திஹார் சிறைக்கு அனுப்புவதிலேயே சி.பி.ஐ தீவிர குறி!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ தடுப்புக்காவலை இன்று  5ஆம் திகதி வரை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ரௌஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சி.பி.ஐ காவலை எதிர்த்து சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிதம்பரத்துக்கு இடைக்கால பிணை வழங்கப்பட வேண்டும் அல்லது கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

அப்போது நீதிபதி "சிதம்பரம் தனது பிணை மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். கீழமை நீதிமன்றமும் உடனடியாக அந்த மனுவை விசாரிக்க வேண்டும். ஒருவேளை பிணை கிடைக்காவிட்டால் சிதம்பரத்தை சி.பி.ஐ காவலில் வைக்க வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப 5-ஆம் திகதி வரை தடை விதித்தார். இந்த நிலையில் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சி.பி.ஐ நேற்றுமுன்தினம் முறையீடு செய்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி, சி.பி.ஐ கோரிக்கை மனு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் என்றார்.

"சிதம்பரத்துக்கு சாதகமான உத்தரவு அளித்தால் அது தவறான முன்னுதாரணமாக அமையும்" என சி.பி.ஐ பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

"சிதம்பரத்தை சி.பி.ஐ காவலில் எடுக்க விருப்பம் இல்லை. எனவே திகார் சிறைக்கு அனுப்புங்கள்" என சி.பி.ஐ தரப்பு வாதம் செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி, சிதம்பரத்துக்கு  5-ஆம் திகதி வரை காவலை நீடித்து உத்தரவிட்டார். சி.பி.ஐ காவலில் எடுக்க சி.பி.ஐயே விரும்பாத நிலையில் சிதம்பரத்துக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found