V2025

குறுகிய காலத்தில் நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் - ஜனாதிபதி !

குறுகிய காலத்தில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பிரச்சினைகளை நோக்கும் போது, நாடு பாரிய நெருக்கடி நிலைமை ஒன்றை நோக்கி நகர்வதாக உணர்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவினால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் போன்றவற்றினால் வெகு சீக்கிரத்தில் நாம் பாரிய நெருக்கடி நிலையை அடைவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் நாட்டையும் நாட்டு மக்களையும் கருத்திற் கொண்டு துரித கதியில் தீர்மானங்களை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found