V2025

ரணிலை காப்பாற்றும் மஹிந்தவின் திட்டத்திற்கு எதிர்ப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.
எனினும், இந்த சூழ்ச்சித் திட்டங்களில் தாம் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றும் சூழ்ச்சித் திட்டங்களில் எங்களை இணைத்துக் கொள்ள வேண்டாம்" என நேரடியாகவே மலர்மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவிடம் கூறியுள்ளனர்.
மேலும், இவ்வாறான சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் அது குறித்து பகிரங்கப்படுத்த தயங்கப் போவதில்லை என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தாபயவை ஜனாதிபதியாக்குவதனை விடவும் ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் நீடிக்கச் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தேர்தலின் பின்னர், கோத்தாபயவின்  அரசாங்கத்தில், மஹிந்தவிற்கு பெயராளவிலான பிரதமர் பதவியொன்றே வழங்கப்பட உள்ளது என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found