V2025

ஜனாதிபதி வேட்பாளர் 'ரணில்' என்பது பொய்! முடியுமாயின் களமிறக்குமாறு சவால்!

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடாதிருக்க வேண்டுமாயின் புதிய ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் களமிறக்கப்பட வேண்டும் என இன்று (06) நடைபெற்ற கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர் வேட்பாளர்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி குறித்து, சிங்கள ஊடகமொன்று சிரேஸ்ட அமைச்சர் ஒருவரிடம் கேள்வியெழுப்பிய போதே குறித்த அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது கட்சித் தலைவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனக் கூறுவதற்கு உரிய காரணம் இருப்பதாக மலிக் சமரவிக்கிரம இதன்போது சுட்டிக்காட்டினார். பிரதமர் களமிறக்கப்பட்டால், கோதாபய ராஜபக்சவை வெற்றிகொள்வதைத் தவிர்த்து, அருகில் கூட நிற்க முடியாது போகும் எனவும், சஜித் பிரேமதாச களமிக்கப்பட்டால் கோதாபயவை வெற்றிகொள்ள முடியும் எனவும் மலிக் சமரவிக்ரம விபரித்துள்ளார்.
20 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ள தங்க வாய்ப்பு!
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டால் 20 வருடங்களாக கட்சிக்கு கிடைக்காது போன ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கபீர் ஹாசீம் இதன்போது தெரிவித்துளள்ளார். இதனை ஆமோதித்துள்ள காமினி ஜயவிக்ரம பெரேரா, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்களும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமரின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் கருத்து கணிப்பிற்கமைய, சஜித் பிரேமதாச தன்னைவிட பாரியளவில் முன்னிலையில் இருப்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் தொடர்பாக பிரதமர் எவ்விதத்திலும் தமது எதிர்ப்பை பதிவுசெய்யவில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 08ஆம் திகதி சஜித் பிரேமதாசவை தனியாக சந்தித்து இணக்கத்தை எட்டுவதாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.ஷ
எனினும், பிரதமரின் பாதுகாப்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேக்கா மற்றும் தயா கமமே ஆகிய அமைச்சர்கள் மட்டும், குழப்பமடைந்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி தமக்கு இருப்பதாகவும் வலியுறுத்த இவர்கள் இருவரும் முயற்சித்துள்ளனர்.
எனினும், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் லசந்த குணவர்தன, பேச்சுவார்த்தை முடிந்தவுடன், 'ரணில் ஜனாதிபதி வேட்பாளர் - சஜித் பிரதமர் வேட்பாளர்? என்ற கேள்விக்குறியுடன் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்றை பரப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற மற்றும் செயற்குழுவின் மூன்றில் இரண்டு வீதமானவர்கள், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக களமிறங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால், முடியுமாயின் ரணில் விக்ரமசிங்கவைக் களமிறக்குமாறு நாம் 'ரவி-தயா'பொன்சேக்கா' தரப்பினருக்கு சவால் விடுப்பதாக சிங்கள ஊடகத்திற்கு தகவல் வழங்கியுள்ள குறித்த அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found