V2025

பேச்சுவார்த்தை வெற்றி : வேட்பாளர் சஜித்! வார இறுதியில் அறிவிப்பு வெளியாகும்

ஐக்கிய தேசிய முன்னணியின் வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் வேட்பாள்ர குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையே இன்றிரவு 9.30 அளவில் ஆரம்பமான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடுவதற்கு பிரதமர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணி, ஏனைய கட்சிகளுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மலிக் சமரவிக்ரம, கபீர் ஹசீம், மங்கள சமரவீர, ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித்த சேனாரத்ன ஆகியோர் அந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் கட்சியின் அனுமதிAடன், இந்த வார இறுதியில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்படவுள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found