V2025

06 யானைகள் உடல் சிதறி பலி!

தாய்லாந்தில் வடகிழக்குப் பகுதியில் அருவி உச்சியில் இருந்து கீழே விழுந்து 6 யானைகள் பாலியாகியுள்ளதுடன், வனவிலங்கு அதிகாரிகளினால் இரு யானைகள் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டும் உள்ளது.

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் 'காவோ யா' தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த வனச் சரணாலயத்தை தாய்லாந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு காப்பகம் பராமரித்து வருகிறது.

இந்த வனத்துக்குள் 'ஹாய் நரோக்' நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த வனவிலங்கு காப்பகத்தில் ஏராளமான யானைகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து அந்த அருவி அமைந்திருக்கும் பகுதியில் இருந்து யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. 

இந்த பிளிறல் சத்தத்தைக் நீண்ட நேரத்துக்குப்பின் கேட்ட வனவிலங்கு அதிகாரிகள் அந்த இடத்தை நோக்கி சென்றனர்.

அங்கு பார்த்தபோது, யானைகள் கூட்டம் அருவியின் பள்ளத்தில் விழுந்து உதவிக்காக பிளிறியடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், நீண்ட போராட்டத்துக்குப்பின், பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த இரு யானைகளை அங்கிருந்து மீட்டனர்.

அதன்பின் காலைநேரம் வந்தபின் அந்த பகுதியில் பார்த்தபோது, அருவியின் உச்சியில் இருந்து கீழே விழுந்ததில் 6 யானைகள் உடல்சிதறி பலியாகிக் கிடந்ததைப் பார்த்து வனவிலங்கு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found