V2025

முரளியின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்!

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனைப் படைத்தார்.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் புதிய சாதனைப் படைத்தார்.

முதல் டெஸ்டின் 5ஆம் நாள் ஆட்டத்தின் போது டி பிரையுன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்த இருவருக்கும் 66 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found