V2025

பெசிலின் சூழ்ச்சி; கோட்டாவை தாக்கவே சிவாஜிலிங்கம் களத்தில்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போடியிடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பெசில் ராஜபக்ஷவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளதாக, சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான முறையில் பிரச்சாரம் மேற்கொள்வதே, பெசிலினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்றும், அதன் மூலம் சிங்கள மக்களை கோவப்படுத்தி, அதனை கோத்தாபயவுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே பெசிலின் நோக்கம் எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, 50,000 தமிழ் வாக்குகளை சிவாஜிலிங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கும் பெசில் ராஜபக்ஷ, அது சம்பந்தமான அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் ஜே.வி.பி யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிடம் ஒப்படைத்துள்ளார். பெசில் ராஜபக்ஷவின் வடக்கு - கிழக்கு பிரதான ஒருங்கிணைப்பாளரான சிரிபால அமரசிங்க, இம்முறை ஜனாதிபதி தோ்தலில் டம்மி வேட்பாளராக சுயாதீனமாக களமிறங்கியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, வடக்கில் தேர்தல் புறக்கணிப்புக்கு வழிகோலி, அதனை மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமாக்கி, அவரை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டதும் பெசில் ராஜபக்ஷ தான் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found