V2025

எல்பிட்டிய தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பூர்த்தி!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறுகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதோடு, தேர்தல் பிரசார பணிகள் இன்று(08) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.  

அந்தவகையில், இந்த தேர்தலில் மலர்மொட்டு கட்சி 65% வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாவிட்டால் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தேர்தலில் வெற்றியீட்டுவதில் சிக்கல் நிலைமை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
முற்றுமுழுதாக சிங்கள வாக்குகளைக் கொண்ட அல்பிட்டிய, ராஜபக்ஷக்களுக்கு சாதகமான ஓர் பகுதி என கருதப்படுகின்றது. மேலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் மொட்டு கட்சி 65 வீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் இல்லாவிட்டாலும் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியீட்டுவார் என தேசப்பற்றுடைய இயக்கமொன்றின் தலைவரான பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 170 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.  

இதில் தேர்தல் மூலம் 17உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலம் 11பேரும் தெரிவு செய்யப்படுவர்.  இம்முறை தேர்தலில் 53,000 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு, இதில் ஐ.ம.சு.மு, ஐ.தே.க, ஜே.வி.பி, பொதுஜன பெரமுன உட்பட முக்கிய கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 

தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை காலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் இந்த தேர்தலில், வெற்றி பெறுவதற்காக பிரதான கட்சிகள் கடும் பிரயத்தனம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்றது.

வேட்புமனு தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையிலே, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பின்போடப்பட்டது.

 

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found