V2025

ஜனாதிபதி நடுநிலைமை வகிக்கத் தீர்மானம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு கட்சிகளுக்கம்  ஆதரவளிக்காமல் நடுநிலைமை வகிக்கத் தீர்மானித்துள்ளார்.
 
இதன்படி தேர்தல் முடிவடையும் காலம் வரையில், அதாவது  எதிர்வரும் நவம்பர் மாதம் 18ம் திகதி வரை சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கட்சியின் சில உறுப்பினர்கள் மலர்மொட்டு கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். எனினும், ஜனாதிபதி கோத்தாபயவிற்கு ஆதரவளிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மலர்மொட்டு கட்சியுடன் இணைந்துகொள்ள வேண்டாம் என சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found