V2025

மொட்டுக் கட்சியின் கூட்டத்தில் சு. க பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கான முதலாவது பொதுக்கூட்டம் தற்போது (09) அனுராதபுரம், சல்காது மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெறும் இந்த பொதுக் கூட்டத்தில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found