ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தரப்பே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவின் பிரச்சார நடவடிக்கை குறித்த வேலைத்திட்டங்களில் ஒன்றாக, கலாநிதி ராஜா தர்மபாலவினால் எழுதப்பட்ட “வீர சபுமல் யலி எவித்” என்னும் நூல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலிலேயே தயாசிறி ஜயசெகர தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகரவும் இந்த பட்டியலில் உள்ளடங்குவதாக நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணத்தைக் கொள்ளையிடவே வெளிநாட்டவர் ஓருவருக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.