V2025

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் பதவி பறிபோகிறது!

கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவை பதவியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் மீது சுமத்தப்படும் தொடர் குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள  நிலையில், அவரது பயனற்ற நிர்வாகத்தின் காரணமாக நகரசபை  நிர்வாகம் மோசமடைந்துவிட்டதாக மற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நகரசபையில் கிட்டத்தட்ட அனைவரும் அவரது நடவடிக்கைகளை நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அவரை  நீக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியிடப்படும் எதிர்ப்பை தடை செய்வதற்காக அவரது  வெற்றிடத்தை  நிரப்ப UNP உறுப்பினர் ஒருவருக்கே வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found