V2025

'மஹிந்த தேசப்பிரிய பதவி விலகக் கூடாது' - சபாநாயகர்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தற்போது பதவி விலகுவது சிறப்பானதாக அமையாது என சபாநாயகர்கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைத்திருக்கிறது.

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

“கடந்த தேர்தல்களின் போது மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழு மகத்தான சேவையை ஆற்றியிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் தேர்தர்களிலும் மஹிந்த தேசப்பிரியவின் வழிகாட்டலின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சேவையை அத்தியாவசியமாக இருக்கின்றது.

மஹிந்த தேசப்பிரிய தற்போது பதவி விலகுவது சிறப்பானதாக அமையாது. ஆகையினால், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை அவர் தொடர வேண்டும்” என சபாநாயகர்கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Leave your comments

Post comment as a guest

0
Your comments are subjected to administrator's moderation.
terms and condition.
  • No comments found