V2025

செய்தி

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் தொடர்பில் சர்ச்சை நிலைமை

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் தொடர்பில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தினை தனியார் பல்கலைக்கழகமாக நடாத்திச்செல்ல உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.

குறித்த பல்கலைக்கழகத்தின் கற்கை நெறிகள் தொடர்பிலும் தெளிவான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறெனினும், ஜனாதிபதியின் இந்தக் கூற்றை நம்ப முடியாத வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லா குடும்பத்திற்கு சொந்தமான இந்த பல்கலைக்கழகத்தின் உரிமையில் மாற்றம் செய்ய ஜனாதிபதி விரும்பமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

Comment (0) Hits: 158

வெடிகுண்டு வாகனம் : நபர் ஒருவர் கைது

கொழும்பு நகருக்கு வெடிகுண்டுடன் கூடிய வாகனம் ஒன்று வருவதாக போலியான தகவல் வழங்கிய விமானப்படையின் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடன் பண கொடுக்கல் வாங்கலில் முரண்பட்ட ஒரு நிறுவனத்தை மாட்டி விட அந்நிறுவன வாகனம் ஒன்றின் இலக்கத்தை கூறி இந்த போலியான தகவலை வழங்கி உள்ளார்.

இத்தகவலை வைத்து தேடுதலில் ஈடுபட்ட போலீசார் புறக்கோட்டை கார் பார்க் ஒன்றில் வைத்து குறிப்பிட்ட வாகனத்தை கண்டு பிடித்துள்ளனர்.

அதில் இருந்து கைதான நபரிடம் விசாரனைகளை மேற்கொண்ட போது விமானப்படையின் சிப்பாய் ஒருவர் போலியாக மாட்டிவிட முயற்சி செய்யதுள்ளது அம்பலமாகியுள்ளது.

Comment (0) Hits: 135

தவறாக வழிநடத்தப்பட்டவர்களின் உள நலத்தை உறுதி செய் வேண்டும்

தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் மட்டுமல்லாது, தவறாக வழிநடத்தப்பட்ட மக்களின் உளநலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது முன்னால் இருக்கும் சவால் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவு பிரஜைகள் பலர் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், சில அடிப்படைவாதிகள் அவர்களின் மத்தியில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு பயங்கரவாத செயல்களை செய்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதிய தொழில்நுட்ப முறைகளையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட்டுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அளரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பிலேயே பிரதமர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Comment (0) Hits: 161

தாக்குதல் பற்றி அறிந்து கொண்டே ஜனாதிபதி திருப்பதிக்கு சென்றார் – விமல்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றி அறிந்து கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி மட்டுமன்றி பிரதமரும் இந்த தாக்குதல் பற்றி அறிந்திருந்தார் எனவும் அதன் காரணமாகவே அவர் வெளிநாடு செல்லாது சித்திரைப் புதத்தாண்டை நுவரெலியாவில் கொண்டாடினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது போது வேட்பாளராக தெரிவு செய்த போது சிறிசேனவின் குறைகள் உங்களுக்கு தெரியவில்லையா என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் விமல் வீரவன்ச நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா, “இப்படியான ஓர் பில்லி சூனியத்தை சந்திரிக்காவே எம் தலையில் கட்டினார்” என தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 161

முரண்பாடுகளை தூண்டும் முகநூல் கணக்குகள் முடக்கப்படும்

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்தே பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலனவை, தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Comment (0) Hits: 150

பதவி விலகப் போவதில்லை – திரேசா மே

பதவியை ராஜினாமா செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரிப்பதாக பிரித்தானியாவின் பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸிட் விவகாரம் தொடர்பில் சரியான தீர்மானங்களை எடுக்கவில்லை எனவும் இதனால் திரேசா மே பதவியை துறக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

பிரிக்ஸிட்டின் முதல் கட்டத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் தாம் நாட்டை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திரேசா மேக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 152

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் ஈரான்

அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்கிக்கொள்ள வேண்டுமென ஈரான் பகிரங்க கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

உலக நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட அணுத் திட்ட உடன்படிக்கையின் பிரகாரம் நடந்து கொள்ளப் போவதாக அந்நாட்டு அறிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்குவதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா இன்றைய தினம் மீண்டும் அறிவித்துள்ளது.

ஈரானுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.

Comment (0) Hits: 146

தென் ஆபிரிக்க தேர்தலில் ஏ.என்.சீ கட்சி முன்னணியில்

தென் ஆபிரிக்காவில் ஆளும் ஏ.என்.சீ கட்சி மீளவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் என கருத்துக் கணிப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தென்ஆபிரிக்காவில் நேற்றைய தினம் தேசிய தேர்தல்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊழல் மோசடிகள், வேலையில்லாப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மக்கள் கடுமையான அதிருப்தியுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1994ம் ஆண்டு முதல் ஏ.என்.சீ எனப்படும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றியீட்டி வருகி;றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தேர்தலிலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றியீட்டும் என்ற போதிலும் மக்களின் ஆதரவு சரிவடைந்து செல்வதாகக் குறபிப்பிடப்படுகிறது.

Comment (0) Hits: 139

இராணுவம் வழங்கியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்

அவசர சந்தர்ப்பம் அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கென விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், 113 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேற்படி விடயங்களை அறிவிக்குமாறு இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேலும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பான தகவல்களுக்காகவும், அவசர தொடர்புகளுக்காகவும் பொதுமக்களுக்கு இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 140

மனச்சாட்சி உள்ளவர்களினால் சிறிசேனவின் கதையை ஏற்க முடியாது

மனச்சாட்சி உள்ளவர்களினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கதையை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கடந்த 7ம் திகதி நாடாளுமன்றில் அழகான ஓர் கதையை கூறிய போதிலும் மனச்சாட்சியுடன் அதனை கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்றவுடன் ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதனால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை எனவும் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் தரப்பினர் பிரதமரை சந்திக்க வேண்டாம் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார் எனவும் இது சரியான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Comment (0) Hits: 164

நீர்கொழும்பில் மோதல்களில் ஈடுபட்ட தரப்பினர் சமாதானமாக செல்ல இணக்கம்

அண்மையில் நீர் கொழும்பில் மோதல்களில் ஈடுபட்ட தரப்பினர் சமாதானமாக செல்ல இணங்கியுள்ளனர்.

அண்மையில் நீர்கொழும்பில் இரண்டு தரப்பினருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள விரும்புவதாக இரு தரப்பினரும் மதத் தலைவர்களிடம் கோரியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து மதத் தலைவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 134

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவும்

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் பாடசாலைகளின் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment (0) Hits: 146

மல்வானை பிரதேசத்தில் சோதனைகளுக்கு இடையூறு என்ற செய்தி பொய்யானது

களனி மல்வானை பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கைகளின் போது பாதுகாப்புப் படையினருக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மல்வான, ரஸ்ஸபான, உலாஹிட்டிகல உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் பள்ளிவாசல்கள், மதரசாக்கள் உள்ளிட்டன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேடுதலின் போது டெலிகொம் நிறுவனத்தில் பணியாற்றும் கணக்காய்வாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Comment (0) Hits: 184

அனைத்து பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் - ரவி கருணாநாயக்க

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பின் முன்னணி பாடசாலைகள் சிலவற்றின் பாதுகாப்பு தொடர்பில் கண்காணிப்பு செய்யும் நோக்கில் நேற்றைய தினம் சென்றிருந்த போது ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.


பிள்ளைகளே எமக்கு உள்ள மிகப் பெரிய சொத்து எனவும் அவர்கள் அச்சமின்றி இருப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பெற்றோரும் மாணவர்களும் திருப்தி கொள்ளக்கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பொலிஸாரும் முப்படையினரும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 142

ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி மாணவர்களுக்கு டெப் வழங்கப்பட உள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி பாடசாலை மாணவர்களுக்கு டெப்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பாடசாலை மாணவர்களுக்கு டெப்கள் வழங்கப்படக் கூடாது என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ள நிலையில், டெப்கள் வழங்குவது குறித்த அமைச்சரவை தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அரசாங்க பாடசாலைகளில் உயர் தரம் கற்கும் பாடசாலை மாணவ மாணவியர் 183000 பேருக்கு இவ்வாறு இலவசமாக டெப்கள் வழங்கப்பட உள்ளன.


இந்த டெப்களை வழங்குவதற்காக 350 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Comment (0) Hits: 199

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக முப்படையினரும் பொலிஸ் திணைக்களமும் கூட்டாக இணைந்து அறிவித்துள்ளது.

Comment (0) Hits: 186

சுற்றுலா ஹோட்டல்களுக்கு விசேட வரிச் சலுகை – மங்கள

சுற்றுலாத் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள ஹோட்டல்களுக்கு விசேட வரிச் சலுகை வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலாச் சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கான வரி 15 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்நோக்கி வரும் பின்னடைவுகளை சரி செய்யும் நோக்கில் இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது.

Comment (0) Hits: 132

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்குவதற்கு ஞானசார தேரை விடுதலை செய்வது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அண்மையில் ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றத்திற்காக ஞானசாரருக்கு சிறைத்தண்டனை விதிக்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 150

பக்கம் 66 / 70