V2025

செய்தி

பெப்ரல் அமைப்பு முகநூலிடம் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

நாளை மறுதினத்துடன் நிறைவடைய உள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் பின்னர் இரண்டு நாட்கள் அதாவது எதிர்வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் எவ்வாறு முகநூலில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை கட்டுப்படுத்தி கையாளப் போகுறீர்கள் எனவும் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் எனவும் பெப்ரல் அமைப்பு முகநூல் நிர்வாகியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

32 வருடங்களாக இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வரும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக மக்கள் செயற்பாடு அமைப்பான பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி முகநூல் நிர்வாகியிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை தேர்தல்கள் சட்டத்தில் தேர்தல் இடம்பெறவுள்ள தினத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னர் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களும் ஓய்வுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிடப்பட்ட 48 மணிநேரமும் அமைதிகாலமாக அனுசரிக்க வேண்டுமெனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வமைதி காலத்தில் முகநூலில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை கட்டுப்படுத்தி கையாளுமாறு முகநூல் நிர்வாகியை கேட்டுக் கொள்கிறேன் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 137

"கோத்தாபயவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தினர் மரணிக்கலாம்" - அகிம்ஸா விக்ரமதுங்க!

இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன்.

தோற்கடிக்க முடியாத, அற்புதமான,  அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன்.

கண்டிக்கத்தக்க,  கோழைத்தனமான  பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன்.

தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கின்றேன்.

இதன் மூலம் நான் சஜித் என்ற வேட்பாளர் எப்படி உருவானார் என்பதை சொல்கின்றேன்.

அவரது வேதனை அவரது போராட்டங்கள் அவரது பயணம் ஆகியன எப்படி என்னுடைய போராட்டங்கள் பயணம் வேதனை ஆகியவற்றை ஒத்தவையாக காணப்படுகின்றன என்ற உணர்வு எனக்குள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

இன்றைய சஜித்பிரேமதாசவை உருவாக்கிய விடயங்கள் எனக்குள்ளும் எதிரொலிக்கின்றன, இன்று உள்ள  என்னை இந்த சவால்களும் அனுபவங்களுமே உருவாக்கின.

இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் எனது சொந்த ஆத்மாவை வடிவமைத்த அதே தீயினால் உருவாக்கப்பட்டவர்.

மற்றைய மாற்றீடான வேட்பாளர் எனது தந்தையின் மரணத்தை தொலைக்காட்சியில் கொண்டாடியவர்.

ஜனாதிபதி பிரேமதாசாவின் அர்த்தமற்ற கொலை குறித்து பிரபாகரன்கூட தம்பட்டமடிக்கவில்லை.

ஆனால் கொலைகார கும்பலொன்று எனது தந்தையை கொலை செய்தவேளை கோத்தபாயவினால் தனது மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை.

எனது தந்தையின் கொலைக்கும் படையினருக்கும் இடையிலான  தொடர்புகள் குறித்து தெரியவந்த வேளை அவர் விசாரணைகளை மேற்கொள்வேன் என்றோ அல்லது  பத்திரிகையாளர்களை பாதுகாப்பேன் எனவோ வாக்குறுதி வழங்கவில்லை.

அவர் குற்றவாளிகளை நீதியின் பிடியிலிருந்து காப்பாற்றுவேன்  என சூளுரைத்தார்.

கோழைகள் மாத்திரமே இரத்தகளறியை வார்த்தைகளால் எதிர்கொள்வார்கள்.

எனது வாழ்க்கையில் கோத்தாபய எந்த சவாலையும் எதிர்கொண்டதை நான் காணவில்லை. அவருக்கு எதிராக பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், அவர் தான் குற்றமற்றவர் என்பதை ஒருபோதும் நிருபிக்கவில்லை.

மாறாக அவர் தாமதங்கள் சட்டசிக்கல்கள் மூலம் தப்பி வெளியேறியுள்ளார்.

அவர் அதிகாரத்திலிருந்த வேளை  அவரை எதிர்த்தவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் அல்லது நாட்டை விட்டு தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது, அவர் தனது எதிர்வேட்பாளர்களை எதிர்கொள்வதையோ அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதையோ தவிர்த்துக்கொண்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பினால் அவர் பதிலிற்கு ஏனையவர்களை நாடுகின்றார்.

நீதியுடனான தங்களின் போராட்டங்களில் இருந்து தப்புவதற்காக கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்பும் ஊடக முதலாளிகள் அவரது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உருவாக்குகின்றனர்- தயாரிக்கின்றனர்.

நெருக்கடியான காலத்தின் போது அவர் அமெரிக்காவிற்கு தப்பியோடிவிட்டு, தனது குடும்பத்தவர்கள் செங்கம்பளத்தை விரித்தவேளையே அவர் இலங்கைக்கு திரும்பிவந்தார்.

சஜித் பிரேமதாசாவை நான் பார்த்ததில்லை- அவருடன் நான் பேசியதில்லை ஆனால் தொலைவிலிருந்து பார்க்கும்போதே அவர் வித்தியாசமானவராக தெரிகின்றார்.

அவர் 2000 மற்றும் 2001 இல் அனைத்து தடைகளையும் முறியடித்து அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

2003 ஜனவரி 31 ம் திகதி சஜித் பிரேமதாச பதில் சுகாதார அமைச்சராக தனது அரசியல் வாழ்க்கையை முன்னோக்கி  நகர்த்திக்கொண்டிருந்த வேளை கோத்தபாய ராஜபக்ச இலங்கையை கைவிட்டுவிட்டு  அமெரிக்க கொடிக்கு விசுவாம் வெளியிட்ட பின்னர் அமெரிக்க கனவில் திளைத்திருந்தார்.

நீதிக்காக போராடிய எங்களை போன்ற பலரை கைவிட்டுள்ள இந்த அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய போதிலும், அவர் தனது நடவடிக்கைகள் மூலம் தன்னை வித்தியாசமானவராக காண்பிப்பதை நான் பார்த்திருக்கின்றேன்.

கடந்த வருடம் ராஜபக்ச சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற முயன்ற சதி முயற்சியின் போது தனது தனிப்பட்ட நலன்களை கைவிட்டு அரசமைப்பை காப்பாற்ற சஜித்பிரேமதாச போராடியதை  நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

அவர் தனது கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்காக போராடி புதிய பாதையொன்றை வகுத்தார்.

அவர் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை வழங்கவில்லை. அரசியல்வாதிகள் விலகியிருக்கும் நிலையை உருவாக்கி பொலிஸாரும் தொழில்சார் வல்லுனர்களும்  தங்கள் கடமைகளை நிறைவேற்றக் கூடிய சூழலை ஏற்படுத்த முனைகின்றார்.

எங்களால் இதனைமாத்திரம் கேட்க முடியும்.

நேர்மையான, அச்சமற்ற, அர்ப்பணிப்பு மிக்க அவரை போன்ற ஒருவர் மிகச்சிறந்த ஜனாதிபதியாக விளங்க முடியும் என எனது மனதில் நான் எண்ணுகின்றேன்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் தங்கள் பணியின் போது கோத்தபாய ராஜபக்சவுடன் மோதிய பல துணிச்சலான காவல்துறை அதிகாரிகள், சட்டவாளர்கள், சாட்சிகள், நீதிபதிகள் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என நான் கடுமையான அச்சம் கொண்டுள்ளேன்.

கோத்தபாய ராஜபக்சவினால் தீவிரவாதத்தை தூண்டி, நாட்டை தீமூட்ட முடியும். அதன் பின்னர் அதனை தன்னால் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவிப்பார்.

பத்து வருடங்களிற்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச குறித்து எனது தந்தை, நாட்டை எச்சரிக்க முயன்றார். அதற்காக அவர் மரணத்தை தழுவினார்.

நாளை கோத்தபாயவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் தந்தை, சகோதரன், தந்தை, தாய் அல்லது கணவன், மனைவி காணாமல் போகலாம், அல்லது மரணிக்கலாம்.

அந்த நபர் உங்களை காப்பாற்றுவார் என நம்புவதன் ஆபத்து என்னவென்றால், அவரிடமிருந்து உங்களை யாராலும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது.

அகிம்சா விக்கிரமதுங்க

தமிழில் ரஜீபன் 

 
Comment (0) Hits: 116

கோத்தாபயவின் மன்னார் பேரணி; ஷங்கிரிலா குண்டுதாரியின் மாமனார் அனுசரணையில்! (காணொளி)

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரிகளுக்கு, வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக தனது செம்புத் தொழிற்சாலையில் இருந்து உலோகங்களை (செம்பு) வழங்கிய, ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியின் மாமனாரான அலாவுதீன் ஜூவலர்ஸ் உரிமையாளர் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் அலாவுதீன் என்பவரினால், நேற்று மன்னார் பிரதேசத்தில் நடைபெற்ற கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு பூரண அனுசரணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அவரின் ஊடாக மன்னாரில் உள்ள சுமார் 1500 தமிழர்களுக்கு, மேற்குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் 1500 ரூபா பணமும் வழங்கப்பட்டு, அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் அலாவுதீனின் மன்னார் வீட்டில் வைத்து விருந்துபசாரமும் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல அரசியல் வர்ணனையாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற அன்றைய தினத்திலிருந்தே, குறித்த தாக்குதலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாக பலமுறை கூறிவந்தார். இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் கலாநிதி தயான் ஜயதிலக்கவின் கூற்று உண்மையானது என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக செயல்படுகிறார்கள் என்பதும் இதன்மூலம் தெளிவாகிறது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி யேசுநாதர் மரணத்தில் இருந்து உயிர்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, நாட்டில் ஆறு இடங்களில் தற்கொலை தாக்குதல்கள் நடந்தன. அலாவுதீனின் மருமகனான மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம், தனது செம்பு தொழிற்சாலையில் இருந்தே தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை தயாரிக்க செம்பு உலோகத்தை வழங்கியதாக தெரியவந்தது.

அலாதீனின் ஒரே மகளான பாத்திமா, மொஹமட் இப்ராஹிம் இல்ஹாமையே திருமணம் செய்திருந்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அலாவுதீனின் மகளது இரகசிய வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை தாக்குதல் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மீது குற்றம் சுமத்தி கடந்த மே மாதம் 9 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த எஸ்.பி. திஸாநாயக்க, ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அலாவுதீன் என்ற வர்த்தகர், அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கட்சியின் பொருளாளராக பதவி வகித்ததாகவும் வர்த்தகரின் மகள் மற்றும் இரண்டு மகன்மார், தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 149

ஈஸ்டர் தாக்குதல் : யூதர்கள் யார்? கிரிபத்கொடையில் ஆர்ப்பாட்டம்! (காணொளி)

கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்காக மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறி கிரிபத்கொடை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புகள் உள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ பதலளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கி நின்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ள சமூக மற்றும் சமாதானத்திற்கான மையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும், உச்ச நீதிமன்ற சட்டத்தரணியுமான பாதர் அசோக் ஸ்டீவனின் கூற்றுக்கு அமைய  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்கூட்டியே தகவல்களை அறிந்திருந்துள்ளார்.

“சுருக்கமாகச் சொல்லப் போனால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தார். இப்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது கத்தோலிக்க மக்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு செய்யும் வேலைகளைப் பற்றி நாம் வேதனை அடைகின்றோம் என்பதை பகிரங்கமாகவே கூற வேண்டும்” என அவர் அண்மையில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

 

Comment (0) Hits: 138

“கோட்டாவின் குடியுரிமை எமக்கு பொருட்டல்ல.மக்கள் நீதிமன்றத்தில் அவரை தோற்கடிப்போம்” - ஐதேக! (காணொளி)

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜையா? இல்லையா? என்ற விடயத்தில் கவனத்தைச் செலுத்தாமல் அவரை வரும் 16 ஆம் திகதி மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்பதே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் நோக்கமாகும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ளதோடு, அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி அஜித் பி.பெரேரா மற்றும் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் சட்டத்தரணி அஜித் பி.பெரேரா மேலும் கூறியதாவது, “எமது வேட்பாளா சஜித் பிரேமதாசா கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பில் அந்தளவு அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் நாம் கோட்டாவை மக்கள் நீதிமன்றத்தில் தோற்கடிப்போம்.  மக்கள் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் மூலம் கோட்டாபயவைத் தோற்கடிக்க நாம் முயற்சிக்கப் போவதில்லை. அவ்வாறான வழியில் கோட்டாபயவைத் தோற்படிப்பது தகுதியற்றது என சஜித் பிரேமதாசா நினைக்கின்றார்.

எனினும் மக்களுக்கு இது தொடர்பில் தெளிவு படுத்துகின்றோம். கோட்டாபய ஒரு இலங்கைப் பிரஜையல்ல. இலங்கையின் அரசியலமைப்பின் 31ம் பிரிவுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியானவர் இலங்கை பிரஜைகள் மாத்திரமேயாகும்.

கோட்டாபய அமெரிக்காவின் குடியுரிமையினைப் பெற்றுக் கொண்டார். இலங்கையின் குடியுரிமைச் சட்டத்திற்கு அமைய இலங்கையின் அவரது குடியுரிமை இல்லாமல் போய்விட்டது. அவர் இலங்கையில் அரச பதவியை வகிப்பதாயின் அவர் இலங்கையின் பிரஜையாக இருக்க வேண்டும். அவர் 2005ம் ஆண்டு அவரது சகோதரர் ஜனாதிபதி ஆனதன் பின்னர் இலங்கையின் குடியுரிமையினைப் பெற்றுக் கொள்வதற்கு கடைபிடித்த நடைமுறைகள் மோசடியானவையாகும்” என்றார்.

 

Comment (0) Hits: 115

ஷங்கிரில்லாவின் 100 கோடி டீல் - ராஜபக்ஷக்கள் இவ்வாறே கொமிஸ் பெற்றனர்! (காணொளி)

கொழும்பு, ஷங்கிரில்லா ஹோட்டல் நிர்மாணத்தின் போது ராஜபக்ஷக்கள் பெற்ற கொமிஸ் தொடர்பில் ராஜபக்ஷ ஆட்சியில் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சஜின் வாஸ் குணவர்தன வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராகவும், அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரகசிய செயற்பாடுகளுக்குப் பொறுப்பான அதிகாரியாகவும் கருதப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன இவ்விடயங்களை வெளிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தினை வெளிப்படுத்தினார்.

“இந்த சத்தியக் கடதாசியினை சிதம்பரம் என்ற நபரே வழங்கியுள்ளார். சிங்கப்பூர் டிஜிடல் இண்டர் என்ற நிறுவனம் ஐந்து மில்லியன் டொலர். ஐந்து மில்லியன் டொலருக்கு டிஜிட்டல் நிறுவனமும், ஹெலியாட் என்ற நிறுவனமுமே ஆலோசனைச் சேவையினை வழங்குவதற்காகக் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த எபிடெவிட்டை வழங்குவது இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பங்குதாரரும் மற்றும் உரிமையாளருமாகும். ஏராளமான விடயங்களின் தகவல்கள் இருக்கின்றன. இதில் இந்தக் கொடுக்கல் வாங்கள்களுக்காக ஐந்து மில்லியன் டொலர் வழங்கப்பட்டது என மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து மில்லியன் டொலர் என்பது எமது நாட்டுப் பணத்தில் சுமார் 100 கோடியளவானதாகும்.

இதுதான் அவர்களிடமிருந்து பெற்ற இலஞ்சம் அல்லது கொமிஸாகும். அதே போன்று தேவையான எந்த நேரத்திலும் இலங்கையின் சட்டத்திற்கு முன்னால் வந்து நீதிமன்றத்திற்கு முன்னால் வந்து இது தொடர்பில் சாட்சியமளிப்பத்தற்கோ அல்லது தேவையான எதற்குமோ நான் தயாராகவே உள்ளேன்” என்றார்.

Comment (0) Hits: 110

அமெரிக்காவின் ஆவணம் வெளியானது : கோட்டாபய இன்னமும் அமெரிக்கரே!

அமெரிக்காவின் திறைசேரி திணைக்களத்தின் தேசிய வருமான வரிச் சேவையினால் வெளியிடப்படும் அந்நாட்டின் குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டவர்களின் புதிய பெயர் பட்டியல், அதாவது 2019ம் ஆண்டின் நவம்பர் மாதப் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்ட அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்கள் இனிமேல் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்த மாட்டார்கள் என அந்தப் பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பெயர் பட்டியலிரும் நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனவே கோட்டாபய இன்னமும் அமெரிக்காவுக்கு வருமான வரி செலுத்தும் அமெரிக்க பிரஜையாகும். அவர் தனது குடியுரிமையினை நீக்கிக் கொண்டிருந்தால் இப்போது வெளியிடப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் அவரது பெயர் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.  அப்போதுதான் குடியுரிமை சட்டரீதியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும்.

அமெரிக்காவில் குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்ட அனைவர் தொடர்பான பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை வெளியிட அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படுவது வருடத்திற்கு நான்கு தடவைகள் அவ்வாறான பட்டியல் வெளியிடப்படும் என்பதேயாகும்.

Comment (0) Hits: 128

தமிழர்களை நசுக்கிய ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் ஆட்சியை கொடுக்கப் போகின்றீர்களா? - சுமந்திரன்!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது தவர்த்துக்கொண்டால் வெற்றிபெறப்போவது கோத்தாபய ராஜபக்ஷவே எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழர்கள் வாக்களிக்காது  தமிழ் மக்களை அடக்கி நசுக்கிய ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் ஆட்சியை கையில் கொடுக்கப்போகின்றீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். 

ஜனாதிபதி தேர்தல் நாள் நெருங்கிவருகின்றது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் என செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றால் போல் கூறி வருகின்றனர். எனினும் எமது கையில் இருக்கும் பாரிய ஆயுதம் எமது வாக்குரிமையாகும். எவரும் அதனை பறித்துவிட முடியாது. வாக்குரிமையை பயன்படுத்த வேண்டாம் என கூற எவருக்கும் உரிமையும் கிடையாது. எமது வாக்கென்ற ஆயுதத்தை பயன்படுத்தாது விட்ட அன்றைய சந்தர்ப்பத்தில் எம்மத்தியில் மாற்று வழியொன்று இருந்தது. எமது கையில் ஆயுதம் இருந்தது. 

அன்று  வாக்களிக்க வேண்டாம் என எடுத்த தீர்மானம் சரியானதா தவறானதா? என்பது வேறு விடயம். ஆனால் மாற்றுவழி இருந்தது. ஆயுத போராட்டம் மூலமாக உரிமைகளை பெறலாம் என்ற மாற்றும் வழிமுறை முன்வைக்கப்பட்டது. ஆனால், இன்று அவ்வாறான மாற்றுவழி இல்லை. இனியும் அவ்வாறு  ஒரு வழிமுறை வரப்போவதும் சாத்தியமில்லை. ஆகவே சரியான ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது கூறினார்.

Comment (0) Hits: 105

இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு!

ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 19 வயதுடைய  இவோன் ஜொன்சன்  எனும் யுவதியை கழுத்தை நெறித்தும், தலையை தரையில் அடித்து மண்டை ஓட்டினை 64 இடங்களில் சேதப்படுத்தியும் கொடூரமாக கொலை செய்த ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கொடூர கொலை தொடர்பில் குற்றவாளி ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு மரண தண்டனை  விதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு வேறு ஜனாதிபதி மன்னிப்புக்களை அடுத்து அவர் நேற்று மாலை இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை 4.30 மணிக்கு ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹ  குருவிட்ட சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வெளியேறியதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) பந்துல ஜயசிங்க உறுதி செய்தார்.

மரண தண்டனை விதிக்கப்ப்ட்ட ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு 2016 ஆம் அண்டு ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு ஜனாதிபதியின் பூரண மன்னிப்பு கிடைத்துள்ளது. அதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்  டி.எம்.ஜே. டப்ளியூ. தென்னகோன் தெரிவித்தார்.

Comment (0) Hits: 124

ஜனாதி­பதி தேர்­தலில் நீங்கள் எவ்­வாறு வாக்­க­ளிக்கப் போகி­றீர்கள்?

இம்­மாதம் 16 ஆம் திக­தி­யன்று ஜனாதி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் வாக்­க­ளிக்கத் தகுதி­யுள்­ள­வர்கள் யார்? யார்? என்­பதை தேர்தல் ஆணை­யாளர் உங்­க­ளுக்கு தபால் மூலம் தெரிவித்திருப்பார்.

ஆகவே தேர்தல் தினத்­தன்று நீங்கள் உங்­க­ளுக்கு உரித்­தான அவ் உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையை எடுத்துக் கொண்டு அந்த அட்­டையில் நீங்கள் எங்கே வாக்­க­ளிக்கச் செல்­ல­வேண்டும் என்று குறிக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்குச் செல்ல வேண்டும்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்குச் செல்­லும்­போது கட்­டாயம் உங்­க­ளது அறி­மு­கத்தை உறு­திப்­ப­டுத்தும் பின்­வரும் ஆவ­ணங்­களில் ஒன்றை எடுத்­துச்­செல்ல வேண்டும்.

1. தேசிய அடை­யாள அட்டை

2. செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு

3. செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம்

4. அரச சேவை ஓய்வு ஊதிய அட்டை

5. பிர­தேச செய­லா­ளரால் விநி­யோ­கிக்­கப்­பட்ட முதியோர் அடை­யாள அட்டை

6. மத­கு­ரு­மார்­க­ளுக்­கான ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தால் விநி­யோ­கிக்­கப்­பட்ட அடை­யாள அட்டை

7. தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் விநி­யோ­கிக்­கப்­பட்ட தற்­கா­லிக அடை­யாள அட்டை என்­ப­வற்றில் ஒன்றை கட்­டாயம் நீங்கள் எடுத்­துச்­செல்ல வேண்டும்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் உள்ளே நடை­பெ­று­பவை

உங்­க­ளது உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையில் நீங்கள் வாக்­க­ளிக்க வேண்­டிய நிலையம் குறிக்­கப்­பட்­டி­ருப்­பதால், அந்­நி­லை­யத்­திற்குச் சென்றே உங்கள் வாக்கை நீங்கள் அளிக்­க­வேண்டும். வேறு நிலை­யங்­களில் உங்கள் வாக்கை அளிக்க முடி­யாது என்­பதை மனதில் வைத்­துக்­கொள்­ளுங்கள்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் உள்ளே இருக்கும் தேர்தல் அதி­கா­ரிகள் உங்­க­ளது வாக்­காளர் அட்­டை­யையும் உங்­க­ளது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் அடை­யாள அட்­டை­யையும் பரி­சீ­லனை செய்த பின்னர் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்குத் தேவை­யான வாக்­குச்­சீட்டை வழங்­கு­வார்கள். அவ்­வாக்­குச்­சீட்டைப் பெற்­றுக்­கொண்டு வாக்­க­ளிப்­ப­தற்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்குச் சென்று உங்­க­ளது வாக்கை அளித்த பின்னர் அதனை வாக்குச் சீட்டுப் பெட்­டிக்குள் போட வேண்டும். அத்­துடன் உங்­க­ளது வாக்­க­ளிப்பு வேலை முடி­வ­டை­கி­றது. அமை­தி­யாக வீட்­டுக்குச் செல்ல வேண்டும்.

 

இனி வாக்­குச்­சீட்டில் நீங்கள் எவ்­வாறு வாக்­க­ளிக்க வேண்டும்  எனப் பார்ப்போம்.

முக்­கிய பகுதி இது­வே­யாகும்.

வாக்குச் சீட்டில் அபேட்­ச­கர்­க­ளது பெயர்கள் இருக்கும். அவர்­க­ளது சின்­னங்­களும் இருக்கும். ஆகவே நீங்கள் முதலில் செய்­ய­வேண்­டி­யது, போட்டி போடும் அபேட்­ச­கர்­களில் ஒரு­வ­ருக்கா அல்­லது இரு­வ­ருக்கா அல்­லது மூவ­ருக்கா வாக்­க­ளிக்க விரும்­பு­கி­றீர்கள் என்­பதை தீர்­மா­னித்துக் கொள்­ள­வேண்டும். ஒரு­வ­ருக்கே வாக்­க­ளிக்க விரும்­பினால் வாக்குச் சீட்டில் பின்­வ­ரு­மாறு குறி­யி­டலாம்.

X புள்­ளடி இடு­வதன் மூலம் அதனைத் தெரி­விப்­பது நல்­லது.

மேற்­படி வாக்குச் சீட்டு பரி­பூ­ர­ண­மா­னது. ஆகவே அந்த வாக்குச் சீட்டு செல்­லு­ப­டி­யா­ன­தொன்­றாக எடுக்­கப்­படும். நிரா­க­ரிக்­கப்­பட­மாட்­டாது.

மாதிரி வாக்­குச்­சீட்டு (2) இல் நீங்கள் ஒரு­வ­ருக்கு மேற்­பட்­ட­வ­ருக்கு வாக்­க­ளிக்க விரும்­பு­கி­றீர்கள் என எடுத்­துக்­கொண்டால் அந்த வாக்குச் சீட்டில் இலக்­கங்கள் மூலமே அடை­யா­ள­மிட வேண்டும். X என்று ஒரு­வ­ருக்கும் மற்­றை­ய­வர்­க­ளுக்கு இலக்கம் 2,3 என்­பதன் மூலம் அடை­யா­ளப்­ப­டுத்­தினால் அது செல்­லு­ப­டி­யா­காது.

ஆகவே நீங்கள் கவ­னிக்க வேண்­டி­யது, இலக்­கங்கள் மூலம் தனது வாக்­கு­ரி­மையை தெரி­விக்க விரும்­பினால் இலக்­கங்கள் மூலமே சக­ல­தையும் தெரி­விக்க வேண்டும். இலக்கம் மூலம் சில­வற்­றையும் X என்­பதன் மூலம் மற்­றை­ய­வற்­றையும் தெரி­விக்கக் கூடாது. அப்­படித் தெரி­வித்தால் அவ்­வாக்கு செல்­லு­ப­டி­யா­காது போகும். ஆகவே கவ­ன­மாக உங்கள் வாக்கை அளி­யுங்கள். ஆகவே மாதிரிச் சீட்டு 2 இல் காட்­டி­யுள்ள மாதிரி வாக்­குச்­சீட்டு செல்­லு­ப­டி­யான வாக்­குச்­சீட்­டாகும்.

மாதி­ரிச்­சீட்டு (3) செல்­லு­ப­டி­யா­காது. மாதிரிச்சீட்டு 4 உம் செல்லுபடியாகாது.

கவனத்தில் கொள்ள வேண்டியது

1. வாக்குச்சீட்டில் X என்று மட்டும் எழுதினால் அது செல்லும்

2. வாக்குச் சீட்டில் X என்றும் மற்றும் 2, 3 என எழுதினால் அது செல்லாது.

3. வாக்குச் சீட்டில் 1, 2, 3 என எழுதினால் அது செல்லும்.

4. வாக்குச் சீட்டில் XXX என மூன்று பெயருக்கு அடையாளப்படுத்தினால் செல்லாது.

விளக்கம் எதுவும் தேவையாயின் 077 6705511 க்கு Phone பண்ணி விளக்கத்தை என்னிடம் தெரிந்துகொள்ளலாம்.

சட்டத்தரணி கே.ஜீ.ஜோன்

 
Comment (0) Hits: 125

அநுராதபுர கூட்டத்தில் கோத்தபாயவுக்கு நேர்ந்த நிலை!

அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடை நடுவில் ஆத்திரமடைந்து பேச்சை நிறுத்திக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதான வேட்பாளர்கள் தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மக்கள் பாரிய கூச்சலிட்டுள்ளனர்.

குறித்த கூட்டத்திற்கு வசந்த சேனநாயக்க நுழைந்த போது அவரின் ஆதரவாளர்கள் அவரை தூக்கிச் சென்றதுடன் கூச்சலிட்டு அவரை வரவேற்றுள்ளனர்.

அப்போது கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கோத்தபாய ராஜபக்ச ஆத்திரமடைந்து இடை நடுவில் பேச்சை நிறுத்தியதுடன் வசந்த சேனநாயக்கவையும் சாடியுள்ளார்.

Comment (0) Hits: 186

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறியை நீக்க மைத்திரி முடிவு! (காணொளி)

கோத்தபாயவின் வெற்றிக்காக ஜனாதிபதி 100க்கு 100 வீதம் ஆதரவாக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை சம்பந்தமாக கோபத்திற்கு உள்ளாகி இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தற்காலிகமாக ஒருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க கூடாது என என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 90 வீதமான தொகுதி அமைப்பாளர்கள் கடுமையான நிலைப்பாட்டில் இருந்த நிலையில், கோத்தபாயவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன தீர்மானித்தன.

இதனையடுத்து ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை, நடு நிலை வகிக்க போவதாக அறிவித்த ஜனாதிபதி, தேர்தல் முடியும் வரை கட்சிக்கு பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை நியமித்தார்.

இதற்கு அமைய ஜனாதிபதி எந்த தரப்புக்கும் ஆதரவு வழங்காது சுயாதீனமாக செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில், குருணாகல் ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கோத்தபாயவின் வெற்றிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100க்கு 100 வீதம் ஆதரவாக இருப்பதாக கூறியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க அல்ல, கட்சி சரியான தீர்மானத்தை எடுத்தது. கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி தொடர்பாக ஜனாதிபதி அடிக்கடி கேட்டு அறிந்து கொள்கிறார் என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

எனினும், தயாசிறி ஜயசேகரவின் இந்த கருத்து முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோத்தபாயவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு தயாசிறி ஜனாதிபதியிடம் கோரியதாகவும் ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 137

மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி ஒருவா் மீது கூட்டு பாலியல் வல்லுறவு - பெண்களுக்கு நாளைய தினத்தை உருவாக்கும் கோட்டா தரப்பினரின் வேலை! (காணொளி)

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பஸ் வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த யுவதியை அவளோடு இருந்த சில இளைஞர்கள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், ஹெம்மாதகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவ்விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தனது மனைவியுடன் மொட்டுக் கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்ற தனது மகள் இரவு 11 மணியாகியும் வீடு திரும்பவில்லை என அவ்யுவதியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  குறித்த யுவதியும், அவளது தாயும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது கூட்டம் நிறைவடைந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பஸ்ஸிலிருந்த  இளைஞர் ஒருவர் குறித்த யுவதியை பஸ்ஸைவிட்டு இறக்கி ஹெம்மாதகம, எல்பிட்டி, பலவத்கம காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என பொலிஸாருக்குத் தெரிய வந்துள்ளது.  சந்தேக நபரான இளைஞரும், அவரது நண்பர்களும் அங்கு வைத்து குறித்த யுவதியை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய ஹெம்மாதகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவத்தனர்.

Comment (0) Hits: 127

வெற்றி பெற்றாலும் பயனில்லை! கோட்டாபய இன்னமும் அமெரிக்கரே...!

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் அமெரிக்க  பிரஜையே என அறிவிக்குமாறும், அமெரிக்க பிரஜா உரிமைச் செயற்பாடுகளை நீக்கிக் கொள்ளல் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி இலங்கை மக்களை ஏமாற்றுவதை தடுத்து நிறுத்தும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் கோரி, அமெரிக்க நிவ் ஜர்சியில் வசிக்கும் இலங்கையரான அநுர ரூபசிங்க என்பவர் நிவ்யோர்க்கில் அமைந்துள்ள தென் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ஆர். பொம்பியோ மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதியான கோட்டாபய, இராஜாங்கச் செயலாளா் மற்றம் இராஜாங்கத் திணைக்களம் இதவரையில் கோட்டாபயவின் குடியுரிமை விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பான தகவல்களை மறைத்துள்ளதாகவும், அது இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முறைப்பாட்டாளரின் பிரதான வாதங்கள் சில உள்ளன. அவற்றுள் பிரதானமானது, கோட்டாபயவின் பிரஜா உரிமையை விலக்கிக் கொள்வதற்காக விண்ணப்பிப்பது அமெரிக்கச் சட்டத்தின் கீழ் சுயமாக இடம்பெறும் ஒரு விடயமல்ல. அத்துடன் இதற்கு முன்னர் கோட்டாபயவிற்கு எதிராக அஹிம்சா விக்ரமதுங்கவின் மனுவிற்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய கோட்டாபயவின் குடியுரிமை விவாதத்திற்குரியது என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகும்.

இதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் பெரும்பாலும் வழங்கப்படப் போவது கலிபொர்னியா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணையான தீர்ப்பாக இருக்கும். இதனடிப்படையில் கோட்டாபய இன்னமும் அமெரிக்கப் பிரஜையே என உறுதியானால் வரும் 16ம் திகதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றாலும் அதில் பயனேதும் இருக்கப் போவதில்லை.

காரணம் கண்டிப்பான அவரது நியமனத்திற்கு எதிராக தேர்தல் மனு தாக்கல் செய்து நீண்ட காலம் வழக்கு இழுபட்டுச் செல்லாமல் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதைப் போன்று கோட்டாபயவின் நியமனமும் இரத்தாகிவிடலாம்.

(லங்கா ஈ நிவ்ஸ்)

Comment (0) Hits: 131

கம்மன்பிலவின் தேசப்பற்று ஆடை கலைந்தது! (காணொளி)

பெரும் தேசப்பற்றாளர் எனக் காட்டிக் கொள்ளும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், பெற்றோர்கள் மற்றும் தங்கை ஆகியோர் அமெரிக்காவில் வசிப்பதாகவும், அனைத்துச் சொத்துக்களும் வெளிநாட்டில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கொழும்பு பொது நூல் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர் சந்திப்பின் போது லசித பெரேராவினால் இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அவுஸ்திரேலிய பிரஜையான பிரயன் ஷெடிக்கின் சொத்துக்களை போலி அட்டோணி அனுமதிப்பத்திரத்தைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக உதய கம்மன்பிலவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்காகவே லசித பெரேரா வெளிநாட்டுப் பிரஜையான பிரயன் ஷெடிக் என்ற முதலீட்டாளரின் அட்டோணி பொறுப்பாளர் என்ற வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை கூட்டியிருந்ததார்.

தான் வெளிப்படுத்திய இந்த விடயங்கள் தொடர்பில் எந்த ஒரு இடத்திற்கும் தன்னோடு விவாதத்திற்கு வருமாறு லசித பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்தார்.

உதய கம்மன்பில அரசியல் நோக்கங்களுக்காக போலியான கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும், அவர் ஒரு தேசப்பற்றாளராகக் காட்டுவது கவலைக்குரிய விடயம் என்றும் லசித பெரேரா இதன் போது கூறினார்.

Comment (0) Hits: 104

இடதுசாரிகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு!

இன்று ராஜபக்ஷக்கள் 2015ம் ஆண்டை விட ஆபத்தானவர்கள் என்பதால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிக்கு முதலாவது விருப்பு வாக்கினை வழங்கிவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குமாறு அரசியல் செயற்பாட்டாளரும், அரசியல் மற்றும் சமூக விமர்சகருமான விதர்ஷன கண்ணங்கர  இடதுசாரி ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  “அனித்தா” பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.  

அந்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,

நாம் கடந்த காலங்களில் இடதுசாரி மாற்று சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறினோம். 2015ம் ஆண்டு தேர்தலிலிருந்து நாம் இதனைக் கூறினோம். 2015ம் ஆண்டில் அனைவரும் அன்னத்தை அரவணைத்துக் கொண்ட போது நாம் இடதுசாரிகளிடத்தில் ஒன்றுபட்டோம்.

எனினும் இன்று இடம்பெறுவது அன்று தோற்றுப் போன ராஜபக்ஷக்கள் அன்றையதை விடவும் மூச்சு வாங்கிக் கொண்டு களமிறங்கியிருப்பதாகும். எவ்வாறாயினும் இம்முறை நிலைமையினை நாம் பார்ப்பது 2015ம் ஆண்டில் இருந்த நிலையை விட மோசமான வகையிலாகும்.

எமக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடு இல்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் வந்தாலும் நாம் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனினும் இப்போதிருக்கும் நடைமுறைத் தெரிவு அதுவாகும். அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டே நாம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். இடதுசாரி கட்சிக்கு முதல் விருப்பு வாக்கினை வழங்கிவிட்டு இரண்டாவது வாக்கினை கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதைத் தடுக்கும் வகையில் வழங்குங்கள் என கோருகின்றோம் என்றார்.

Comment (0) Hits: 114

நாமலுக்கு சஜின்வாஸ் விடுத்த பகிரங்க சவால்! (காணொளி)

2010-2015 வரையான காலப்பகுதியில் ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்,மோசடி குறித்து பகிரங்கமாக விவாதிக்க வருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன,நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ முகாமின் தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

அம்பலங்கொடையில் இன்று (08) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றி போதே, அவர் இவ்வாறு சவால் விடுத்தார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

"2010-2015 ஆம் ஆண்டில் ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பற்றி பேச நான் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாகி, நான் குற்றமற்றவனாக இருக்க விரும்புகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் நான் ஒரு திருடன் என்று சொல்கிறார்கள். அதனால்தான் நாமல் ராஜபக்ஷ், ரோஹித்த அபேகுணவர்தன, ஷெஹான் சேமசிங்க மற்றும் காஞ்சன இவர்கள் யார் வேண்டுமானாலும் என்னுடன் விவாதத்துக்கு வரலாம். இவர்கள் அனைவரும் ஒன்றாக வந்தாலும் பராவாயில்லை. நான் தனியாகவே வருவேன்.

இறுதியாக, எங்களிடம் இப்போது உண்மை பேசும் 'சிரச' மட்டுமே உள்ளது. நான் முன்னர் சிரச தொலைக்காட்சியை கடுமையாக விமர்சித்துள்ளேன். அதற்காக சிரசவிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன்.

அத்துடன், இந்த விவாதத்தில் கடந்த 2010 - 2015வரை இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக மாத்திரம் கதைப்போம். இந்த விவாதம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெறவேண்டும். யார் மோசடிக்காரர்கள் என்பதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். தைரியம் இருந்தால் 13ஆம் திகதிக்கு முன்னர் வர வேண்டும். பயம் இல்லை என்றால் ஏற்றுக்கொண்டு வாருங்கள். தாங்கள் பிரநிதிதுவப்படுதும் அந்தக் குடும்பம் தூய்மையானது என்று நாட்டு மக்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்டுங்கள்" என்றும் கூறினார்.

Comment (0) Hits: 133

எரானின் முறைப்பட்டுக்கு அச்சப்படும் கோத்தா தரப்பு!

பொதுஜன பெரமுனவினால் குண்டுத்தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை தொடர்பில், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் கடைசி வாரத்தில் சில அரசியல் குழுக்களினால் வெடிகுண்டுத் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்  திட்டமிடப்பட்டுள்ளதென சந்தேகம் இருப்பதாகக் கூறி கிடைக்கப் பெற்ற ட்விட்டர் செய்தி தொடர்பில்,  அமைச்சர் எரான் விக்ரமரத்னவினால் பொலிஸ் மா அதிபரிடம் மேற்கொண்ட முறைப்பாடு  குறித்து விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

மேற்படி முறைப்பாடு பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் இது குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக மாநில புலனாய்வு சேவை, பொலிஸ் விஷேட பணியகம் மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இந்த வெடிகுண்டு தாக்குதல் தகவல்  குறித்து நேற்று முன்தினம் (06) எரான் விக்கிரமரத்ன அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

'அடுத்த வாரமளவில் குண்டுத்தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் திட்டமிடப்படுகிறது என்ற நம்பத்தகுந்த தகவலொன்று கிடைத்துள்ளது. 

எனவே தயவுசெய்வு பாதுகாப்புக் கூட்டத்தை நடத்துங்கள்' என்ற கருத்தொன்று டுவிட்டர் தளத்தில் எனக்கும், ஹரீன் பெர்னாண்டோவிற்கும், அஜித் பி பெரேராவிற்கும் பகிரங்கமாகக் பகிரப்பட்டிருக்கிறது.

இந்த எச்சரிக்கை 2019 ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பைக் கொண்டது என்று கருதுகின்றேன். எனவே இதுகுறித்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் அலுவலகத்திடம் கேட்டுக்கொள்வதுடன், உரிய அரச கட்டமைப்புக்களினாலும் பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். இக்கடிதத்தின் பிரதியொன்று பொலிஸ்மாதிபருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comment (0) Hits: 142

பக்கம் 8 / 70