V2025

செய்தி

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விவகாரம் தொடர்பில் சஜித் கருத்து!

தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என யார் அழுத்தங்களை வழங்கினாலும் நாட்டின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீது கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.  

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல நகரில் இடம்பெற்ற (26) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிவித்திகல பிரதேச சபை உறுப்பினர் திலிப் ராஜபக்ஷ, கஹவத்தை பிரதேச சபை வேட்பாளர் திருமதி வீரகோன், ஸ்ரீ.ல.சு.கட்சியின் இரத்தினபுரி மாவட்ட ஊடக இணைப்புச் செயலளார் தனூஜ் கமகே உள்ளிட்ட ஏராளமான ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்குவதற்காக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,

“சஜித் வந்தாலும், கோட்டா வந்தாலும் தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என வெளிநாடு ஒன்று தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றது. அவ்வாறு குற்றம் சுமத்தும் நாட்டின் குடியுரிமை உள்ளவரிடத்தில் அந்த அழுத்தத்தைத் தெரிவிக்க முடியும். தாய் நாட்டின் சுத்தமான குடியுரிமையைக் கொண்டுள்ள இலங்கையரான என்னிடம் அவ்வாறான அழுத்தங்களைச் செய்வதற்கு அவர்களால் முடியாது. இரு பக்கத்திலும் கால்களை வைத்துக் கொண்டிருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை எனக்கில்லை. 

எனது எதிர்த்தரப்பு வேட்பாளர், இந்நாட்டின் நிரந்தர குடியுரிமையைக் கொண்டவரா? என்ற பிரச்சினை உள்ளது. அவர் இரு பக்கத்திலும் இரு கால்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றார். ஒரு கால் அமெரிக்காவிலும் அடுத்த கால் இலங்கையிலும்.  ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில், இராணுவத்தினைக் காட்டிக் கொடுத்துவிட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றார்” என்றார்.
Comment (0) Hits: 23

பெரும் அரக்கனிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள சஜித்திற்கு வாக்களிப்போம் - முன்னணி பாடகர் சுனில் பெரேரா! (காணொளி)

அநுர குமார திசாநாயக்கா அல்லது மஹேஸ் சேனாநாயக்கா அல்லது ரொஹான் பல்லேவத்தை போன்ற யாருக்கேனும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தாலும் அவர்கள் ஒருவராலும் வெற்றி பெற முடியாத காரணத்தினால், கோட்டாபய என்ற அதி பயங்கரமான பெரும் அரக்கனைத் தோற்கடிப்பதற்காக, சஜித் பிரேமதாசாவை வெற்றி பெறச் செய்வதற்கு வாக்களிக்குமாறு முன்னணி பாடகர் சுனில் பெரேரதா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இக்கோரிக்கையை விடுத்த அவர், அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் மேலும் கூறியதாவது,

“நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அவர்களால் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது.  மகேஸ் சேனநாயக்காவுக்கு, அநுர குமாரவுக்கு, பல்லேவத்தைக்கு என்று எவராலும் வெற்றி பெற முடியாது.

எனவே நாம் செய்ய வேண்டியது, இருக்கும் அரக்கனை விரட்டுவதாகும்.  தற்போது எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கும் வாக்கை அளிப்பதில் எந்தப் பயனுமில்லை. இவர்கள் யாராலும் வெற்றி பெற முடியாது என்பதாலும், இருக்கும் பயத்தினாலும் நான் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன்.

எனக்கு நன்கு தெரிந்த ஒரு சகோதரிகை கூடாத வார்த்தைகளால் கோட்டாபய திட்டினார். தற்போது அந்தச் சகோதரி இலங்கையில் இல்லை. அவர் கேட்டது ஒன்றும் தப்பான ஒன்றல்ல. “நாய் குட்டி ஒன்றைக் கொண்டு வரும் விமானம் சென்று விட்டதா?” என சாதாரணமாக ஊடகவியலாளர்கள் கேட்டதைப் போன்று கேட்டார்.  அப்போது மிகவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், அச்சகோதரியைத் திட்டினார். “நாய் குட்டியை அல்ல, தேவையாயின் யானையினையும் விமானத்தில் கொண்டு வர என்னால் முடியும். இதில் உனக்கு இருக்கும் வருத்தம் என்ன” எனக் கேட்டார். இவ்வாறு சூடாகும் தலைவர் நல்லவராக இருக்க முடியாது.

அச்சகோதரி லசந்த விக்ரமதுங்கவிடம் பணியாற்றியவர். லசந்த படுகொலை செய்யப்பட்டதும் அவர் பயந்து போனார். இப்போது அந்தக் குடும்பம் அமெரிக்காவில் வசிக்கின்து. அச்சகோதரியின் பெயர் பெட்ரிகா ஜான்ஸ்” என்றார்.

Comment (0) Hits: 21

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மார்க்கட் செய்து வாக்கு கேட்பவர்களுக்கு பங்கு தந்தையின் சூடான பதில்! (காணொளி)

ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் அறிந்து கொண்டிருந்ததாக சமாதானம் மற்றும் சமூக மையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் உச்சநீதிமன்ற சட்டத்தரணி பங்குத்தந்தை அசோக் ஸ்டீபன் கூறினார்.

“சுருங்கக் கூறினால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடக்கவிருப்பதை அறிந்திருந்தார். இப்போது இவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு, எமது கத்தோலிக சபையின் வாக்குகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில், நாம் கவலையடைகின்றோம் என்பதை பகிரங்கமாகவே கூற வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், இந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக எமது கார்டினலிடம் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கூறியிருக்கின்றார். அது நல்லதொரு விடயம்.

அப்படியாயின் அவர்களது அரசாங்க காலத்தில், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிராக சிலாபத்தில் ஆர்ப்பாட்டம் செய்த எமது எண்டன் பெர்னாண்டோ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார், கட்டுநாயக்காவில் ரொஷேன் சானக படுகொலை செய்யப்பட்டார், ரத்துபஸ்வெலவில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள், லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். எனவே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து, கொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நியாயத்தை  வழங்குங்கள் என கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூற வேண்டும்.

இவர்கள் அனைவரும் ஒன்றே! இவர்கள் இந்த தற்கொலை குண்டு தாக்குதலை ஏற்கனவே அறிந்திருந்தார்கள். எனவே  இந்த தாக்குலை மார்க்கட் செய்து வாக்கு கேட்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

Comment (0) Hits: 21

“ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின் மொட்டு வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும்” - குமார வெல்கம! (காணொளி)

ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாப்பதற்காக, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சி வேட்பாளரைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியினர் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என ஸ்ரீ.ல.சு.கட்சி உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாறு குமார வெல்கம வலியுறத்தியுள்ளார்.

கொழும்பு கிரேண்ட ஒரியன்டல் ஹோட்டலில் (25) இடம்பெற்ற விஷேட ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குமார வெல்கமவின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், முழு நாட்டையும் பிரதிநித்துவப்படுத்தி ஸ்ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஒன்று கூடலில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பின்னர், அதுவும் ஏற்பாட்டாளர்களால் இரத்துச் செய்யப்பட்டது.

இங்கு கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய குமார வெல்கம மேலும் கூறுகையில்,

“இந்த கூட்டம் மிகவும் வெற்றிகரமான ஒரு கூட்டமாகும். இந்த வெற்றிகரமான கூட்டத்தை முன்னே கொண்டு செல்ல வேண்டும். அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் இதற்கு குமார வெல்கம தலைமைத்துவத்தை வழங்குவேன். இனி நான் பின்வாங்க மாட்டேன்.

அத்தாவுட செனவிரத்ன கூறியதைப் போன்று நாம் முன்னேறி செல்ல வேண்டுமாயின் இந்த தேர்தலில் மொட்டு கட்சியைத் தோற்கடிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். எமக்கு வேறு மாற்று வழிகள் இல்லை. மாற்று வழிகள் இருக்கின்றது என நினைக்க வேண்டாம். நான் ஒரு போதும் மொட்டுவுக்கு வாக்களிக்க மாட்டேன். ஆனால் எனது வாக்கை நான் ஒருவருக்கு அளிப்பேன். அது யாருக்கு என யாரும் என்னிடம் கேட்க வேண்டாம்” என்றார்.

Comment (0) Hits: 50

'எமக்குத் தேவை கோட்டாபயவின் அரசாங்கமே' - தேசிய உரிமைகள் அமைப்பு!

தேசிய சக்திகளின் பிரதான இலக்காக இருக்க வேண்டியது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே தவிற, மஹிந்தவின் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதல்ல என தேசிய சிந்தனை அமைப்பின் பிரதானி பேராசிரியர் நளின் த சில்வா வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் (24) தேசிய உரிமைகள் அமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோட்டாபய ராஜபக்ஷவை அபேட்சகராக  நியமித்துக் கொள்வதற்கு கடும் அழுத்தங்களை வழங்கியவர்களுள் முக்கியமானவரான பேராசிரியர் நளின் த சில்வா இதனைத் தெரிவித்தார்.

“கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் தவறுகள் இடம்பெறாமல் இருப்பதையே நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அமையப் போவது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அல்ல என்பதையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இது எமது பிரதான இலக்காகும். இது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமே தவிற வேறு ராஜபக்ஷ ஒருவரின் அரசாங்கம் அல்ல என்தையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்” என இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறினார்.

Comment (0) Hits: 17

செயல்வடிவமும் நம்பகத்தன்மையும்!

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. நாடு முழு­வதும் வேட்­பா­ளர்கள் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். இந்தத் தேர்­தலில் எந்த வேட்­பாளர் வெற்­றி­பெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். இத்­தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ உள்­ளிட்ட ஏனைய சில வேட்­பா­ளர்­க­ளுக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றன. மலை­யகக் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­விற்கும் பூரண ஆத­ர­வினை தெரி­வித்­துள்­ளன என்­பதும் தெரிந்த விட­ய­மாகும். இக்­கட்­சிகள் மலை­யக மக்­களின் நலன்­க­ருதி வேட்­பாளர் களிடம் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றன. இது ஒரு­பு­ற­மி­ருக்க பிர­தான கட்­சிகள் மலை­யக மக்­களின் அபி­வி­ருத்தி கருதி தன்­ன­கத்தே எத்­த­கைய கொள்­கை­களைக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பது குறித்தும் நாம் ஆழ­மாகக் கவனம் செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. மேலும் கட்­சி­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்றித் தரு­வ­தாகக் கூறும் வேட்­பா­ளர்கள் தேர்தல் வெற்­றியின் பின்னர் எவ்­வாறு நடந்­து­கொள்­ளப்­போ­கின்­றார்கள்? வாக்­கு­று­திகள் செயல்­வ­டிவம் பெறுமா? அல்­லது காற்றில் பறக்­க­வி­டப்­ப­டுமா? என்ற நியா­ய­மான சந்­தே­கத்­தி­னையும் பலர் எழுப்பி இருக்­கின்­றனர். 

ஜனா­தி­பதி தேர்தல் பணிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. தேர்தல் திணைக்­களம் இத்­தேர்­தலை சிறப்­பாக நடத்தும் பொருட்டு பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்­றது. இத்­தேர்­த­லுக்­கான மொத்த செலவு நான்கு தொடக்கம் 4.5 பில்­லியன் ரூபா­வாக இருக்கும் என்று ஆணைக்­குழு ஆரம்ப மதிப்­பீ­டு­களைச் செய்­தி­ருந்­தது. எனினும் தற்­போது தேர்­தல்கள் ஆணைக்­குழு 07 பில்­லியன் ரூபாய்­களை ஒதுக்­கு­மாறு திறை­சே­ரி­யிடம் கோரி­யுள்­ளது. இதே­வேளை பிளாஸ்டிக் வாக்குப் பெட்­டிகள் குறித்தும் ஆணைக்­குழு ஆராய்ந்து வரு­கின்­றது. பிளாஸ்ரிக் வாக்குப் பெட்­டி­க­ளுக்குச் செல்ல முடிவு செய்­ததால் தேர்தல் செலவு மேலும் அதி­க­ரிக்­கக்­கூடும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. காகிதச் செலவின் அதி­க­ரிப்பு, அச்­சிடும் நேரத்தின் அதி­க­ரிப்பு, வேட்­பாளர் தொகை என்­ப­வற்றின் கார­ண­மா­கவும் தேர்­த­லுக்­கான செலவு அதி­க­ரிக்கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இதே­வேளை ஜனா­தி­பதி தேர்தல் வன்­மு­றை­களும் வேக­மாக அதி­க­ரித்து வரு­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. 13 நாட்­க­ளுக்குள் ஜனா­தி­பதி தேர்தல் வன்­மு­றைகள் குறித்து ஆயி­ரத்து 134 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை (21) வரை பெப்ரல் அமைப்­பிற்கு 140 முறைப்­பா­டுகள் தேர்தல் வன்­மு­றைகள் தொடர்­பாகக் கிடைத்­தி­ருப்­ப­தாக பெப்ரல் அமைப்பின் பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­தி­ருந்தார். தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அறி­வு­றுத்­தல்­களை மீறிச்­செ­யற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் சுயா­தீன முறையில் தேர்தல் நடை­பெ­று­வ­தனை உறு­திப்­ப­டுத்­து­வது அனை­வ­ரதும் பொறுப்­பாகும் என்றும் ரோஹண மேலும் வலி­யு­றுத்தி இருந்தார். ஜனா­தி­பதி தேர்தல் கண்­கா­ணிப்பில் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டுக் கண்­கா­ணிப்பு குழுக்கள் இடம்­பெற உள்­ளன. இத­ன­டிப்­ப­டையில் ஐரோப்­பிய ஒன்­றிய தேர்தல் கண்­கா­ணிப்­புக்­குழு, தென்­னா­சிய நாடு­களின் தேர்தல் ஆணைக்­கு­ழுக்­க­ளுடன் நெருக்­க­மாக இயங்கும் ‘பெம்­போசா’ என்ற கண்­கா­ணிப்­புக்­குழு, சிவில் அமைப்­புக்­களின் சார்பில் செயற்­படும் ஆசிய தேர்­தல்கள் கண்­கா­ணிப்பு வலை­ய­மைப்பு எனப்­படும் ‘அன்ப்பல்’ என்ற குழு உள்­ளிட்ட நான்கு சர்­வ­தேச கண்­கா­ணிப்புக் குழுக்கள் ஜனா­தி­பதி தேர்தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட உள்­ளன. 

ஆதிக்கம்

இலங்­கையில் இடம்­பெற்ற கடந்­த­கால தேர்­தல்­களில் சிறு­பான்­மை­யினர் தனது ஆதிக்­கத்தைச் செலுத்தி வந்­தி­ருக்­கின்­றனர். ஜனா­தி­பதி தேர்தல், பாரா­ளு­மன்ற தேர்தல், உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபை தேர்­தல்கள் என்று எது­வா­ன­போதும் சிறு­பான்­மை­யினர் தனது ஆதிக்­கத்தை வெளிப்­ப­டுத்தத் தவ­ற­வில்லை. எனினும் இம்­முறை இடம்­பெற உள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்­மை­யி­னரின் ஒத்­து­ழைப்­பின்றி தேர்­தலில் வெற்றி கொள்ளும் முனைப்­பு­களும் இடம்­பெற்று வரு­கின்­றமை நீங்கள் அறிந்த விட­ய­மாகும். இந்­நிலை சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் தொடர்பில் பல்­வேறு கேள்­வி­க­ளையும் எழுப்பி இருக்­கின்­றது. சிறு­பான்­மை­யி­னரின் ஆதிக்கம் வலுப்­பெ­றா­த­வி­டத்து அது பாரிய பின்­வி­ளைவு களுக்கும் இட்டுச் செல்­வ­தாக அமையும் என்று அர­சியல் அவ­தா­னிகள் கருத்து தெரி­விக்­கின்­றனர். பல்­லின மக்கள் வாழ்­கின்ற ஒரு நாட்டில் சகல இனங்­க­ளி­னதும் உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். வேற்­று­மைக்குள் ஒற்­றுமை காணப்­ப­டுதல் வேண்டும் என்­றெல்லாம் பேசப்­பட்டு வரு­கின்ற நிலையில் இதற்கு வலு­சேர்ப்­ப­தா­கவே வேட்­பா­ளர்­களின் செயற்­பா­டுகள் அமைதல் வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இத­னை­வி­டுத்து தேர்தல் வெற்­றிக்­காக சிறு­பான்மையினரின் மனங்­களில் கீறல்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­பா­டுகள் அமையுமானால் இது பாதக விளை­வு­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக அமையும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. 

சிறு­பான்­மை­யி­னரை அர­வ­ணைக்­கின்ற மனப்­பாங்கு பெரும்­பான்மை கட்­சி­க­ளிடம் காணப்­ப­டுதல் வேண்டும். ‘இலங்­கையர்’ என்ற பொது­நோக்கு நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் ஐக்­கி­யத்­திற்கும் தோள் கொடுக்கும் என்­ப­தோடு இலங்கை மீதான சர்­வ­தே­சத்தின் சந்­தேகப் பார்­வை­யையும் இல்­லாது செய்யும். எனவே நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களின் ஊடாக ‘இலங்­கையர்’ என்ற பொது வரை­ய­றைக்கு வித்­திட வேண்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

வேட்­பா­ளர்கள் இன­வாத அடிப்­ப­டையில் தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­வ­தனை கண்­டித்தும் மக்­க­ளி­டையே விரி­சல்­களை வளர்க்க வேட்­பா­ளர்கள் துணை­போகக் கூடாது என்றும் பல அமைப்­புகள் கண்­டனம் தெரி­வித்­தி­ருக்­கின்­றன. இத்­த­கைய அமைப்­பு­களின் நியா­ய­மான கண்­ட­னத்தை வேட்­பா­ளர்கள் புரிந்து நடந்­து­கொள்ள வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். 

தமிழ் கட்­சிகள்

யாழ்ப்­பாணம் மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யங்­க­ளினால் ஒழுங்­க­மைக்­கப்­பட்டு பொது உடன்­பாட்டு ஆவணம் தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் தமி­ழ­ரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்­டணி, ரெலோ, பிளட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்­சிகள் கையொப்­ப­மிட்­டி­ருந்­தன. புதி­தாக உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி முறை­மையை நிரா­க­ரித்து தமிழ் தேசத்­தினை அங்­கீ­க­ரித்து அதற்கு தனித்­து­வ­மான இறைமை உண்டு என்­ப­த­னையும் தமிழ் மக்கள் சர்­வ­தேச சட்­டத்தின் கீழ் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்கள் என்­ப­த­னையும் அங்­கீ­க­ரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்­கையின் தமிழ்த் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும். இறுதிப் போரில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் மற்றும் இனப்­ப­டு­கொலை என்­ப­வற்­றுக்கு முழு­மை­யான பக்­கச்­சார்­பற்ற சர்­வ­தேச பொறி­மு­றை­யி­லான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம், சர்­வ­தேச தீர்ப்­பாயம் ஊடாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படல் வேண்டும். தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வரும் நிபந்­த­னை­யின்றி விடு­தலை செய்­யப்­பட வேண்டும். வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­கா­ரத்தில் சர்­வ­தேச பொறி­மு­றையின் கீழ் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும். வடக்கு–கிழக்கு மாகா­ணங்­களில் அரச ஆத­ர­வுடன் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும்   சிங்­க­ள­  ம­ய­மாக்கல், பௌத்த மய­மாக்கல் மற்றும் சிங்­கள குடி­யேற்­றங்கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற பல விட­யங்கள் பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளன. 

இவ்­வா­றாக 13 கோரிக்­கை­களை உள்­ள­டக்­கி­யுள்ள இந்த ஆவணம் குறித்து இப்­போது வேட்­பா­ளர்­களும், பெரும்­பான்மை மக்­களும் அதி­க­மா­கவே பேசத் தொடங்கி இருக்­கின்­றனர். ஏற்­க­னவே நல்­லாட்சி அர­சியல் யாப்பு குறித்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டபோது புதிய அர­சியல் யாப்பில் சமஷ்­டிக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­பட்­டது. இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்­த­ரப்­புகள் வலி­யு­றுத்தி இருந்­தன. எனினும் சமஷ்டி என்ற சொல்லே பெரும்­பான்­மை­யி­னரில் சில­ருக்கு வேப்­பங்­கா­யாக இருந்­தது. சமஷ்­டியின் ஊடாக நாடு பிள­வு­படும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக இவர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்­டி­ருந்­தனர். சமஷ்டி குறித்த அறி­வற்­ற­வர்­கள்­கூட இன­வா­தத்தை மையப்­ப­டுத்தி எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி இருந்­த­மையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இந்­நி­லையில் சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்­கையின் தமிழ்த்­தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்று பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 

தொல்­லியல் திணைக்­களம், வன­வள திணைக்­களம், வன உயி­ரி­னங்கள் திணைக்­களம் உட்­பட பல அரச திணைக்­க­ளங்கள் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நில, வழி­பாட்­டுத்­தல ஆக்­கி­ர­மிப்­புகள் அனைத்தும் உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும் என்றும் பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தை பெரும்­பான்மைக் கட்­சிகள் அல்­லது பிர­தான வேட்­பா­ளர்கள் ஏற்­றுக்­கொள்­வதில் தொடர்ந்தும் இழு­பறி நிலை இருந்து வரு­கின்­றது. இதே­வேளை பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தில் உள்ள விட­யங்கள் சில இன­வா­தத்­திற்கு வித்­தி­டு­வ­தாக உள்­ள­தா­கவும், நாடு துண்­டா­டப்­ப­டு­வ­தற்கு இந்த ஆவணம் உந்­து­சக்­தி­யாக அமை­யு­மென்றும் கருத்­துகள் பலவும் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இந்த பொது உடன்­பாட்டு ஆவ­ணத்தை ஏற்­றுக்­கொள்ளும் வேட்­பாளர் தமி­ழீ­ழத்­திற்கு வலு­சேர்ப்­பவர் என்று சிலரால் முத்­திரை குத்­தப்­ப­டு­வ­த­னையும் எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இத­னி­டையே கூட்­ட­மைப்பின் நிபந்­த­னைக்கு ஒரு­போதும் அடி­ப­ணியப் போவ­தில்லை என்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார். இக்­க­ருத்­தா­னது பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ மீதான பெரும்­பான்­மை­யி­னரின் கரி­ச­னையை மேலும் அதி­க­ரிக்கச் செய்யும் என்றும் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை இவர் இன்னும் அதி­க­மாக பெற்­றுக்­கொள்ளும் சூழ்­நி­லையை உரு­வாக்கும் என்றும் நம்­பப்­ப­டு­கின்­றது. 

இத­னி­டையே கோரிக்­கை­களை நிரா­க­ரித்­துள்ள கோத்­த­பாய ராஜபக் ஷவுடன் எவ்­வி­த­மான பேச்சும் இல்லை என்றும் ஐந்து தமிழ்க் கட்­சி­களும் இந்த வாரம் இறுதித் தீர்­மா­னத்தை எடுக்கும் என்றும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஒரு­வேளை கூட்­ட­மைப்பு சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்­கு­மாக இருந்தால் அம்­மு­டிவு பொது­ஜன பெர­மு­ன­வுக்கு சர்க்­கரைப் பொங்கல் கிடைத்­த­தாக இருக்கும். தனது பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு பிர­தான துரும்­பாக அக்­கட்சி இதனை பயன்­ப­டுத்தும் என்­பதும் ஐய­மில்லை. 

உள்­ள­டக்கம்

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பா­ய­வி­டமும், புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வி­டமும் மலை­யகக் கட்­சிகள் பல்­வேறு கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கின்­றன. குறிப்­பாக சஜித்­திற்கு ஆத­ர­வ­ளிக்கும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி அவ­ரிடம் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. மலை­ய­கத்­துக்­கென்று தனி­யாக பல்­க­லைக்­க­ழகம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் போன்­ற­வர்கள் நீண்­ட­கா­ல­மா­கவே குரல் கொடுத்து வரு­கின்­றனர். எனினும் அது இன்னும் சாத்­தி­ய­மா­காத ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பான கோரிக்­கை­யினை தமிழ் முற்­போக்குக் கூட்­டணி சஜித்­திடம் முன்­வைத்­தி­ருக்­கின்­றது. இதைப்­போன்றே மலை­யக மக்­களின் அபி­வி­ருத்தி கரு­திய மேலும் பல விட­யங்­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மலை­யக மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரி­விக்­கின்றார். இத­ன­டிப்­ப­டையில், மலை­யக மக்­களின் வீட­மைப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து கவனம் செலுத்­தப்­படல் வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்கள்  அல்­லா­த­வர்­க­ளுக்கும் வீடும் காணியும் வழங்­கப்­ப­டுதல் வேண்டும். பிர­தேச செய­ல­கங்கள் பிர­தேச சபைகள் என்­பன புதி­தாக மலை­யகப் பகு­தி­க­ளில் ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல் வேண்டும். கிராம அலு­வலர் பிரி­வுகள் அதி­க­ரிக்கப்­ப­டுதல் வேண்டும். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளப் பிரச்­சி­னைக்­கு­ரிய தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். தொழி­லா­ளர்­களை சிறு தோட்ட உரி­மை­யா­ள­ராக்­கும் நட­வ­டிக்கை குறித்த கவனம் செலுத்த வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­ப­டு­மி­டத்து மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட வேண்டும். தொழிற் பயிற்சி நிலை­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு மலை­யக இளைஞர், யுவ­தி­களின் வேலை­யில்லாப் பிரச்­சி­னைக்கு தீர்­வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் கல்­விக்­கல்­லூ­ரிகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று மேலும் பல கோரிக்­கை­க­ளையும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, சஜித் பிரே­ம­தா­ச­விடம் முன்­வைத்­தி­ருப்­ப­தாக லோரன்ஸ் மேலும் தெரி­வித்தார். இக் கோரிக்­கை­க­ளுக்கு வேட்­பாளர் சஜித்­திடம் இருந்து சாத­க­மான பதில்

 கிடைத்­தி­ருப்­ப­தாகவும் அவர் தெரி­வித்தார். இத­னி­டையே மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களை சிறு தோட்ட உரி­மை­யாளர் களாக மாற்ற உள்­ள­தா­கவும் இதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் சஜித் பிரே­ம­தாச வாக்­கு­று­தியும் வழங்கி இருக்­கின்றார். அண்­மையில் தமிழ முற்­போக்கு கூட்­ட­ணியின் ஏற்­பாட்டில் பிர­சாரக் கூட்டம் இரத்­தி­ன­பு­ரியில் இடம்­பெற்­ற­போதே சஜித் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார். மேலும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் ஜனா­தி­பதி செய­லணி உரு­வாக்­கப்­படும். தோட்டத் தொழி­லா­ளர்கள் மிகுந்த கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். எனது தந்தை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு பிரஜா உரி­மையைப் பெற்­றுக்­கொ­டுத்தார். நான் சுபிட்­ச­மான வாழ்க்­கை­யினைப் பெற்­றுத்­த­ருவேன் என்றும் இக்­கூட்­டத்தில் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். தோட்டத் தொழி­லா­ளர்களின் சம்­பள உயர்வு குறித்து இப்­போது அதி­க­மா­கவே பேச்­சுகள் அடி­ப­டு­கின்­றன. வேட்­பா­ளர்கள் பலர் சம்­பள உயர்வின் அவ­சியம் தொடர்பில் தனது நிலைப்­பாட்டை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பா­ளர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜபக் ஷ, தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க எனப் பலரும் இதில் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந்த வகையில் கோத்­த­பாய ராஜபக் ஷ தொழி­லா­ளர்­களின் பொரு­ளா­தார நிலை­மைகள் மிகவும் மோச­டைந்­துள்­ள­தா­கவும் தொழி­லா­ளர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­ப­ளத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க தான் உறுதி பூண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இத­னி­டையே தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தான் ஜனா­தி­ப­தி­யா­னதும் 1500 ரூபா­வினை நாட் சம்­ப­ள­மாக வழங்கப் போவ­தாக சஜித் பிரே­ம­தாச தெரி­வித்­திருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்­றிற்கு மாதாந்த செல­வாக 50 தொடக்கம் 55 ஆயிரம் ரூபாய் தேவைப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் தோட்டத் தொழி­லா­ளர்கள் 700 ரூபாய் நாட் சம்­ப­ளத்தை வைத்துக் கொண்டு வாழ்க்­கையை கொண்டு நடத்­து­வ­தென்­பது சிர­ம­மான காரி­ய­மாகும்.

எனவே நான் ஆட்­சிக்கு வந்தால் உங்­களை வழி நடத்தும் திகாம்­பரம், இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரின் சார்­பாக நாள் ஒன்­றுக்கு ஆயி­ரத்து 500 ரூபாய் சம்­ப­ள­மாக வழங்­குவேன் என்று சஜித் தெரி­வித்­திக்­கின்றார். இந்த வாக்­கு­றுதி எந்­த­ள­வுக்கு நம்­ப­கத்­தன்மை மிக்­கது? என்று விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இந்தத் தொகையை வழங்­கு­வ­தற்கு பச்சைக் கொடி காட்­டுமா? 1500 ரூபாய் சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதில் சஜித்தின் உறு­திப்­பாடு தேர்தல் வெற்­றிக்குப் பின்­னரும் நிலைத்­தி­ருக்­குமா? கடந்த பொதுத் தேர்தல் கால­கட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். எனினும் இன்­று­வரை இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் பச்சைக் கட்­சியைச் சேர்ந்த சஜித்தின் வாக்­கு­றுதி சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­துமா? என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்டு வரு­வ­தையும் காதில் கேட்கக் கூடி­ய­தாக உள்­ளது.

ஒப்­பந்தம் இல்லை

தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, சஜித்­துடன் ஒப்­பந்தம் எத­னையும் கைச்­சாத்­தி­டாத நிலையில் கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. இந்த நிலையில் ஒப்­பந்தம் இல்­லாத கோரிக்­கைகள் எந்­த­ள­வுக்கு செயல்­வ­டி­வத்­திற்கு இட்­டுச்­செல்லும்? என்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தில­க­ரா­ஜிடம் வின­வினேன். அதற்கு தில­கராஜ் பதி­ல­ளிக்­கையில்;

ஒப்­பந்தம் என்­பது மக்­களை ஏமாற்­று­கின்ற செய­லாகும். இத்­த­கைய ஒப்­பந்­தங்கள் சட்ட வலு இல்­லா­த­வை­யாகக் காணப்­ப­டு­கின்­றன. ஜனா­தி­ப­தி­யா­னவர் ஒப்­பந்­தத்­திற்­க­மைய மலை­யக மக்­களின் நலன்­க­ரு­திய செயற்­பா­டு­களை மேற்­கொள்வார் என்று எதிர்­பார்க்க முடி­யாது. ஒப்­பந்தம் என்­பது போலி­யான ஒரு விட­ய­மாகும். ஜனா­தி­பதி ஒப்­பந்­தத்­திற்கு அமைய நன்­மை­களைப் பெற்றுக் கொடுக்­க­ாவிட்­டால் எம்மால் அவரை ஒன்றும் செய்ய முடி­யாது. கூட்டு ஒப்­பந்தம் நடை­மு­றையில் இருந்து வரு­கின்­ற­போதும் அதனால் உரிய நன்மை தொழி­லா­ளர்­க­ளுக்கு கிடைக்­கின்­றதா? இல்­லையே. புரிந்­து­ணர்­வு­ட­னான செயற்­பா­டு­களே மக்­களின் நலன்­க­ளுக்கு தோள் கொடுப்­ப­தாக அமையும்.

ஜனா­தி­பதித் தேர்தல், பொதுத்­தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் என்­ப­வற்றில் என்­னென்ன

 கோரிக்­கை­களை முன்­வைக்­க­வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதற்­கேற்ப உரிய கோரிக்­கை­களை முன்­வைக்­க­வேண்டும். ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவிடம் தமிழ் முற்­போக்கு கூட்­டணி கொள்கை சார்ந்த விட­யங்கள் பல­வற்றை முன்­வைத்­தி­ருக்­கின்­றது. புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் எமது கோரிக்­கைகள் உள்­ள­டக்­கப்­படும் என்று தில­கராஜ் மேலும் தெரி­வித்தார்.

32 அம்ச கோரிக்கை

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு ஆத­ரவு வழங்­கு­வது தெரிந்த விட­ய­மாகும். இ.தொ.கா. 32 அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தது. இக் கோரிக்­கை­களை ஏற்­ப­வர்­க­ளுக்கே ஜனா­தி­பதி தேர்­தலில் ஆத­ர­வினை வழங்கப்போவ­தா­கவும் இ.தொ.கா. ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ இக்­கோ­ரிக்­கையை ஏற்­றுக்­கொண்­டுள்­ளதால் தாம் அவ­ருக்கு ஆத­ரவு வழங்க முன்­வந்­த­தாக இ.தொ.கா. தெரி­விக்­கின்­றது. மேலும் இக் கோரிக்­கை­களை பொது­ஜன பெர­முன தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் இ.தொ.கா. தெரி­விக்­கின்­றது. முழு­மை­யான பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அமைக்­க­வேண்டும். இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் பிராந்தியக் கிளையை ஹட்டனில் நிறுவுதல், பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வாழுகின்ற 14 மாவட்டங்களில் உயர்தர விஞ்ஞான, வர்த்தகப் பிரிவுகளை உள்ளடக்கிய பாடசாலைகளை தேவையான அளவு உருவாக்குதல், தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்று அபிவிருத்தி செய்தல், கிளங்கன் ஆதார வைத்தியசாலையினை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துதல், ஆரம்ப சுகாதார மையங்களை பெருந்தோட்டங்களில் உருவாக்குதல், பிரதேச செயலக அதிகரிப்பு, கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லைகளை அமைத்தல், நுவரெலியா மாவட்டத்தில் புதிய நகர சபைகளையும், மாநகர சபைகளையும் உருவாக்குதல், புதிதாக உதவி தொழில் ஆணையாளர் காரியாலயங்களை அமைத்தல், தரிசு நிலப்பயன்பாடு, ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினை வலுப்படுத்தல், காணி உறுதிப்பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இ.தொ.கா. வின் 32 அம்ச கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த கோரிக்கைகளை பூரணமாக நிறைவேற்ற பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய வெற்றி பெற்றால் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவார் என்பதனைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. இ.தொ.கா. மற்றும் பொதுஜன பெரமுன  என்பவற்றுக்கு இடையில் அண்மையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையும் நீங்கள் அறிந்த விடயமாகும். மலையக கட்சிகள் வேட்பாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. எனினும் பிரதான கட்சிகள் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி தன்னகத்தே என்ன கொள்கைகளையும் கேட்பாடுகளையும் வைத்திருக்கின்றன என்று நோக்க வேண்டியுள்ளது. மலையக மக்களை ஏற்கனவே இக்கட்சிகள் கிள்ளுக் கீரையாக நினைத்து செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இக்கட்சிகள் மலையக மக்கள் கருதிய தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கனவே தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தேர்தல் மேடைகளிலும் மலையக மக்களின் மேம்பாடுகருதி பிரதான கட்சிகளினால் பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. இவையெல்லாம் ஏட்டளவில் முற்றுப்பெற்றும், காற்றோடு கலந்தும் விட்டன. இனியும் இந்நிலைமை தொடர இடமளிக்கலாகாது. வரலாற்றில் மலையக மக்கள் தொடர்ச்சியாகவே ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றார்கள். இது இனியும் தொடரக்கூடாது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டுமே மலையக மக்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கையை கட்சிகள் கைவிட வேண்டும். செயற்பாடுகளே அவசியம்.

துரைசாமி நடராஜா

Comment (0) Hits: 26

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு!

'நம்பிக்கையின் உதயம்' என்று பெயரிடப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) முற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

பல்வேறு துறைகள் தொடர்பில் கொள்கை மற்றும் திட்டங்களை கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌியிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் உள்ளடக்கி ´நம்பிக்கையின் உதயம்´ என்ற பெயரில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மகா சங்கத்தினர், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள், புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக தனது கொள்கை மற்றும் திட்டங்களை கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வௌியிட்டிருந்த நிலையில், அவை அனைத்தின் உள்ளடக்கமே ´நம்பிக்கையின் உதயம்´ என்ற பெயரில் தேர்தல் விஞ்ஞாபனமாக வௌியிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 25

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றமை தெரியவந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் பெறுபேறுகள் சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்படுகின்றன.

இவை ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு முரணானதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.

இதனால் இவ்வாறான மாதிரி வாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 
Comment (0) Hits: 17

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி!!!

இலங்கை அரசியல் வரலாற்றில் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி மறக்க முடியாத நாளாகும். ஏனெனில் அன்றைய தினம் தான் அரசியல் யாப்புக்கு முரணாக புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டார். சூழ்ச்சிகரமான முறையில் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் வரையான செயற்பாடுகள் இந்நாட்டு வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிவாகியுள்ளது. அதனால் சட்ட ரீதியான பிரதமர் தலைமையிலான அரசாங்கம் போலி பிரதமர் தலைமையிலான கும்பலுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்தது.

இதேவேளை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதை வாக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்தார். என்றாலும் சூழ்ச்சிக்காரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தைக் கருத்தில் கொள்ளாது பாராளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பு பாராளுமன்றம் கலைக்கப்படுவதைத் தவிர்த்தது.

அதேநேரம் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற குழு என்றும் சிவில் செயற்பாட்டாளர்களது வழக்கு தீர்ப்பின் படி போலி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது.

என்றாலும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு இவ்விருண்ட கரும் புள்ளியை இந்நாட்டு வரலாற்றால் மறக்க முடியாது.

அதனால் அது தொடர்பில் திரும்பி பார்ப்பது பயன்மிக்கதாக இருக்கும்.

இவ்வாறான ஒழுக்க மீறல்களிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் விதம் குறித்து சிந்திக்க வேண்டும்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன்

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஇலங்கையானது சிறந்த ஜனநாயகத்தை முன்னெடுக்கும் நாடொன்று அல்ல. இது மிகவும் பின்னடைந்த நாடாகும். கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வை மிகவும் கவலைக்குரிய கெட்ட நிகழ்வாகவே நான் நோக்குகின்றேன். இது நாட்டு ஜனாதிபதி இந்நாட்டு அரசியலமைப்பை மீறிய ஒரு சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னரும் இந்நாட்டு ஜனாதிபதிகள் அரசியலமைப்பை மீறியுள்ளனர். நீதிமன்றமும் அரசியலமைப்பை மீறியுள்ளன. பாராளுமன்றமும் அரசியலமைப்பை மீறி இருக்கின்றன. ஆனால் உலகில் நன்நடத்தை மிக்க நாடுகள் தம் அரசியலமைப்பை மிக உயர்வான  ஒன்றாகவே கருதி செயற்படுகின்றன. எனினும் அரசியலமைப்பு மீறப்படுவதை கூட்டு மனித படுகொலையை விடவும் பயங்கரமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அரசியலமைப்பை மீறும் செயல் அன்றாடம் இடம்பெற்ற போதிலும் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்காத சாதாரண விடயமாகவே உள்ளது. இந்நாட்டு அரசியல்வாதிகளும் சமூகத்தினரும் தான் இந்நாட்டை இந்நிலைக்கு உள்ளாக்கின்றனர். உதாரணமாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மிக முக்கிய விடயம் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற முடியாது என்பதாகும். அவ்வாறு கட்சி மாறினால் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதாகும். எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதனை மீறினார்.  அதற்கு முன்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்திலும் அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்றன.

அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பிரதம நீதியரசர் வெளியேற்றப்பட்ட விதம் முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இவ்வாறான நெருக்கடிகள் உருவாவது தொடர்பிலும் ஜனநாயகம் தொடர்பிலும் மக்கள் மத்தியில் காணப்படும் குறைந்த அறிவும் புரிந்துணர்வின்மையுமே இவற்றுக்கு காரணமாக அமைகின்றன. இவ்வாறான நிலைமைக்கு நாடு உள்ளாக அவ்வாறான ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் மக்களும் காரணகர்த்தாக்களாக உள்ளனர். அதனால் இவ்வாறான நற்பண்புகளற்ற நிலைமைகள் நாட்டில் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.

சட்டம் பிழையாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் உள்ளனர் என்பது வெளிப்பட்டது

பேராசியர் சந்ரகுப்த தேனுவர

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryநாம் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கினோம். என்றாலும் அரசாங்கத்தின் தலைவரே அரசியலமைப்பை மீறி யாப்புக்கு எதிராக செயற்பட்டு பிரதமரை நீக்கினார். அவர் மக்களின் வாக்கின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதமராவார். இதனை அரசியல் கலாசாரம் எதிர்கொள்ளும் சவாலாகவே நான் பார்க்கின்றேன். அதேநேரம் இது தொடர்பில் நியாயத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற தேவை மக்களிடம் எவ்வளவு தூரம் இருந்தது என்பதையும் எம்மால் காண முடிந்தது. இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் பலவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. அவ்வாறு செயற்பட்டதன் விளைவாக நீதித்துறையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியது. அத்தோடு சுயாதீன நீதித்துறையையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விடயத்தைப் பாராளுமன்றம் மேற்கொண்டது.

இதன் பயனாக முதற்தடவையாக கடமையாற்ற தடை விதிக்கப்பட்ட பிரதமராகவும் பாராளுமன்ற குழுவாகவும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் உள்ளாகினர். இது சட்டத்தை பிழையாகப் பாவிப்பதற்கு எதிராக மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.  சட்டத்திற்காகப் போராடிய தரப்பினர் தமது பலத்தை உரசிப்பார்க்க இதனூடாக வாய்ப்பு கிடைத்தது. அது வெற்றிக்கும் இட்டுச்சென்றது. இந்நிகழ்வுகளை ஒரு வருடம் முடிந்துள்ள இந்நிலையில் திரும்பிப் பார்க்கும் போது அவ்வாறான துரதிஷ்டகர நிகழ்வுகளும் மோசமான அனுபவங்களும் நாட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் நினைவுக்கு வருவதைப் போன்று அதற்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றமை மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான சூழ்ச்சிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது

பேராசிரியர் ஜயதேவ உயங்கொட

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஓக்டோபர் 26ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வோடு நாடு சீரழிந்தது. அந்த 52நாட்களில் நாடே சீரழிவு நிலைமையை அடைந்தது. என்றாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்போடு மீண்டும் ஜனநாயகம் வெற்றி பெற்றது. அதன் ஊடாக தோற்றம் பெற்ற ஜனநாயக அரசியல் விவாதத்தை உரிய முறையில் பாவிப்பதற்கு ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்ட தரப்பினரால் வெற்றி பெற முடியாமல் போனது. எனினும் இலங்கையில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. அச்சூழ்ச்சியினால் ஏற்பட்ட பின்னடைவு நிலையோடு ஜனநாயகத்திலும் பின்னடைவைக் காண முடிந்தது. அதனை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவதானம் தற்போதைய ஆளும் தரப்பினரிடம் குறைவடைந்துள்ளது. ஜனநாயகத்தில் பின்னடைவைப் போன்று அதிகாரிகள் வாதமும் மேலெழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்போடு நீதித்துறை அரசியலமைப்பை பாதுகாத்ததாக எமக்கு விளங்கியது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறலாம். எவர் வென்றாலும் தோற்றாலும் அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடுகளைப் பாவித்து பல்வேறு தரப்பினரும் இவ்வாறான சூழ்ச்சிகளில் மீண்டும் மீண்டும் ஈடுபட முடியும். அதனால் எதிர்வரும் தேர்தலில் எவர் வென்றாலும் தோற்றாலும் அரசியலமைப்பிலுள்ள குறைபாடுகள் காரணமாக மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம்.

ஆகவே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாதிருக்கக்கூடிய வகையில் யாப்பில் சீரமைப்பை ஆட்சிக்கு வருபவர் முன்னெடுப்பாராயின் அதுவே நல்லது.

சுதந்திரத்திற்கு பின் ஜனநாயகத்தில் இருண்ட 52 நாட்கள்

புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஎமது நாட்டில் இடம்பெறவிருந்த பெரும் பேரழிவிலிருந்து நாட்டைப் பாதுகாத்த நிகழ்வுகளாக ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னரான நிகழ்வுகளை நான் நோக்குகின்றேன். என்றாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாம், நாடு என்ற வகையில் இன்னும் முகம் கொடுக்கின்றோம். அந்த 52நாட்களிலும் நாடு சென்ற இருண்ட பாதை எவ்வாறானதென்று குறிப்பிடுவதாயின் அது விலைமதிக்க முடியாத நஷ்டமாகும். இந்த சூழ்ச்சியின் பின்னர் அரச கட்டமைப்பு செயலிழந்தது. அதன் ஊடாக நாடு சீரழிந்தது. பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது. இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வந்த ஜனநாயக அரசியல் முறைமை முழுமையாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற பயங்கர அரசியமைப்பு சூழச்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

1963இல் இவ்வாறான அரச விரோத சூழ்ச்சியொன்று முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டதால் அந்த சூழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதன் விளைவாக எவ்வித பின் விளைவுகளும் ஏற்படவில்லை. ஆனால் இந்த சூழ்ச்சியின் ஊடாக ஜனநாயகத்தில் பெரும் கறைபடிந்தது. அத்தோடு நாட்டின் பொருளாதாரமும் பின்னடைவுக்கு உள்ளானது. சுதந்திரத்தின் பின்னரான ஜனநாயகம் ஏழு தசாப்தங்களை கடந்துள்ள போதிலும் இந்த 52நாட்களையும் நான் இருண்ட நாட்களாகவே நோக்குகின்றேன். நீதிமன்றம் அரசியலமைப்பை பாதுகாத்தது. அதன் மூலம் சூழ்ச்சியை தோற்கடிக்க முடிந்தது. என்றாலும் அதன் பின்னர் இதிலிருந்து மீட்சி பெற முடியாதுள்ளது. இவ்வாறான ஒன்றை ஜனநாயக நாடொன்றில் மேற்கொண்டால் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அது இங்கு இடம்பெறவில்லை. அது ஒரு குறைபாடாகும். 

நீதித்துறை தொடர்பான நம்பிக்கை உறுதியானது

ஊடகவியலாளர் கபில எம். கமகே

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஇந்த சம்பவத்தை அசிங்கமான அரசியல் காரணமாக ஏற்பட்டதாகவே நான் பார்க்கின்றேன். பொதுவாக அரசாங்கம் ஒன்றின் அதிகாரம் சட்டப்படி ஜனநாயக முறையில் தான் மாற்றப்படும். ஆனால் இங்கு வேறுவிதமாகவே ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. அரசியல்வாதிகளுக்கு சட்டம் குறித்த தெளிவு கிடையாது. அந்த தெளிவின்மை காரணமாக அவர்கள் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றனர். என்றாலும் நீதிமன்றம் அவர்களுக்கு சட்டம் இது தான் என தெளிவுபடுத்தியது. நீதித்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனத்தன்மையின் பிரதிபலனாவே நான் அத்தீர்ப்பை பார்க்கின்றேன். நீதித்துறை சுயாதீனத்தன்மையை நாம் பாராட்ட வேண்டும். ஜனநாயக நாடொன்றில் அதனை மிகவும் சிறந்த தீர்மானமாக நோக்க முடியும். அத்தீர்ப்பின் ஊடாக நீதித்துறை தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது ஜனநாயக ரீதியிலான தீர்ப்பாகும். அதனால் இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாதிருக்க முழு சமூகமும் பொறுப்பாக இருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன்.

(தினகரன்)

Comment (0) Hits: 31

ஜனாதிபதி மைத்திரி ஆட்டத்திற்கு தயார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா நடுநிலை அரசியிலிருந்து விடுபட்டு ஜனாதிபதி தேர்தல் மேடையில் ஏறுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் சிங்கள இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு இம்மாதம் 28ம் திகதி நாடு திரும்ப உள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை வழங்கி, அரசியல் பிரசார மேடையில் ஏறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு அறிக்கைகள் சில ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும், அவைகளையும் கவனத்திற் கொண்டு தான் ஆதரவளிக்கப் போகும் வேட்பாளர் யார்? என்பதையும் தீர்மானித்து விட்டதாகவும் அவர் தொடர்ந்து  கூறினார்.

இதனடிப்படையில், அடுத்த வாரத்தில் ஜனாதிபதி தோ்தல் பிரசார மேடைகளில் ஏறுவது உறுதியானது என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான அந்த பிரமுகர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில், ஜனாதிபதி சுயாதீனமாக இருக்கப் போவதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் பிரதானிகள் கூறியிருந்த போதிலும் ஜனாதிபதி, அந்த தீர்மானத்தை தற்போது மாற்றிக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

Comment (0) Hits: 22

கோட்டாபாயவைப் பாதுகாப்பதற்கு ஞானசார தேரர் களத்தில்...

நான் இரண்டில் ஒன்றை நல்ல முறையிலோ அல்லது கூடாத முறையிலோ தீர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் அதற்காக இந்நாட்டு மக்கள் தயார்” என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  நாவல வீதி, ராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்மராஜித விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமேந்திரன் உள்ளிட்ட குழுக்களுக்கு  இனிமேலும் அடிபணிய முடியாது என்றும், அவர்கள் விதைக்கும் தீவிரவாதத்தை நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ துரிதமாக ஒழிக்க வேண்டும் என்றும், தற்போது அரசாங்கத்தினுள் மற்றொரு அரசும், சட்டத்தின் உள்ளே மற்றொரு சட்டமும் உள்ளது என்றும், இந்நிலையினை மாற்றுவதற்கு நாட்டு மக்கள் அடுத்த மாதத்தில் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் அவர் இதன் போது கூறினார்.

கடந்த தேர்தல்களின் போது ராஜபக்ஷக்களுக்கு பகிரங்கமாகவே ஆதரவைத் தெரிவித்த பொதுபல சேனா அமைப்பு, இம்முறை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் மௌனமாக இருந்து வந்ததோடு, நேற்றிலிருந்து மீண்டும் களத்திற்கு வந்திருப்பது மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பின்னடைவுக்கு உள்ளாகியிருப்பதன் காரணமாகவே என அவ்வமைப்பின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.

Comment (0) Hits: 67

ஆணையிறவிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபயவுக்கு விவாதத்திலிருந்து தப்பிச் செல்வது ஆச்சரியமானதல்ல - மங்கள!

தன்னுடன் நேருக்கு நேர் நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவினால் விடுக்கப்பட்ட சவாலை நிராகரித்து மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தப்பிச் செல்வது ஆச்சரியமான விடயமல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அந்த ட்வீட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவாது,

“அன்று பிரபாகரன் அனைத்து யுத்தங்களினதும் தாய் எனக் கருதிய ஆணையிறவு சண்டை ஆரம்பித்து ஒரு வாரத்தினுள் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய, சஜித்தின் விவாத அழைப்பை தவிர்த்து தப்பிச் செல்வது ஆச்சரியமான ஒன்றல்ல. காரணம் அவர் அன்றும் இன்றும் பயத்தினால் தப்பி ஓடுவதேயாகும்”

சஜித்தின் சவால்!

தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் ட்வீட்டர் பதிவொன்றை வெளியிட்டு பின்வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்,

“எமது கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேசுவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நான் நேருக்கு நேர் மோதும் தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். பலமிக்க வேட்பாளராயின் எதிர்த்தரப்பினருடன் ஒரே மேடையில்  கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு எவ்வித அச்சமும் இருக்கக் கூடாது”

Comment (0) Hits: 25

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பயணத் தடை நீக்கம்!

பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு செல்வதை தவிக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலியாக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு இலங்கைக்கு செல்வதற்கு பயணத்தடை விதித்திருந்த நிலையில், பின்னாட்களில் அவை படிப்படியாக நீக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்று கடந்த திங்கட்கிழமையுடன் ஆறு மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதித்த பயணத்தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.
 
கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தி அண்மையில் ருவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, குறித்த ருவீட் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comment (0) Hits: 18

கோட்டாபய ஆபத்தானவர் என்பதை விளங்கிக் கொண்டனர் : ஜயம்பதி சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம்!

இலங்கையின் ஜனநாயகத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவினாலும், அவருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படைவாத சக்திகளினாலும் தோன்றியிருக்கும் தெளிவான ஆபத்தைக் கருத்திற் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு அதிகூடிய வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு தமது கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரான  ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தேசிய அமைப்பாளர் பதவியை வகிக்கும் ஐக்கிய இடதுசாரி முன்னணி இதற்கு முன்னர்  தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களித்து கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு கூடிய வாய்ப்புள்ள வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கினை வழங்குவதற்கு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும் அண்மையில் (23) கூடிய அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கீழ் வரும் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

“இலங்கையின் ஜனநாயகத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷவினாலும்,  அவருக்குப் பின்னாலிருக்கும் அடிப்படைவாத சக்திகளாலும் தோன்றியிருக்கும் தெளிவான ஆபத்தைக் கருத்திற் கொண்ட ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு, கோட்டாபய ராஜபக்ஷவைத் தோற்கடிக்கக் கூடிய அதிக வாய்ப்புள்ள அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய இடதுசாரி முன்னணியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கட்சி ஆதரவாளர்களிடமும், நாட்டு மக்களிடமும் வேண்டுகோள் விடுப்பது" 

Comment (0) Hits: 24

CEYLON TODAY மற்றும் மவ்பிம பத்திரிகைகள் அஹிம்சாவின் புகைப்படங்களை திரிபுபடுத்தியுள்ளன!

"சிலோன் டுடே" (CEYLON TODAY) மற்றும் "மவ்பிம" ஆகிய பத்திரிகைகள் புகைப்படங்களை திரிபுபடுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் திரிபுபடுத்தப்பட்டவை என குறிப்பிடப்படுகிறது.
 
கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், செய்தி அறிக்கையிட்ட குறித்த ஊடகங்கள், புகைப்படத்தை திரிபுபடுத்தியுள்ளன.
 
நேற்றைய தினம் (23) இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
maubima p  
அஹிம்சா, தனது தந்தையின் புகைப்படத்தை ஏந்தியவாறு வெளியிட்ட புகைப்படமொன்றை எடுத்து, அதில் தந்தையான லசந்தவின் புகைப்படத்திற்கு பதிலீடாக அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
z p04 Ex Defence 
அஹிம்சாவின் செயற்பாடுகளில் சிலருக்கு முரண்பாடு இருந்தாலும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பான ஊடக ஒழுக்க நெறிகளுக்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில், செய்தி அறிக்கையிடுவது ஏற்புடையதல்ல.
 
கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாக அஹிம்சா தெரிவித்துள்ளார்.
 
வழக்கு எதனால் நிராகரிக்கப்பட்டது?
 
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் பல காரணங்களைக் கூறியுள்ளது.
 
சந்தேக நபர் இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக கடயைமாற்றியமை,
 
கோத்தாபயவின் இரட்டைக் குடியுரிiமை தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடுதல்,
 
லசந்த கொலையுடன் கோத்தாபய நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக முறைப்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தாமை,
 
வழக்கின் குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு பொருத்தமற்றது,
 
ஆகிய காரணிகளின் அடிப்படையில், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
அஹிம்சாவின் பதிவு!
 
“எனது தந்தையான லசந்த படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக போராடும் முயற்சியில் துக்ககரமான ஓர் தருணம் இதுவாகும். எனது தந்தை நடு வீதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார், செய்தி அறிக்கையிடுதலின் அடிப்படையில், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்வது அரச செயற்பாடாக கருதப்பட முடியாது. குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. நானும் எனது சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்தை தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
 
 twiter
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பதிவு!
 
மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டமை குறித்து, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
  
"கோத்தாபய ராஜபக்ஷ குற்றமற்றவர் என அமெரிக்க நீதிமன்றம் அறிவிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
 
sri lanka 50137250 
கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அரசாங்க அதிகாரி என்ற காரணத்தினால், அமெரிக்காவில் தண்டனையிலிருந்து தப்புதவற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
Comment (0) Hits: 30

மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, மேல் மாகாண கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
 
கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் பத்மபிரிய திசேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
 
நிலவும் காற்றுடன் கூடிய வானிலையை அடுத்து, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன், ஏனைய கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாகவும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comment (0) Hits: 26

ஒக்ரோபர் 26 சபாநாயகருக்கு கௌரவம்!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், ஜனநாயக விரோதமான முறையில் ராஜபக்ஷக்களினால் அபகரிக்கப்பட்டு இந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதியுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது.
 
இலங்கை  அரசியல் வரலாற்றில் மிகவும் இருண்ட நாளாக ஒக்ரோபர் 26 கருதப்படுகின்றது.
 
இந்த துரதிஸ்டவசமான தினத்தை நினைவு கூரும் வகையில், சில வெகுசன அமைப்புக்கள், பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நெருக்கடியான நிலைமைகளின் போது, திடசங்கற்பத்துடன் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய கௌரவிக்கப்படவுள்ளார்.
 
1948ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர், முதல் தடவையாக ஜனநாயக ரீதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்று சூழ்ச்சி மூலம் கவிழ்க்கப்பட்டிருந்தது.
 
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் போது, உயிரை பணயம் வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, இந்த இருண்ட 52 நாட்களை நினைவு கூரும் வகையில், சிவில் அமைப்புகள் சில நிகழ்வுகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. எதிர்வரும் 26ம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
 
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில்  அமர்த்தப்பட்டதன் மூலம், இலங்கையில் அரசியல்  அமைப்பில் கடுமையான சர்ச்சை நிலைமை உருவாகியிருந்தது.
 
அதிகார பேரசை காரணமாக ராஜபக்ஷக்கள், இந்த சூழ்ச்சித் திட்டத்தை முழு வீச்சுடன் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எவ்வாறெனினும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு பத்து தடவைகள் சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி மைத்திரி கோரிய போதிலும், அதனை அவர் நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comment (0) Hits: 32

கோத்தாபய ஆட்சிக்கு வந்தால் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளர்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் ஓய்வு பெற்றுக்கொண்ட லெப்டினன் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தப்படுவார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
தம்மை பாதுகாப்புச் செயலாளர் பதவியில் அமர்த்துவதாக கோத்தாபய உறுதியளித்துள்ளார் என தமக்கு நெருக்கமான சில வர்த்தகர்களிடம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
 
கோத்தாபய முன்னாள் படைவீரர்களை பயன்படுத்தி, ஒர் வலையமைப்பினை உருவாக்க உள்ளதாகவும், அவர் பதவிக்கு வந்தால் கமல் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Comment (0) Hits: 29

பக்கம் 10 / 66