V2025

செய்தி

மைத்திரிக்காக வெளியேற்றப்பட்ட பௌஸி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேசிய பட்டியலினூடாக பாராளுமன்றத்திற்கு நியமிப்பதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியலினூடாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.எச்.எம்.பௌசியின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது..

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (21) இரவு நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்ட காரணத்தினால் இவ்வாறு கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதாகவும் கட்சியின் இந்த தீர்மானம் குறித்து நாடாளுமன்றிற்கும், தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்படுமெனவும் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

Comment (0) Hits: 63

முக்கிய குற்றங்கள் தொடர்பில் மர்மங்களை துலக்கிய CID அதிகாரிக்கு அதிரடி மாற்றம்!

இலங்கையின் மிக அனுபவம் மிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, அந்த பதவியில் இருந்து நீக்கி, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 62

மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள இணையவழி மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை மத்திய வங்கியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் என்பவற்றை மையப்படுத்தி இந்த நிதி மோசடி முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் இலகு கடன் வழங்கப்படுவதாக தெரிவித்து மக்களை அணுகுவதாக தெரியவருகிறது.

அத்துடன் அவர்கள் வங்கிக் கணக்கு விபரங்கள், கடனட்டை மற்றும் முற்கொடுப்பனவு அட்டைகளின் தொடரிலக்கம் மற்றும் இரகசிய இலக்கம் என்பவற்றை கோரி மோசடியில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இது குறித்து அவதானமாக இருக்குமாறு மக்களை இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment (0) Hits: 54

15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 15 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, தேசிய கொள்கைகள், புத்தசாசனம், நகர அபிவிருத்தி, கலாசாரம், வீடமைப்பு, நீர் வழங்கல் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

1. நிமல் சிறிபால டி சில்வா :  நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு
2. ஆறுமுகம் தொண்டமான் : சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு
3. தினேஷ் குணவர்தன :  வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி,  வெளிநாட்டு தொழில் துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
4. டக்ளஸ் தேவானந்தா : கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி
5. பவித்ராதேவி வன்னி ஆராச்சி : மகளிர், சிறுவர், சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சு
6. பந்துல குணவர்தன: தகவல் தொடர்பாடல், உயர்கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம்
7. ஜனக பண்டார தென்னகோன் : பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சிமன்ற அமைச்சு
8. சமல் ராஜபக்ஷ : மகாவலி, நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு, பாவனையாளர் நலன் அமைச்சு
9. டளஸ் அளகப்பெரும : கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு
10. ஜோன்ஸ்டன் பெனாண்டோ : வீதி மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு
11. விமல் வீரவங்ச : சிறிய மற்றும் நடுத்தர தொழில் அபிவிருத்தி மற்றும் கைத்தொழில், வளங்கள் முகாமைத்துவ அமைச்சு
12. மஹிந்த அமரவீர : பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு
13. எஸ். எம். சந்திரசேன : சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள்,  காணி அபிவிருத்தி அமைச்சு
14. ரமேஷ் பத்திரண : பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும்  ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சு
15. பிரசன்ன ரணதுங்க : கைத்தொழில், ஏற்றுமதி முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு

Comment (0) Hits: 59

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் மங்கள - கட்சி அரசியலை விட்டு விலகி புதிய அரசியல் பயணத்துக்கு தயார்!

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து தோல்வியை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, இன்று உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைத்து விட்டு நண்பர் ஒருவரின வீட்டில் குடியேறியுள்ளார்.

இனிவரும் காலத்தில் கட்சி அரசியலில் இருந்து விலகி முழு இலங்கை மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க மங்கள சமரவீர தீர்மானித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிடக் கூடிய, ஐக்கிய தேசிய முன்னணியின் தகுதியான நபர் சஜித் பிரேமதாச என தீர்மானித்து, அதற்காக கட்சிக்குள் போராட்டங்களை நடத்திய மங்கள சமரவீர, தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு செயற்பட்டு வந்தார்.

எனினும் தேர்தல் தோல்வியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மங்கள சமரவீர மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு மங்கள சமரவீரவே பொறுப்புக் கூற வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க மற்றும் தயா கமகே ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த கூட்டத்தில் மங்கள சமரவீர கலந்துக்கொள்ளவில்லை.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து மங்கள சமரவீர வெளியிட்ட சில கருத்துக்களால், சிங்கள பௌத்த சமூகம் ஆத்திரமடைந்ததாகவும் அது இந்த தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது என முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

Comment (0) Hits: 64

மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்!

ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் (21) தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இந்த பொது மக்கள் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பு வொக்ஷால் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.

Comment (0) Hits: 58

ஊழல் மோசடி வழக்கிலிருந்து ஜனாதிபதி விடுதலை!

டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மானத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில், அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும், இந்நாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் முதல் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கினை முடிவுறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து ஜனாதிபதியை விடுவிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (21) அறிவித்துள்ளது.

சம்பத் அபயகோன், சம்பத் விஜயரட்ன மற்றும் ஜனகீ ராஜரட்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வழக்கினை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

அரசியல் அமைப்பின் 35(1) சரத்தின் பிரகாரம், நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றில் சிவில் அல்லது குற்றவியல் வழக்கு ஒன்றை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்ற அடிப்படையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கிக் கொண்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய ஏனையவர்களுக்கு எதிராக எடுக்கப்பட உள்ள நடவடிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

Comment (0) Hits: 56

யட்டியாந்தொட்டை தாக்குதல் சம்பவம்; ஐரோப்பிய ஒன்றியக் குழு விஜயம்!

கேகாலை, யட்டியாந்தொட்டை, கனேபல்ல தோட்ட மக்கள் மீது  தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிந்துகொள்வதற்காக  ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியாந்தொட்டை கனேபல்ல தோட்டம்  மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது  (18) தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில், குறித்த  சம்பவத்தின் உண்மையை தெரிந்துகொள்வதற்கு  ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரடி  விஜயம்  ஒன்னினை  இன்று (21) மேற்கொண்டதுடன் மக்களிடம் நிலமையை ஆராய்ந்து, அறிக்கை ஒன்றினை பெற்றுச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 71

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக சற்றுமுன்னர் (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 3.00 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 45

புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி 6 மாகாணங்களுக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம் பின்வருமாறு,

மேல் மாகாணம் - டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் - லலித் யு. கமகே
ஊவா மாகாணம் - ராஜா கொல்லூரே
தென் மாகாணம் - டொக்டர். வில்லி கமகே
வடமேல் மாகாண - ஏ.ஜே.எம். முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் - டிகிரி கொப்பேகடுவ

Comment (0) Hits: 49

பாணின் விலையில் மாற்றம் இல்லை!

பாணின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 ரூபாவால் மீண்டும் குறைக்கப்பட்டு பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி (வெதுப்பக) உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலையை குறைப்பதாக ப்ரீமா மற்றும் செரன்டிப் ஆகிய கோதுமை மா நிறுவனங்கள் எழுத்து மூலம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் (21) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் நேற்று நள்ளிரவு முதல் பாணின் விலையை 5 ரூபாவால் தற்காலிகமாக அதிகரிக்க திர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comment (0) Hits: 57

தமிழர் மீது ஏன் இந்த அடாவடித்தனம்?

மரத்தில் இருந்து விழுந்­த­வனை மாடு மிதித்­தது போலத் தான் இன்­றைய தமி­ழர்­களின் நிலைமை ஊசலாடுகி­றது. ஆண்ட தமி­ழினம் என்ற வீர வலாற்றை கொண்ட எம்­மினம், இன்று அடி­மை­க­ளா­கவும் உடமை­களை இழந்­த­வர்­க­ளா­கவும் அடிப்­படை உரி­மை­க­ளுக்கே மற்­ற­வர்­க­ளிடம் கையேந்­து­ப­வர்­க­ளா­கவும் மாறி­யி­ருப்­பது காலத்தின் கொடு­மை­யாகும்.

நேற்று முன்­தினம் இரவு கேகாலை எட்­டி­யாந்­தோட்டை கனே­பொல தோட்­டத்தில் பதி­வான சம்­ப­வமே, இன்று தமிழ் மக்­க­ளி­டத்தில் இவ்­வா­றான எண்­ணங்­க­ளையும் ஆதங்­கத்­தையும் மனக்­க­வ­லையையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

வாக்­கு­ரிமை என்­பது ஜன­நா­ய­கத்தின் ஆணிவேர். வாக்­கு­ரிமை என்­பது ஜன­நா­யக உரிமை. வாக்­கு­ரிமை என்­பது முறை­கே­டா­ன­வர்­களை தண்­டிக்கும் ஆயுதம். வாக்­கு­ரிமை என்­பது ஒரு பிரம்­மாஸ்­திரம். ஒரு ஆட்­சி­யா­ளரின் தலை­யெ­ழுத்தை மாற்றும் சக்தி இந்த வாக்­கு­ரி­மைக்கு உள்­ளது. இவ்­வாறு வாக்­கு­ரி­மையின் அருமை பெரு­மையை நீட்­டிக்­கொண்டே செல்­லலாம்.

ஆனால்..! இந்த ஜன­நா­யக உரி­மையை பயன்­ப­டுத்­திய ஒரு அப்­பாவி இனத்தின் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­மை­யா­னது மிகவும் இழி­வுக்­கு­ரி­யதும் அதிர்ச்­சிக்­கு­ரிய செய­லுமாகும்.

நாட்டில் வாழும் ஏனைய இனத்­த­வர்கள் போன்றே கேகாலை, எட்­டி­யாந்­தோட்டை கனே­பொல தோட்­டத்தில் வசிக்கும் சிறு­பான்மை மக்­க­ளா­கிய இந்­திய வம்­சா­வ­ளியை சேர்ந்த மலை­யக மக்­களும் தமது வாக்­கு­ரி­மையை கடந்த 16 ஆம் திகதி பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

வெளி­யான உத்­தி­யோ­க­பூர்வ தேர்தல் முடி­வு­களின் அடிப்­ப­டையில், எட்­டி­யாந்­தோட்டை தேர்தல் தொகு­தியில் ஜனா­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தாபய ராஜ­பக்ஷ 32 ஆயி­ரத்து 753 வாக்­கு­களை பெற்று வெற்றி பெற்­றி­­ருந்தார். எதிர் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச 28 ஆயி­ரத்து 215 வாக்­கு­களை பெற்­றி­ருந்தார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் நேற்று முன்­தினம் கனே­பொல தோட்­டத்­துக்கு சென்ற குண்­டர்கள் சிலர் 'யாருக்கு வாக்­க­ளித்­தீர்கள்?" என துவே­சத்தை கக்கி அந்த மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

அடை மழை­யிலும் கடும் வெயி­லிலும் பாடு­பட்டு வியர்வை சிந்தி சிறிது சிறி­தாக சேர்த்து வைத்­தி­ருந்த அந்த தோட்­டத்து மக்­களின் உட­மை­க­ளையும் இந்த குண்டர்கள் தாக்­கி­ய­ழித்­துள்­ளனர்.

இந்த கொடூர சம்­பவம் தொடர்பில் அப்­பி­ர­தே­சத்தை சேர்ந்த பிர­தே­ச­வாசி ஒருவர் கருத்து பகிர்­கையில்,

'நாங்கள் பிர­பா­க­ர­னுக்கா வாக்­க­ளித்தோம்..? சிங்­கள பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த ஒரு­வ­ருக்கே வாக்­க­ளித்தோம். வாக்கையும் போட்டு உதை­யையும் வாங்­கு­கின்றோம். வீடு­க­ளுக்குள் புகுந்து ரிவி மற்றும் பொருட்­களை உடைத்­துள்­ளார்கள். எமக்கு ஏன் இந்த நிலைமை. எமக்­காக யாரும் குரல் கொடுக்க மாட்­டார்­களா?. கேட்க, பார்க்க யாரும் இல்லை.

இரு பொலிஸ்ஸார் வந்து சும்மா பார்த்து விட்டு சென்று விட்­டார்கள். அவர்கள் ஒன்றும் செய்­ய­வில்லை. எம்மை தாக்­கிய குண்­டர்கள் வீடு­களில் இருந்த இளம் யுவ­தி­க­ளையும் தள்­ளிவிட்டு சென்­றார்கள். இந்த நிலைமை எமக்கு தேவை தானா? என மனக் கவ­லை­யுடன் ஆதங்­கப்­பட்டார்.

இதே­வேளை அங்­கி­ருந்த தாய்­மார்கள் ஆதங்­கத்­துடன் கருத்­துக்­களை பகிர்ந்­தனர். 'இதுவே கடைசித் தருணம். இதற்கு மேல் யாருக்கும் ஓட்டுப்போடப் போவ­தில்லை. யாருமே எம்­மிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம். இன்றே ஓட்டு லிஸ்ட்டை எல்­லோரும் கிழித்து விடுவோம். ஓட்டு போட்டு அடி­வாங்­கு­கின்றோம்.

எமக்கு சம்­பள உயர்வு தரு­கின்றேன் என்றார். அதற்­காக தான் தோட்டத் தொழி­லாளர் என்ற அடிப்ப­டையில் அவ­ருக்கு ஓட்டு போட்டோம். நாங்கள் ஏற்­க­னவே பாம்பு, அட்டை, குள­வி­க­ளிடம் கடி வாங்கி கஷ்­டப்­பட்டு உழைத்து வாழ்­கின்றோம். ஓட்டு போட்டு இவர்­க­ளிடம் அடி­வாங்க வேண்­டுமா? இதுவா எங்கள் தலை­விதி? இந்த நாட்டில் எமக்­கென ஒரு உதவி கிடைப்­பதில்லை. அடிப்­ப­தற்கு மாத்­திரம் வரு­கி­றார்கள்" என்­றனர்.

இந்த மக்­களின் கோபம் ஆதங்­கம் கலந்த மன­வே­த­னை­யு­ட­னான கேள்­வி­க­ளுக்கு யார் பதி­ல­ளிக்கப்போகின்­றார்கள். அந்த மக்­களின் பாது­காப்­புக்கு யார் பொறுப்புக்கூறப்போகின்­றார்கள்.வாக்­க­ளித்­த­மைக்­காக அடி­வாங்­கிய இனம் என்ற கறுப்பு புள்­ளியை உலக வர­லாற்­றில் இலங்கை மாத்­திரம் கொண்­டி­ருக்க போகின்­றது என்­பது கசப்­பான உண்­மை­யாகும்.

எனவே ஒரு நாட்டின் தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­ன­தாக நாட்டில் வாழும் சாதா­ரண ஒரு குடி மகனின் பாது­காப்பை நாட்டின் ஆட்­சி­யா­ளர்கள் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

பாது­காப்பு, பாதுகாப்பு என்று வாய்கிழிய பேசுவதால் மாத்திரம் ஒன்று நடப்பதில்லை. அதற்கான ஏற்பாடுகளை சகல இடங்களிலும் இனப்பாகுபாடு இன்றி முன்னிறுத்த வேண்டும்.

மேலும் ஆட்சியாளர்கள் இனவாதம், துவேசம் என்பவற்றுக்கு அப்பால் நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை சமூகத்தை இணைக்கும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் மீண்டும் ஒரு கறுப்பு சகாப்தத்துக்கு இலங்கை செல்ல நேரிடும் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

- எம்.டி. லூசியஸ்

 
Comment (0) Hits: 51

மனோ கணேசனுக்கும் லக்ஷ்மன் கிரி­யெல்லவுக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் - காரணம் இதுவா?

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் நேற்று (20) நடை­பெற்ற அமைச்­சர்கள் மற்றும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில், மனோ கணே­ச­னுக்கும் லக்ஷ்மன் கிரி­யெல்­ல­வுக்­கு­மி­டையில் கடும் வாக்­கு­வதாம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தக் கூட்­டத்­தின்­போது ஐக்­கிய தேசியக் கட்சி, கண்­டியில் தோல்வி அடைய மத்­திய அதி­வேக வீதி நிர்மாணத்தில் ஏற்­பட்ட தாம­தமே கார­ண­மென அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இத­னை­ய­டுத்து லக்ஷ்மன் கிரி­யெல்­லவின் கருத்தை நிரா­க­ரித்த அமைச்சர் மனோ கணேசன், மத்­திய அதி­வேக வீதி நிர்­மாண தாமதம் தோல்­விக்குக் கார­ண­மல்ல என்றும் நீங்கள் கண்­டியில் தேர்தல் பிர­சாரப் பணி­களில் முறை­யாக ஈடு­ப­டா­ததுதான் தோல்­விக்கு காரணம் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

இத­னை­ய­டுத்து இரண்டு பேருக்­கு­மி­டையில் கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தான் கண்டி மாவட்­டத்தில் அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் ஒழுங்­கான முறையில் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்த­தா­கவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எனினும், தேர்தல் முடி­வு­களின் பின்னர் மலை­யகப் பகு­தி­களில் தமிழ் மக்கள் தாக்­கப்­ப­டு­வ­தா­கவும் அது குறித்தும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் மனோ கணேசன் இதன்­போது தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இதே­வேளை, தோட்­டப்­ப­கு­தி­களில் தமி­ழர்கள் தாக்­கப்­ப­டு­வது தொடர்பில், உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற அனுமதிக்கக் கூடாது என்றும் அமைச்சர் மனோ கணேசன் இந்தக் கூட்டத்தின்போது வலியுறுத்தியிருக்கிறார்.

Comment (0) Hits: 63

வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை சிறுத்தைகளுக்காக அர்ப்பணிக்கவுள்ள சஜித்!

தனது வாழ்க்கையின் எஞ்சிய காலத்தினை சிறுத்தைகளுக்காக அர்ப்பணிக்கப் போவதாக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் கருத்துப் பதிவு செய்துள்ள அவர்,

இலங்கையில் சிறுத்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ப்ரோஜெக்ட் லியோபொர்ட் என்னும் திட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Comment (0) Hits: 68

தெற்கு வில்லிக்கு,,, வடக்கு முரளி?

விலீ கமகே தெற்கு மாகாண ஆளுநராகாவும், முத்தையா முரளிதரன் வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட மாகாண ஆளுநர் பதவிக்கு முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட உள்ளதாக சில சமூகங்களிலும் இணைய தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், இந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் மறுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில், முரளிதரனை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நீண்ட காலமாக மக்களுக்கு சேவைகளை ஆற்றி வருவதாகவும், பதவிகளைப் பெற்றுக் கொண்டுதான் சேவையாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 76

பொதுபல சேனா அமைப்பு குறித்து ஞானசார தேரரின் புதிய அறிவிப்பு! (காணொளி)

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் பின்னர், பொதுபல சேனா அமைப்பை கலைக்க போவதாக அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எமது நாட்டில் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாது என்ற மாயையான நிலைப்பாடு இருந்தது. ஜனாதிபதித் தேர்தலுடன் அது கட்டுக்கதையாக மாறியுள்ளது. தற்போது நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவம் கிடைத்துள்ளது.

எமது புதிய ஜனாதிபதி அவரது பதவியை பொறுப்பேற்றதை அடுத்து கருத்து தெரிவித்தபோது, பௌத்த சாசனத்தை பாதுகாப்பதாகவும், மாகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாத்தினாலேயே தாம் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இதுவே எமக்கு கிடைத்த பெரும் வெற்றி. இவ்வாறான தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்துள்ள நிலையில், நாங்கள் இனியும் சங்கங்களை அமைத்துக்கொண்டு செயற்பட வேண்டிய அவசியமில்லை. எமது புதிய தலைவர் நாட்டை பாதுகாப்பார் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. அதனால், எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், நாங்கள் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

பொதுத் தேர்தலின் பின்னர், சிறந்த அமைச்சரவையுடன் சிறந்த பயணத்தை தொடர முடியும். 

ஆகவே, இனிமேல் எமது அமைப்பு அவசியமில்லை என நாங்கள் நம்புகிறோம். பொதுத் தேர்தலின் பின்னர், எமது அமைப்பை கலைத்து விடுவோம்" என ஞானசார தேரர் கூறினார்.

இதேவேளை, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிப்பிரமாணத்தின் பின்னரும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராக ஞானசர தேரோவும் கூறிய ஒரே கதை குறித்த காணொளி பினவருமாறு...

Comment (0) Hits: 59

இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், இன்றிரவு ஜனாதிபதி கோத்தாபயவை சந்திக்கவுள்ளார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜெய்ஷங்கர் சந்திப்பாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment (0) Hits: 52

'ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர்' - சம்பந்தன்!

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு  மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம் நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"கடத்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நிறைவடைந்துள்ளது. கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலை மிக நேர்த்தியாக நடாத்த துணைநின்ற தேர்தல் ஆணையாளர் மற்றும் அவரது பணிமனை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அனைத்து அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து நிருவாக மாவட்டங்களிலும் தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய வகையில், முன்னோடியான செய்தியைத் தனது தேர்தல் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்திய கருத்துக்களின் அடிப்படையில், சஜித் பிரேமதாசவுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர் .

எமது கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடாத, பிரிக்கமுடியாத இலங்கை நாட்டினுள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென்ற அடிப்படையில், தமிழ் மக்களை ஒருமித்து சஜித் பிரேமதாசவின் சின்னமான அன்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டிருந்தது. 

அதியுச்ச அதிகாரப் பகிர்வு தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக வழங்கப்பட வேண்டுமென்ற கருத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு, தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்புப் போன்ற பல்வேறு திசை திருப்பல்கள் காணப்பட்ட சூழலில், அவற்றுக்குச் செவிசாய்க்காது, எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாக அன்னத்துக்கு வாக்களித்து, இலங்கை ஆட்சியாளருக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் தமிழ் மக்கள் ஓர் உறுதியான செய்தியைக் கூறி இருக்கின்றனர். அதாவது, தமது உரிமை தொடர்பான வேட்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில், தாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

இந்த மக்களுக்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வாக்களிப்பில் காட்டிய ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என விரும்புகின்றேன்.

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற  ஜனாதிபதித் தேர்தலை விட இத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்களிப்பு வீதம் உயர்ந்துள்ளமை கருத்தில்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். திருகோணமலையில் 83% வீதமும், அம்பாறையில் 80% வீதமும், மட்டக்களப்பில் 77% வீதமும், வன்னியில் 73% வீதமும், யாழ்ப்பாணத்தில் 66.5% வீதமுமாக மக்கள் வாக்களித்திருப்பது நிறைவளிக்கின்றது.

புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென விரும்புகின்றேன். அவர், அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம், நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் என்னும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் அதன் மூலம், நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பாரிய முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைவர் என்பதையும் புதிய குடியரசுத் தலைவருக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ்மக்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது வேண்டுகோளுக்கமைய ஒற்றுமையாய் அன்னத்துக்கு வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comment (0) Hits: 62

பக்கம் 4 / 70